|
அத்தியாயம்-19
ஸ_ரத்து மர்யம்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
19:1. காஃப், ஹா, யா, ஐன், ஸாத்
19:2. (நபியே! இது) உம்முடைய இறைவன் தன்
அடியாராகிய ஜகரிய்யாவுக்கு அருளிய ரஹ்மத்தைப்
பற்றியதாகும்.
19:3. அவர் தம் இறைவனிடம் தாழ்ந்த குரலில்
பிரார்த்தித்த போது (இவ்வாறு ரஹ்மத்தை அருளினான்).
19:4. (அவர்) கூறினார்; ''என் இறைவனே! நிச்சயமாக
என் எலும்புகள் பலஹீனமடைந்து விட்டன என் தலையும்
நரையால் (வெண்மையாய்) இலங்குகிறது. என் இறைவனே!
(இதுவரையில்) நான் உன்னிடம் செய்த
பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப்
போய்விடவில்லை.
19:5. ''இன்னும், எனக்குப் பின்னர் (என்)
உறவினர்களைப்பற்றி நிச்சயமாக நான் அஞ்சகிறேன்;
மேலும், என் மனைவியோ மலடாக இருக்கிறாள்; ஆகவே,
நீ உன் புறத்திலிருந்து எனக்கு ஒரு வாரிசை
அளிப்பாயாக!
19:6. ''அவர் எனக்கு வாரிசாகவும் இருப்பார்,
யஃகூபுடைய சந்ததியினருக்கு வாரிசாகவும் இருப்பார்;
என் இறைவனே! அவரை (உன்னால்) பொருந்திக்கொள்ளப்
பட்டவராகவும் நீ ஆக்கி வைப்பாயாக!""
19:7. ''ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு
புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு
நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர்
கொண்டவரை நாம் ஆக்கவில்லை"" (என்று இறைவன்
கூறினான்).
19:8. (அதற்கு அவர்) ''என் இறைவனே! என் மனைவியோ
மலடாகவும், முதுமையின் தள்ளாத பருவத்தை நான்
அடைந்தும் இருக்கும் நிலையில் எனக்கு எவ்வாறு ஒரு
புதல்வன் உண்டாகுவான்?"" எனக் கூறினார்.
19:9. ''(அது) அவ்வாறே (நடைபெரும்) என்று
கூறினான். இது எனக்கு மிகவும் சுலபமானதே! முன்னர்
நீர் ஒரு பொருளாகவும் இல்லாதிருந்த காலத்து, நானே
உம்மை படைத்தேன்"" என்று இறைவன் கூறினான்.
19:10. (அதற்கவர்) ''என் இறைவனே! நீ எனக்கு ஓர்
அத்தாட்சியை (இதற்காக) ஏற்படுத்துவாயாக!"" என்று
வேண்டினார்; ''நீர் சவுக்கியத்துடன் இருக்கும்
நிலையிலேயே மூன்று இரவு(பகல்)கள் நீர் மக்களுடன்
பேச முடியாமலிருப்பீர்; (அதுவே) உமக்கு
அத்தாட்சியாகும்"" என்று கூறினான்.
19:11. ஆகவே அவர் மிஹ்ராபை (தொழும் இடம்) விட்டு
வெளியே தம் சமூகத்தாரிடம் வந்தார்; பின்னர்
அவர்களிடம் (பேச முடியாத நிலையில் சயிக்கினையாக)
அவர், ''காலையிலும், மாலையிலும் (அல்லாஹ்வைத்
துதித்து) தஸ்பீஹீ செய்யுங்கள்"" என்று
உணர்த்தினார்.
19:12. (அதன் பின்னர்) ''யஹ்யாவே! நீர்
இவ்வேதத்தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக்
கொள்ளும்"" (எனக் கூறினோம்) இன்னும் அவர்
குழந்தையாக இருக்கும் போதே அவருக்கு நாம் ஞானத்தை
அளித்தோம்.
19:13. அன்றியும் நாம் நம்மிடமிருந்து இரக்க
சிந்தனையும், பரிசுத்தத் தன்மையையும் (அவருக்குக்
கொடுத்தோம்) இன்னும் அவர் மிகவும்
பயபக்தியுடையவராக இருந்தார்.
19:14. மேலும், தம் பெற்றோருக்கு நன்றி
செய்பவராகவும் இருந்தார்; அவர் பெருமை
அடிப்பவராகவோ, (அல்லாஹ்வுக்கு) மாறு செய்பவராகவோ
இருக்கவில்லை.
19:15. ஆகவே, அவர் பிறந்த நாளிலும், அவர்
இறக்கும் நாளிலும், (மறுமையில்) அவர் உயிர்
பெற்றெழும் நாளிலும் அவர் மீது ஸலாம் (சாந்தி)
நிலைத்திருக்கும்.
19:16. (நபியே!) இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும்
நினைவு கூர்வீராக அவர் தம் குடும்பத்தினரை
விட்டும் நீங்கி, கிழக்குப் பக்கமுள்ள இடத்தில்
இருக்கும்போது,
19:17. அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக்
கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்;
அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரயீலை)
அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித
உருவில் தோன்றினார்.
19:18. (அப்படி அவரைக் கண்டதும்,) ''நிச்சயமாக
நாம் உம்மை விட்டும் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன்;
நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (நெருங்காதீர்)""
என்றார்.
19:19. ''நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்;
பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்"")
என்று கூறினார்.
19:20. அதற்கு அவர் (மர்யம்), ''எந்த ஆடவனும்
என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக
இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு
புதல்வன் உண்டாக முடியும்?"" என்று கூறினார்.
19:21. ''அவ்வாறேயாகும்; 'இது எனக்கு மிகவும்
சுலபமானதே மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும்,
நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை
ஆக்குவோம்; இது விதிக்கப்பட்ட விஷயமாகும்" என்று
உம் இறைவன் கூறுகிறான்"" எனக் கூறினார்.
19:22. அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார்
பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை
சென்றடைந்தார்.
19:23. பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை
அவரை ஒரு போPத்த மரத்தின்பால் கொண்டு வந்தது ''இதற்கு
முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப்
பட்டவளாகி இருக்கக் கூடாதா"" என்று
கூறி(அரற்றி)னார்.
19:24. (அப்போது ஜிப்ரயீல்) அவருக்குக்
கீழிருந்து ''(மர்யமே!) கவலைப்படாதீர்கள்!
உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு
சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்"" என்று
அழைத்து கூறினான்.
19:25. ''இன்னும், இந்த போPச்ச மரத்தின் கிளையைப்
பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்)
பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும்.
19:26. ''ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்)
பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த
மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், 'மெய்யாகவே
அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக
நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த
மனிதருடனும் பேச மாட்டேன்"" என்று கூறும்.
19:27. பின்னர் (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்து
கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார்; அவர்கள்
கூறினார்கள்; ''மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு
விபாPதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!""
19:28. ''ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட
மனிதராக இருக்கவில்லை உம் தாயாரும் நடத்தை
பிசகியவராக இருக்கவில்லை"" (என்று பழித்துக்
கூறினார்கள்).
19:29. (ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும் படி)
அதன் பால் சுட்டிக் காட்டினார்; ''நாங்கள்
தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப்
பேசுவோம்?"" என்று கூறினார்கள்.
19:30. ''நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக
இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக்
கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக
ஆக்கியிருக்கின்றான்.
19:31. ''இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன்
என்னை முபாரக்கினாவனாக (நற்பாக்கியமுடையவனாக)
ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன்
இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும்
(நிறைவேற்ற) எனக்கு வஸீயத் செய்து (கட்டளையிட்டு)
இருக்கின்றான்.
19:32. ''என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை
ஏவியிருக்கின்றான்;) நற்பேறு கெட்ட
பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை.
19:33. ''இன்னும், நான் பிறந்த நாளிலும், நான்
இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று
எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்""
என்று (அக்குழந்தை) கூறியது.
19:34. இ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா
(ஆவார்) எதைக் குறித்து அவர்கள் சந்தேகம்
கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே
ஆகும்).
19:35. அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும்
ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை அவன் தூயவன்;
அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், ''ஆகுக!""
என்று தான் கூறுவான்; (உடனே) அது ஆகிவிடுகிறது.
19:36. ''நிச்சயமாக அல்லாஹ்வே (படைத்துப்
பரிபக்குவப்படுத்தும்) என்னுடைய இறைவனாகவும்,
உங்களுடைய இறைவனாகவும் இருக்கின்றான்; ஆகையால்,
அவனையே நீங்கள் வணங்குங்கள்; இதுவே நேரான
வழியாகும்"" (என்று நபியே! நீர் கூறும்).
19:37. ஆனாலும், அவர்களிடையே இருந்த கூட்டத்தார்
இது பற்றி(த் தங்களுக்குள்ளே) அபிப்பிராய பேதங்
கொண்டனர். (சத்தியத்தை) நிராகரித்துக்
கொண்டிருப்பவர்களுக்கு, அவர்கள் யாவரும் ஒன்று
சேர்க்கப்படும் வலுப்பமான நாளில் கேடுதான்!
19:38. அவர்கள் நம்மிடத்தில் வரும் நாளில்
எவ்வளவு தெளிவாகக் கேட்பார்கள், பார்ப்பார்கள்!
எனினும் அந்த அக்கிரமக்காரர்கள் பகிரங்கமான
வழிகேட்டிலேயே இன்று இருக்கிறார்கள்.
19:39. மேலும், (நபியே!) தீர்ப்பு அளிக்கப்படும்
அந்த கைசேதப்படக்கூடிய நாளைக் குறித்து, நீங்கள்
அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!
எனினும் அவர்கள் அதைப்பற்றிக்
கவலைப்படாதவர்களாகவும், நம்பாதவர்களாகவும்
இருக்கின்றார்கள்.
19:40. நிச்சயமாக நாமே, பூமியையும் அதன்
மீதுள்ளவர்களையும் வாரிசாகக் கொள்வோம்; இன்னும்
நம்மிடமே (அனைவரும்) மீட்கப்படுவார்கள்.
19:41. (நபியே!) இவ்வேதத்தில்
இப்ராஹீமைப்பற்றியும் நினைவு கூர்வீராக!
நிச்சயமாக அவர் மிக்க உண்மையாளராகவும் -
நபியாகவும் - இருந்தார்.
19:42. ''என் அருமைத் தந்தையே! (யாதொன்றையும்)
கேட்க இயலாத, பார்க்க இயலாத உங்களுக்கு எந்த
தேவையையும் பூர்த்தி செய்ய இயலாததுமான ஒன்றை ஏன்
நீங்கள் வணங்குகிறீர்கள்?"" என்று அவர் தம்
தந்தையிடம் கூறியதை நினைவுபடுத்தும்.
19:43. ''என் அருமைத் தந்தையே! மெய்யாகவே
உங்களிடம் வந்திராத கல்வி ஞானம் நிச்சயமாக எனக்கு
வந்திருக்கிறது ஆகவே, நீங்கள் என்னைப்
பின்பற்றுங்கள்; நான் உங்களைச் செவ்வையான
நேர்வழியில் நடத்துகிறேன்.
19:44. ''என் அருமைத் தந்தையே! நீங்கள் ஷைத்தானை
வணங்காதீர்கள்; நிச்சயமாக ஷைத்தான்,
அர்ரஹ்மானுக்கு (அருள் மிக்க நாயனுக்கு) மாறு
செய்பவன்.
19:45. ''என் அருமைத் தந்தையே! நிச்சயமாக
அர்ரஹ்மானிடமிருந்துள்ள வேதனைவந்து உங்களைத்
தொட்டு, நீங்கள் ஷைத்தானின் கூட்டாளியாகி
விடுவதைப் பற்றி நான் அஞ்சுகிறேன்"" (என்றார்).
19:46. (அதற்கு அவர்) ''இப்றாஹீமே! நீர் என்
தெய்வங்களை புறக்கணிக்கிறீரா? நீர் (இதை விட்டும்)
விலகிக் கொள்ளாவிட்டால் உம்மைக் கல்லெறிந்து
கொல்வேன்; இனி நீர் என்னைவிட்டு
நெடுங்காலத்திற்கு விலகிப் போய்விடும்"" என்றார்.
19:47. (அதற்கு இப்ராஹீம்) ''உம்மீது ஸலாம்
உண்டாவதாக! மேலும் என் இறைவனிடம் உமக்காகப் பிழை
பொறுக்கத் தேடுவேன்; நிச்சயமாக அவன் என் மீது
கிருபையுடையவனாகவே இருக்கின்றான்"" என்று
கூறினார்.
19:48. நான் உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி
நீங்கள் பிரார்த்திப்பவற்றை விட்டும் விலகிக்
கொள்கிறேன்; மேலும் நான் என் இறைவனை
பிரார்த்தித்துக் கொண்டே இருப்பேன்; என் இறைவனைப்
பிரார்த்திப்பது கொண்டு நான்
நிர்ப்பாக்கியவானாகாமல் இருக்கப் போதும்"" (என்றார்).
19:49. (இவ்வாறு) அவர், அவர்களை விட்டும்,
அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ்
அல்லாதவற்றை விட்டும் விலகிக் கொண்டபோது,
இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அவருக்கு நாம்
நன்கொடையளித்தோம்; இன்னும் (அவர்கள்)
ஒவ்வொருவரையும் நபியாக ஆக்கினோம்.
19:50. மேலும் நாம் அவர்களுக்கு நம்
ரஹ்மத்திலிருந்தும் நன்கொடைகளையளித்தோம்;
அவர்களுக்கு உயர்ந்த நற்பெயரை நாம்
ஏற்படுத்தினோம்.
19:51. (நபியே!) இவ்வேதத்தில் மூஸாவைப் பற்றியும்
நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் மாசில்லாத (தூயவராக)
இருந்தார். அவர் ரஸ_லாகவும் நபியாகவும் இருந்தார்.
19:52. இன்னும், நாம் அவரை தூர் (ஸினாய்) மலையின்
வலப்புறத்திலிருந்து கூப்பிட்டோம்; மேலும்
இரகசியத்தில் பேச நாம் அவரை நம்மிடம் நெருங்கி
வரச் செய்தோம்.
19:53. மேலும், நம்முடைய ரஹ்மத்தில் நின்றும்
அவருடைய சகோதரர் ஹாரூனையும் நபியாக அவருக்கு
நன்கொடையளித்தோம்.
19:54. (நபியே!) இவ்வேதத்தில் இஸ்மாயீலைப்
பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர்
வாக்குறுதியில் உண்மையாளராக இருந்தார்; இன்னும்
அவர் தூதராகவும், நபியாகவும் இருந்தார்.
19:55. அவர் தம் குடும்பத்தினரைத் தொழுகையைக்
கடைப்பிடிக்கவும், ஜகாத்து கொடுத்து வரும்படியும்
ஏவுபவராக இருந்தார் தம் இறைவனிடத்தில் மிகவும்
விரும்பப்பட்டவராகவும் அவர் இருந்தார்.
19:56. (நபியே!) இவ்வேதத்தில் இத்hPஸைப்
பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர்
ஸித்தீக்காக (மிக்க சத்தியவானாக) நபியாக
இருந்தார்.
19:57. மேலும், நாம் அவரை ஓர் உயரிய இடத்தில்
உயர்த்தினோம்.
19:58. இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன்
(கப்பலில்) நாம் ஏற்றிக் கொண்டவர்களி(ன்
சந்ததியி)லும், இப்ராஹீமுடையவும், இஸ்ராயீல் (யஃகூபின்)
சந்ததியிலும், இன்னும் நாம் தேர்ந்தெடுத்து
நேர்வழியில் நடத்தியவர்களிலுமுள்ள
நபிமார்களாவார்கள் - இவர்கள் மீது அல்லாஹ்
அருளைப் பொழிந்தான்; அர்ரஹ்மானுடைய வசனங்கள்
அவர்களின் மீது ஓதப்பட்டால், அவர்கள்
அழுதவர்களாகவும், ஸ{ஜூது செய்தவர்களாகவும்
விழுவார்கள்.
19:59. ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட)
சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்;
அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான
மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்)
அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள்.
19:60. தவ்பா செய்து, (பாவங்களிலிருந்து விலகி)
ஈமான் கொண்டு, (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச்
செய்கிறார்களே அவர்களைத் தவிர அத்தகைய (ஸாலிஹான)வர்கள்;
(ஜன்னத்தில்) - சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்கள்;
(அவர்கள் அடைய வேண்டிய நற்பயன்) எதிலும்
அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது.
19:61. அத்னு என்னும் அந்தச் சுவனபதிகளை
அர்ரஹ்மான் தன் நல்லடியார்களுக்கு - அவற்றை
அவர்கள் காண முடியாத போதே - வாக்களித்தான்;
நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி நிறைவேறும்.
19:62. ஸலாம் (சாந்தி) என்பதைச் (செவியுறுவார்களே)
தவிர அச்சுவனபதிகளில் அவர்கள் வீணான எதையும்
செவியுற மாட்டார்கள்; இன்னும் அங்கே
அவர்களுக்குக் காலையிலும், மாலையிலும்
அவர்களுடைய உணவு இருக்கிறது.
19:63. இத்தகைய சுவர்க்கத்திற்கு நம்
அடியார்களில் தக்வா - பயபக்தி - உடையவர்களை நாம்
வாரிசாக்கிவிடுவோம்.
19:64. (மலக்குகள் கூறுகிறார்கள்; நபியே!) ''உமது
இறைவனின் கட்டளையில்லாமல் நாம் இறங்க மாட்டோம்;
எங்களுக்கு முன்னிருப்பதும், எங்களுக்கு
பின்னிருப்பதும், இவ்விரண்டிற்குமிடையில்
இருப்பது அவனுக்கே (சொந்தமாக) இருக்கின்றன உமது
இறைவன் ஒரு பொழுதும் மறப்பவனல்லன்.""
19:65. ''(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும், அவை
இரண்டிற்குமிடையே உள்ளவற்றிற்கும் இறைவனாக
இருக்கின்றான். ஆகையினால் அவ(ன் ஒருவ)னையே
வணங்குவீராக! மேலும், அவனை வணங்குவதில் (கஷ்டங்களையேற்றுப்)
பொறுமையுடன் இருப்பீராக! (பெயரில், வல்லமையில்,
மற்றும் தன்மைகளில் அல்லாஹ்வுக்கு) நிகரானவனை
நீர் அறிவீரா?""
19:66. (எனினும்) மனிதன் கேட்கிறான்; ''நான்
இறந்து போனால், உயிருள்ளவனாக மேலும்
எழுப்பப்படுவேனா? என்று.
19:67. யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை
நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன்
நினைத்துப் பார்க்க வேண்டாமா?
19:68. ஆகவே, (நபியே!) உம் இறைவன் மீது
சத்தியமாக நாம் அவர்களையும், (அவர்களுடைய)
ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர்ப்பித்து) ஒன்று
சேர்ப்போம்; பின்னர் அவர்களை(யெல்லாம்)
நரகத்தினைச் சூழ முழந்தாளிட்டவர்களாக
ஆஜராக்குவோம்.
19:69. பின்னர், நாம் ஒவ்வொரு
கூட்டத்திலிருந்தும் அர்ரஹ்மானுக்கு மாறு
செய்வதில் கடினமாக - தீவிரமாக - இருந்தவர்கள்
யாவற்றையும் நிச்சயமாக வேறு பிரிப்போம்.
19:70. பின்னர், அ(ந் நரகத்)தில் புகுவதற்கு
அவர்களில் (தங்கள் பாவத்தால்) முதல்
தகுதிவுடையவர்கள் யார் என்பதை நிச்சயமாக நாம்
அறிவோம்.
19:71. மேலும், அதனைக் கடக்காமல் உங்களில் யாரும்
(போக) முடியாது இது உம்முடைய இறைவனின் முடிவான
தீர்மானமாகும்.
19:72. அதன் பின்னர், தக்வாவுடன் - பயபக்தியுடன்
இருந்தார்களே அவர்களை நாம் ஈடேற்றுவோம்; ஆனால்,
அநியாயம் செய்தவர்களை அ(ந் நரகத்)தில்
முழந்தாளிட்டவர்களாக விட்டு விடுவோம்.
19:73. இன்னும் நம்முடைய தெளிவான வசனங்கள்
அவர்கள்முன் ஓதப்பெறும்போது முஃமின்களிடத்தில்,
(அவற்றை) நிராகரிக்க முயலும் காஃபிர்கள்; ''நம்
இரு வகுப்பாரில் இப்பொழுது யாருடைய வீடு
மேலானதாகவும், யாருடை சபை மிக அழகானதாகவும்
இருக்கிறது?"" என்று கேட்கின்றனர்.
19:74. இன்னும், இவர்களைவிட மிக்க அழகான
தளவாடங்களையும், தோற்றத்தையும் பெற்றிருந்த
எத்தனையோ தலைமுறைகளை இவர்களுக்கு முன் நாம்
அழித்திருக்கிறோம்.
19:75. ''யார் வழிகேட்டில் இருக்கிறார்களோ
அவர்கள் வாக்களிக்கப்பட்ட (இவ்வுலக) வேதனையை
அல்லது மறுமையை காணும்வரை அர்ரஹ்மான அவர்களுக்கு
அவகாசம் கொடுக்கிறான்; (அவ்வாறு காணும் போது)
எவருடைய வீடு கெட்டது எவருடைய கூட்டம் பலஹீனமானது
என்பதை திட்டமாக அவர்கள் அறிந்து கொள்வார்கள்""
என்று (நபியே!) நீர் கூறுவீராக.
19:76. ''மேலும், எவர் நேர்வழியில் செல்கிறார்களோ
அவர்களை அல்லாஹ் மேலும் மேலும் நேர்வழியில்
செலுத்துகிறான்; இன்னும் நிலைத்திருக்கக் கூடிய
நற்கருமங்கள் உம்முடைய இறைவனிடத்திலே சிறந்த
கூலியாகவும் சிறந்த தங்குமிடமாகவும் அமையும்.""
19:77. ''நம்முடைய வசனங்களை நிராகரித்துக் கொண்டு,
(மறுமையிலும்) நான் நிச்சயமாக, செல்வமும்,
பிள்ளையும் கொடுக்கப்படுவேன்"" என்று கூறினானே
அவனை (நபியே!) நீர் பார்த்தீரா?
19:78. (பின்னர் நடக்கவிருக்கும்) மறைவான
விஷயத்தை அவன் எட்டிப் பார்த்துத் தெரிந்து
கொண்டானா அல்லது அர்ரஹ்மானிடத்திலிருந்து
உறுதிமொழி (ஏதேனும்) பெற்றிருக்கிறானா?
19:79. அப்படியல்ல! அவன் சொல்வதை நாம் எழுதி
வருவோம்; இன்னும் நாம் அவனுடைய வேதனையை மேலும்
மேலும் அதிகமாக்குவோம்.
19:80. இன்னும் (தன் சொத்துக்கள் என்று அவன்
பெருமையடித்துப்) பேசிக் கொண்டிருப்பவற்றையும்
நாம் அனந்தரங் கொள்வோம்; (இவற்றையெல்லாம் விட்டு)
அவன் நம்மிடத்தில் தன்னந்தனியாகவே வருவான்.
19:81. (முஷ்ரிக்குகள்) தங்களுக்காக (அல்லாஹ்விடம்
மன்றாடுவதற்கு) வல்லமையுடையவையென்று
அல்லாஹ்வையன்றி (வேறு) தெய்வங்களை எடுத்துக்
கொண்டுள்ளார்கள்!
19:82. அப்படியல்ல! தங்களை இவர்கள் வணங்கியதையும்
நிராகரித்து இவர்களுக்கு விரோதமாக மாறிவிடுவீர்.
19:83. காஃபிர்களை (வழி கேட்டில் செல்லும்படித்)
தூண்டிக் கொண்டிருப்பதற்காகவே நிச்சயமாக
ஷைத்தான்களை நாம் அனுப்பியிருக்கிறோம் என்பதை
நீர் பார்க்க வில்லையா?
19:84. எனவே அவர்களுக்காக நீர் அவசரப்படாதீர்!
அவர்களுக்கு (வேதனைக்குரிய தவணையின்) கணக்கை நாம்
கணக்கிட்டுக் கொண்டுதானிக்கிறோம்.
19:85. அர்ரஹ்மானாகிய நம்மிடத்தில்
பயபக்தியுடையவர்களை நாம் கூட்டமாக ஒன்று
சேர்க்கும் நாளில்;
19:86. குற்றவாளிகளை (அவர்கள்) தாகம் தீர்த்துக்
கொள்வதற்காக நரகை நோக்கி நாம் விரட்டுவோம்.
19:87. அர்ரஹ்மானிடம் உடன்படிக்கை செய்து
கொண்டோரைத் தவிர, எவரும் ஷஃபாஅத்திற்கு -
மன்றாட்டத்திற்கு - அதிகாரம் பெற மாட்டார்கள்.
19:88. இன்னும், ''அர்ரஹ்மான் (தனக்கென) ஒரு
குமாரனை எடுத்துக் கொண்டுள்ளான்"" என்று அவர்கள்
கூறுகிறார்கள்.
19:89. ''நிச்சயமாக நீங்கள் அபாண்டமான (ஒரு
கூற்றைக்) கொண்டு வந்திருக்கிறீர்கள்.
19:90. இவர்களின் இந்தக் கூற்றினால் வானங்கள்
வெடித்து பூமி பிளந்து மலைகள் சிதறுண்டு விடும்
போதிலும்.
19:91. அவர்கள் அர்ரஹ்மானுக்கு ஒரு குமாரன்
உண்டென்று தாவாச்செய்வதினால்-
19:92. ஒரு குமாரனை எடுத்துக் கொள்வது
அல்லாஹ்வுக்குத் தேவையில்லாதது.
19:93. ஏனென்றால் வானங்களிலும், பூமியிலும் உள்ள
ஒவ்வொருவரும் அர்ரஹ்மானிடம் அடிமையாய்
வருபவரேயன்றி வேறில்லை.
19:94. நிச்சயமாக அவற்றையெல்லாம் அவன்
சூழ்ந்தறிகிறான்; இன்னும் அவற்றைத் துல்லியமாகக்
கணக்கிட்டு வைத்திருக்கிறான்.
19:95. கியாம நாளில் அவர்களில் ஒவ்வொருவரும்
தனித்தனியாக அவனிடம் வருவர்.
19:96. நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு (ஸாலிஹான-)
நல்ல செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு
அர்ரஹ்மான் (யாவரின்) நேசத்தை ஏற்படுத்துவான்.
19:97. (நபியே!) நாம் இ(வ் வேதத்)தை உம்முடைய
மொழியில் (அருளி) எளிதாக்கியதெல்லாம், இதைக்
கொண்டு நீர் - பயபக்தியுடையவர்களுக்கு நன்மாராயங்
கூறவும், முரண்டாக வாதம் செய்யும் மக்களுக்கு
இதைக் கொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை
செய்வதற்குமேயாகும்.
19:98. அவர்களுக்கு முன்னர், எத்தனையோ
தலைமுறையினரை நாம் அழித்திருக்கிறோம்; அவர்களில்
ஒருவரையேனும் நீர் பார்க்கிறீரா? அல்லது
அவர்களுடைய இலேசான சப்தத்தை நீர் கேட்கிறீரா?
|