|
அத்தியாயம்-29
ஸ_ரத்துல்
அ'ன்கபூத்
(சிலந்திப்
புச்சி)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
29:1.
அலிஃப்,
லாம்,
மீம்.
29:2. ''நாங்கள்
ஈமான் கொண்டிருக்கின்றோம்""
என்று கூறுவதனால்
(மட்டும்)
அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள்
என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா?
29:3.
நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே
அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம்
-
ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ்
அறிவான்;
இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான்.
29:4.
அல்லது தீமை செய்கிறார்களே அவர்கள்
நம்மைவிட்டும் தாங்கள் தப்பிக் கொள்வார்கள்
என்று எண்ணிக் கொண்டார்களா?
அவர்கள்
(அவ்வாறு)
தீர்மானித்துக் கொண்டது மிகவும் கெட்டது.
29:5.
எவர் அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று
நம்புகிறார்களோ அவர்கள்
(அதற்காக
நல்ல அமல்களைச் செய்து கொள்ளடடும்)
ஏனெனில் அல்லாஹ்
(அதற்காகக்
குறித்துள்ள)
தவணை நிச்சமயாக வருவதாக இருக்கிறது அவன்
(யாவற்றையும்)
செவியேற்பவனாகவும்,
நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான்.
29:6.
இன்னும்,
எவர்
(அல்லாஹ்வின்
பாதையில்)
உழைக்கிறாரோ அவர் நிச்சயமாகத் தமக்காகவே
உழைக்கிறார் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார்
(உதவி
எதுவும்)
தேவைப்படாதவன்.
29:7.
ஆகவே,
எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல்கள்
செய்கிறார்களோ அவர்களுடைய தீங்குகளை அவர்களை
விட்டும் நிச்சயமாக நீக்கி விடுவோம்;
இன்னும்,
அவர்கள் செய்த நன்மைகளுக்கு அவற்றைவிட மிகக
அழகான கூலியை,
நிச்சயமாக நாம் அவர்களுக்கு கொடுப்போம்.
29:8.
தன்
தாய் தந்தையருக்கு நன்மை செய்யும்படியாக நாம்
மனிதனுக்கு வஸிய்யத்து செய்திருக்கிறோம்;
எனினும்,
(மனிதனே!)
உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு
இணையாக்கும்படி அவ்விருவரும் உன்னை
வற்புறுத்தினால்,
நீ
அவ்விருவருக்கும் கீழ்படிய வேண்டாம்;
என்னிடமே உங்கள் அனைவரின் மீளுதலும் இருக்கிறது
நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அப்போது
நான் உங்களுக்கு அறிவிப்பேன்.
29:9.
அன்றியும் எவர் ஈமான் கொண்டு,
நற்கருமங்களைச் செய்கிறார்களோ அவர்களை
நல்லடியார்களுடன் நிச்சயமாக நாம் சேர்த்து
விடுவோம்.
29:10.
மேலும்,
மனிதர்களில் சிலர்
''நாங்கள்
அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொண்டுள்ளோம்""
என்று சொல்கிறார்கள்;
எனினும்,
அவர்களுக்கு அல்லாஹ்வின் பாதையில் துன்பம்
உண்டானால்,
மனிதர்களால் ஏற்படும் அந்த இம்சையை அல்லாஹ்வின்
வேதனைபோல் கருதி
(உம்மை
விட்டும் நீங்கள் முனைந்து)
விடுகிறார்கள்;
ஆனால் உம் இறைவனிடத்திலிருந்து உதவி வரும்போது
''நிச்சயமாக
நாங்கள் உங்களுடனே தான் இருந்தோம்""
என்று கூறுகிறார்கள்.
அல்லாஹ் அகிலத்தாரின் இதயங்களில் இருப்பவற்றை
நன்கறிந்தவனாக இல்லையா?
29:11.
அன்றியும்,
நம்பிக்கை கொண்டவர்களை நிச்சயமாக அல்லாஹ்
நன்கறிவான்;
நயவஞ்சகர்களையும்,
அவன் நிச்சயமாக நன்கறிவான்.
28:12.
நிராகரிப்பவர்கள் நம்பிக்கை கொண்டவர்களிடம்;
''நீங்கள்
எங்கள் வழியை
(மார்க்கத்தைப்)
பின்பற்றுங்கள்;
உங்கள் குற்றங்களை நாங்கள் சுமந்து கொள்கிறோம்""
என்று கூறுகிறார்கள்;
ஆனால்,
அவர்கள் தம் குற்றங்களிலிருந்தும் எதையும்
சுமப்பவர்களாக
(தாங்குபவர்களாக)
இல்லையே!
எனவே
(உங்கள்
குற்றங்களை சுமப்பதற்காகச் சொல்லும்)
அவர்கள் நிச்சயமாக பொய்யர்களே!
29:13.
ஆனால் நிச்சயமாக அவர்கள் தங்களுடைய
(பளுவான
பாவச்)
சுமைகளையும்,
தம்
(பளுவான
பாவச்)
சுமைகளுடன்
(அவர்கள்
வழிகெடுத்தோரின் பளுவான பாவச்)
சுமைகளையும் சுமப்பார்கள்;
கியாம நாளன்று அவர்கள் இட்டுக்கட்டிக்
கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக
விசாரிக்கப்படுவார்கள்.
29:14.
மேலும்;
திடனாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம்
அனுப்பினோம்;
ஆக,
அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம்
ஆண்டுகள் தங்கியிருந்தார்;
ஆனால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால்
அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது.
29:15. (அப்போது)
நாம் அவரையும்,
(அவருடன்)
கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம்;
மேலும்,
அதை
உலக மக்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்.
29:16.
இன்னும் இப்றாஹீமையும்
(தூதராக
நாம் அனுப்பினோம்);
அவர் தம் சமூகத்தாரிடம்;
''அல்லாஹ்வை
நீங்கள் வணங்குங்கள்;
அவனிடம் பயபக்தியுடன் இருங்கள்;
நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால்,
இதுவே உங்களுக்கு நன்மையுடையதாக இருக்கும்""
என்று கூறிய வேளையை
(நபியே!
நினைவூட்டுவீராக).
29:17.
அல்லாஹ்வையன்றி,
சிலைகளை வணங்குகிறீர்கள்
-
மேலும்,
நீங்கள் பொய்யைச் சிருஷ்டித்துக் கொண்டீர்கள்;
நிச்சயமாக,
அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கி வரும் இவை
உங்களுக்கு ஆகார வசதிகள் அளிக்கச் சக்தியற்றவை
ஆதலால்,
நீங்கள் அல்லாஹ்விடமே ஆகார வசதிகளைத் தேடுங்கள்;
அவனையே வணங்குங்கள்;
அவனுக்கே நன்றி செலுத்துங்கள்;
அவனிடத்திலேயே நீ;ங்கள்
திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.
29:18.
இன்னும் நீங்கள் பொய்ப்பிக்க முற்பட்டால்
(தளர்ந்து
போவதில்லை
-
ஏனெனில்)
உங்களுக்கு முன்னிருந்த சமுதாயத்தவரும்
(அவர்களுக்கு
அனுப்பப்பட்ட தூதர்களை இவ்வாறே)
பொய்ப்பிக்க முற்பட்டார்கள்;
ஆகவே,
(இறை)
தூதரின் கடமை
(தம்
தூதை)
பகிரங்கமாக எடுத்துரைப்பதன்றி
(வேறு)
இல்லை.""
29:19.
அல்லாஹ் எவ்வாறு முதலில் படைப்பைத் துவங்கிப்
பிறகு
(அதனை
எவ்வாறு)
தன்பால் மீட்டுகிறான் என்பதை அவர்கள்
பார்க்கவில்லையா?
நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபம்.
29:20. ''பூமியில்
நீங்கள் பிரயாணம் செய்து,
அல்லாஹ் எவ்வாறு
(முந்திய)
படைப்பைத் துவங்கிப் பின்னர் பிந்திய படைப்பை
எவ்வாறு உண்டு பண்ணுகிறான் என்பதைப் பாருங்கள்;
நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும்
பேராற்றலுள்ளவன்""
என்று
(நபியே!)
நீர் கூறுவீராக.
29:21.
தான் நாடியவரை அவன் வேதனை செய்கிறான்;
இன்னும் தான் நாடியவருக்குக் கிருபை செய்கிறான்
- (இறுதியில்)
அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்.
29:22.
பூமியிலோ,
வானத்திலோ நீங்கள்
(அவனை)
இயலாமல் ஆக்குபவர்களல்லர்.
மேலும்,
உங்களுக்கு அல்லாஹ்வையன்றி
(வேறு)
பாதுகாவலனோ,
உதவியாளனோ இல்லை.
29:23.
இன்னும்,
எவர் அல்லாஹ்வின் வசனங்களையும்,
அவனைச் சந்திப்பதையும் நிராகரித்தார்களோ,
அவர்கள் தாம் என் ரஹ்மத்தை விட்டு
நிராசையானவர்கள்;
மேலும்,
இ(த்தகைய)வர்களுக்கு
நோவினை செய்யும் வேதனை உண்டு.
29:24.
இதற்கு அவருடைய சமூகத்தாரின் பதிலெல்லாம்
''அவரைக்
கொன்று விடுங்கள் அல்லது நெருப்பிலிட்டுப்
பொசுக்குங்கள்""
என்று கூறியதைத் தவிர வேறில்லை ஆனால்,
அல்லாஹ் அவரை
(அந்த)
நெருப்பிலிருந்து ஈடேற்றினான்;
நிச்சயமாக இதில்,
ஈமான் கொண்ட சமூகத்தோருக்கு தக்க அத்தாட்சிகள்
இருக்கின்றன.
29:25.
மேலும்
(இப்றாஹீம்)
சொன்னார்;
''உலக
வாழ்ககையில் அல்லாஹ்வையன்றி
(சிலரை)
வணக்கத்திற்குரியவர்களாக நீங்கள் ஆக்கிக்
கொண்டது
(அவர்கள்
மீது)
உங்களிடையேயுள்ள நேசத்தின் காரணத்தினால்தான்;
பின்னர் கியாம நாளன்று உங்களில் சிலர் சிலரை
நிராகரிப்பார்கள்;
உங்களில் சிலர் சிலரை சபித்துக் கொள்வர்;
(இறுதியில்),
நீங்கள் ஒதுங்குந்தலம்
(நரக)
நெருப்புத்தான்;
(அங்கு)
உங்களுக்கு உதவியாளர் எவருமில்லை."
29:26. (இதன்
பின்னரும்)
லூத்
(மட்டுமே)
அவர் மீது ஈமான் கொண்டார்;
(அவரிடம்
இப்றாஹீம்);
''நிச்சயமாக
நான் என் இறைவனை நாடி
(இவ்வூரை
விட்டு)
ஹிஜ்ரத் செய்கிறேன்;
நிச்சயமாக அவன்
(யாவரையும்)
மிகைத்தவன்;
ஞானம் மிக்கவன்""
என்று கூறினார்.
29:27.
மேலும்,
அவருக்கு இஸ்ஹாக்கையும்,
யஃகூபையும் அளித்தோம்;
இன்னும் அவருடைய சந்ததியலே,
நபித்துவத்தையும்,
வேதத்தையும் ஏற்படுத்தினோம்;
அவருக்கு அவருடைய கூலியை இவ்வுலகத்திலும்
கொடுத்தோம்;
நிச்சயமாக மறுமையில் அவர் நல்லவர்களில்
ஒருவராவார்.
29:28.
மேலும்,
லூத்தை
(அவர்
சமூகத்தாரிடையே நபியாக அனுப்பி வைத்தோம்);
அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்;
''நிச்சயமாக
நீங்கள் உலகத்தாரில் எவருமே உங்களுக்கு முன்
செய்திராத மானக்கேடான ஒரு செயலை செய்ய முனைந்து
விட்டீர்கள்.
29:29.
நீங்கள் ஆண்களிடம்
(மோகம்
கொண்டு)
வருகிறீர்களா?
வழி
மறி(த்துப்
பிராயாணிகளைக் கொள்ளையடி)க்கவும்
செய்கின்றீர்கள்;
உங்களுடைய சபையிலும் வெறுக்கத்தக்கவற்றைச்
செய்கின்றீர்கள்""
என்று கூறினார்;
அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில்;
''நீர்
உண்மையாளரில்
(ஒருவராக)
இருப்பின் எங்கள் மீது அல்லாஹ்வின் வேதனையைக்
கொண்டு வருவீருhக""
என்பது தவிர வேறு எதுவுமில்லை.
29:30.
அப்போது அவர்;
''என்
இறைவனே!
குழப்பம் செய்யும் இற்த சமூகத்தாருக்கு எதிராக
எனக்கு நீ உதவி புரிவாயாக!""
என்று
(பிரார்த்தித்துக்)
கூறினார்.
29:31.
நம்
தூதர்(களாகிய
மலக்கு)கள்
இப்ராஹீமிடம் நன்மாராயத்துடன் வந்தபோது,
''நிச்சயமாக
நாங்கள் இவ்வூராரை அழிக்கிறவர்கள்;
ஏனெனில் நிச்சயமாக இவ்வூரார் அநியாயக்காரர்களாக
இருக்கின்றனர்""
எனக் கூறினார்கள்.
29:32. ''நிச்சயமாக
அவ்வூரில் லூத்தும் இருக்கிறாரே""
என்று
(இப்றாஹீம்)
கூறினார்;
(அதற்கு)
அவர்கள் அதில் இருப்பவர்கள் யார் என்பதை நாங்கள்
நன்கறிவோம்;
எனவே நாங்கள் அவரையும்;
அவருடைய மனைவியைத் தவிர,
அவர் குடும்பத்தாரையும் நிச்சயமாகக்
காப்பாற்றுவோம்;
அவள்
(அழிந்து
போவோரில் ஒருத்தியாக)
தங்கி விடுவாள் என்று சொன்னார்கள்.
29:33.
இன்னும் நம் தூதர்கள் லூத்திடம் வந்த போது
அவர்களின் காரணமாக அவர் கவலை கொண்டார்.
மேலும் அவர்களால்
(வருகையால்)
சங்கடப்பட்டார்;
அவர்கள்
'நீர்
பயப்படவேண்டாம்,
கவலையும் படவேண்டாம்"
என்று கூறினார்கள்.
நிச்சயமாக நாம் உம்மையும் உன் மனைவியைத் தவிர
உம் குடும்பத்தினரையும் காப்பாற்றுவோம்;
அவள்
(உம்மனைவி
அழிந்து போவோரில் ஒருத்தியாக)
பின் தங்கி விடுவாள்.
29:34.
நிச்சயமாக,
நாங்கள் இவ்வூரார் மீது,
இவர்கள் செய்து கொண்டிருக்கும் பாவத்தின்
காரணமாக,
வானத்திலிருந்து வேதனையை இறக்குகிறவர்கள் ஆவோம்.
29:35. (அவ்வாறே
அவ்வூரார்,
அழிந்தனர்)
அறிவுள்ள சமூகத்தாருக்கு இதிலிருந்தும் நாம் ஒரு
தெளிவான அத்தாட்சியை விட்டு வைத்துள்ளோம்.
29:36.
மேலும்,
மத்யன்
(ஊராருக்கு)
அவர்கள் சகோதரராகிய ஷ{ஐபை
(அனுப்பி
வைத்தோம்);
ஆகவே அவர்;
''என்
சமூகத்தாரே!
அல்லாஹ்வையே வணங்குங்கள்;
இறுதி நாளை
(நம்பி)
எதிர்பாருங்கள்,
மேலும்,
பூமியில் குழப்பம் செய்வோராக,
(விஷமிகளாகத்)
திரியாதீர்கள்""
என்று கூறினார்.
29:37.
எனினும் அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்;
ஆதலால் அவர்களைப் பூகம்பம் பிடித்துக் கொண்டது
ஆகவே,
அவர்கள் தம் வீடுகளில் அதிகாலையில்
(மரித்து)
முகங்குப்புற விழுந்து கிடந்தார்கள்.
29:38.
இவ்வாறே,
ஆது,
ஸமூது
(சமூகத்தாரையும்
அழித்தோம்);
அன்றியும் அவர்கள் வசித்த இடங்களிலிருந்து
(ஒரு
சில சின்னங்கள்)
உங்களுக்குத் தெளிவாக தென்படுகின்றன ஏனெனில்
ஷைத்தான் அவர்களுடைய
(தீச்)செயல்களை
அவர்களுக்கு அழகாகக் காண்பித்து அவர்கள்
நல்லறிவு படைத்தவர்களாக இருந்தும்,
அவர்களை நேர்வழியில்
(போக
விடாது)
தடுத்து விட்டான்.
29:39.
இன்னும் ஃகாரூனையும்,
ஃபிர்அவ்ன்னையும்,
ஹாமானையும்
(அழித்தோம்);
திடனாக,
அவர்களிடம் மூஸா தெளிவான அத்தாட்சிகளுடன்
வந்தார்;
எனினும்,
(அவற்றை
நிராகரித்து)
அவர்கள் பூமியில் பெருமையடித்து நின்றார்கள்.
ஆனால் அவர்கள்
(அழிவிலிருந்து)
தப்பித்தார்களில்லை.
29:40.
இவ்வாறு,
நாம் ஒவ்வொருவரையும் அவரவர் செய்த பாவத்தின்
காரணமாகப் பிடித்தோம்;
அவர்களில் சிலர் மீது கடும்புயல் மூலமாக
கல்மாரியை அனுப்பினோம்;
அவர்களில் சிலரை பேரிடி முழக்கம் பிடித்துக்
கொண்டது அவர்களில் சிலரைப் பூமியினுள் அழுந்தச்
செய்தோம்;
அவர்களில் சிலரை மூழ்கடித்தோம்;
ஆனால் அல்லாஹ் அவர்களுக்கு அநியாயம் செய்வதற்காக
இருக்க வில்லை அவர்கள் தமக்குத் தாமே அநியாயம்
செய்து கொண்டார்கள்.
29:41.
அல்லாஹ் அல்லாதவற்றை(த்
தங்களுக்குப்)
பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு
உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது
அது
(தனக்காக)
ஒரு
வீட்டைக் கட்டியது ஆனால் நிச்சயமாக
வீடுகளிலெல்லாம் மிகவும் பலஹீனமானது
சிலந்திப்பூச்சியின் வீடேயாகும்
-
இதை
அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின்
(தாங்கள்
இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலஹீனத்தை
அறிவார்கள்).
29:42.
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி அவர்கள் எதை
(நாயனென)
அழைக்கிறார்களோ,
அதை
அவன் அறிகிறான்
-
இன்னும் அவன்
(யாவரையும்)
மிகைத்தவன்;
ஞானம் மிக்கவன்.
29:43.
இவ்வுதாரணங்களை நாம் மனிதர்களுக்காக விளக்கி
வைக்கிறோம்
-
ஆனால் இவற்றை சிந்தித்தறிவோர் தவிர வேறெவரும்
உணர்ந்து கொள்ள மாட்டார்கள்.
29:44.
வானங்களையும்,
பூமியையும் அல்லாஹ் உண்மையைக் கொண்டே
படைத்துள்ளான்
-
நிச்சயமாக இதில் முஃமின்களுக்கு அத்தாட்சி
இருக்கிறது.
29:45. (நபியே!)
இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை
நீர் எடுத்தோதுவீராக இன்னும் தொழுகையை நிலை
நிறுத்துவீராக நிச்சயமாக தொழுகை
(மனிதரை)
மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு
விலக்கும்.
நிச்சயமாக,
அல்லாஹ்வின் திக்ரு
(தியானம்)
மிகவும் பெரிதா(ன
சக்தியா)கும்;
அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை
நன்கறிகிறான்.
29:46.
இன்னும்,
நீங்கள் வேதத்தையுடையவர்களுடன்
-
அவர்களில் அக்கிரமமாய் நடப்பவர்களைத் தவிர்த்து,
(மற்றவர்களுடன்)
அழகிய முறையிலேயன்றித் தர்க்கம் செய்யாதீர்கள்;
''எங்கள்
மீது இறக்கப்பட்ட
(வேதத்)தின்
மீதும் உங்கள் மீது இறக்கப்பட்ட
(வேதத்)தின்
மீதும் நாங்கள் ஈமான் கொள்கிறோம்;
எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே
-
மேலும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு,
நடப்போர்
(முஸ்லிம்கள்)
ஆவோம்""
என்று கூறுவீர்களாக.
29:47.
இவ்விதமே,
(அவர்களுக்கு
வேதம் இறக்கியது போன்றே நபியே!)
உமக்கும் இவ்வேதத்தை இறக்கியிருக்கிறோம்;
ஆகவே,
நாம்
(முன்னர்)
எவருக்கு வேதத்தை,
வழங்கியுள்ளோமோ,
அவர்கள் இதனை நம்பி ஏற்றுக் கொள்கிறார்கள்.
மேலும்,
இதை
நம்பி ஏற்றுக் கொள்வோரும் இவர்களில்
இருக்கிறார்கள்
-
காஃபிர்களைத் தவிர
(வேறு)
எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.
29:48.
அன்றியும்
(நபியே!)
இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி
வந்தவரல்லர்;
உம்
வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை
அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள்
சந்தேகப்படலாம்.
29:49.
அப்படியல்ல!
எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ
அவர்களின் உள்ளங்களில்,
தெளிவான வசனங்களாக இது இருக்கிறது
-
அநியாயக்காரர்கள் தவிர
(வேறு)
எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.
29:50. ''அவருடைய
இறைவனிடமிருந்து அவர் மீது அத்தாட்சிகள் ஏன்
இறக்கப்படவில்லை?""
என்றும் அவர்கள் கேட்கிறார்கள்;
''அத்தாட்சிகளெல்லாம்
அல்லாஹ்விடம் உள்ளன ஏனெனில் நான் வெளிப்படையாக
அச்ச மூட்டி எச்சரிக்கை செய்பவன் தான்""
என்று
(நபியே!)
நீர் கூறுவீராக.
29:51.
அவர்களுக்கு ஓதிக்காட்டப்படும் இவ்வேதத்தை நாம்
உம் மீது இறக்கியிருக்கிறோம் என்பது
அவர்களுக்குப் போதாதா?
நிச்சயமாக அ(வ்
வேதத்)தில்
ரஹ்மத்தும்,
ஈமான் கொண்ட சமூகத்தாருக்கு
(நினைவூட்டும்)
நல்லுபதேசமும் இருக்கின்றன.
29:52. ''எனக்கிடையிலும்,
உங்களுக்கிடையிலும் சாட்சியாயிருக்க அல்லாஹ்வே
போதுமானவன்;
வானங்களிலும்,
பூமியிலும் இருப்பவற்றை அவன் அறிகிறான்;
எனவே,
எவர் பொய்யானவற்றை நம்பி அல்லாஹ்வை
நிராகரிக்கிறார்களோ,
அவர்கள் தாம் நஷ்டவாளிகள்""
என்று
(நபியே!)
நீர் கூறும்.
29:53.
இன்னும்,
(மறுமையின்)
வேதனையைப் பற்றி அவர்கள் உம்மை
அவசரப்படுத்துகிறார்கள்;
மேலும்,
(அதற்கெனக்)
குறிப்பிட்ட தவணை ஏற்படுத்தப்படாதிருப்பின்
அவ்வேதனை அவர்களுக்கு வந்திருக்கும்;
எனினும்
(அத்தவணையை)
அவர்கள் உணர்ந்தறிய முடியாதிருக்கும் நிலையில்,
அவர்களிடம் அ(வ்வேதனையான)து
திடீரென்று வந்து சேரும்.
29:54.
அவ்வேதனையை அவசரப்படுத்து மாறு அவர்கள் உம்மைக்
கேட்கிறார்கள்
-
ஆனால்,
நிச்சயமாக நரகம் காஃபிர்களைச் சூழ்ந்து கொள்வதாக
இருக்கிறது.
29:55.
அந்நாளில்,
அவ்வேதனை அவர்களுக்கு மேலிருந்தும்,
அவர்களுடைய கால்களுக்குக் கீழிருந்தும் அவர்களை
மூடிக் கொள்ளும்.
(அப்போது
இறைவன்)
''நீங்கள்
செய்து கொண்டிருந்த(தின்
பய)னைச்
சுவைத்துப் பாருங்கள்''
என்று கூறுவான்.
29:56.
ஈமான் கொண்ட என் அடியார்களே!
நிச்சயமாக என் பூமி விசாலமானது ஆகையால் நீங்கள்
என்னையே வணங்குங்கள்.
29:57.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகிக்கக் கூடியதே
யாகும்;
பின்னர் நீங்கள் நம்மிடமே மீள்விக்கப்படுவீர்கள்.
29:58.
எவர்கள் ஈமான் கொண்டு,
ஸாலிஹான
(நல்)
அமல்களை செய்கிறார்களோ அவர்களை,
சதா
கீழே ஆறகள் ஓடிக்கொண்டிருக்கும் சவனபதியிலுள்ள
உயர்ந்த மாளிகைகளில்,
நிச்சயமாக நாம் அமர்த்துவோம்;
அவற்றில் அவர்கள் நிரந்தரமாக
(நிலைத்து)
இருப்பார்கள்;
(இவ்வாறாக
நற்)
செயல்கள் புரிவோரின் கூலியும் பாக்கியம்
மிக்கதாகவே உள்ளது.
29:59. (ஏனெனில்)
அவர்கள் பொறுமையைக் கொண்டார்கள்;
மேலும் தங்கள் இறைவன் மீதே முழு நம்பிக்கை
வைத்திருக்கிறார்கள்.
29:60.
அன்றியும்
(பூமியிலுள்ள)
எத்தனையோ பிராணிகள் தங்கள் உணவைச் சுமந்து
கொண்டு திரிவதில்லை அவற்றுக்கும் உங்களுக்கும்
அல்லாஹ் தான் உணவளிக்கின்றான்
-
இன்னும் அவன்
(யாவற்றையும்
செவிமடுப்பவனாகவும்
(நன்கு)
அறிபவனாகவும் இருக்கின்றான்.
29:61.
மேலும்,
(நபியே!)
''நீர்
இவர்களிடத்தில் வானங்களையும்,
பூமியையும் படைத்துச் சூரியனையும் சந்திரனையும்
(தன்
அதிகாரத்தில்)
வசப்படுத்திருப்பவன் யார்?""
என்று கேட்டால்,
''அல்லாஹ்""
என்றே இவர்கள் திட்டமாக கூறுவார்கள்;
அவ்வாறாயின் அவர்கள்
(உண்மையை
விட்டு)
எங்கே திருப்பப்படுகிறார்கள்?
29:62. ''அல்லாஹ்
தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு உணவை
விசாலமாக்குகிறான்,
தான் நாடியவருக்கு சுருக்கியும் விடுகிறான்;
நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொன்றையும் அறிந்தவன்.""
29:63.
இன்னும்,
அவர்களிடம்;
"'வானத்திலிருந்து
நீரை இறக்கி,
பிறகு அதனைக் கொண்டு இப்பூமியை
-
அது
(காய்ந்து)
மரித்தபின் உயிர்ப்பிப்பவன் யார்?""
என்று நீர் கேட்பீராகில்;
''அல்லாஹ்""
என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள்;
(அதற்கு
நீர்)
''அல்ஹம்து
லில்லாஹ்
-
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது""
என்று கூறுவீராக எனினும் இவர்களில் பெரும்பாலோர்
அறிந்துணர மாட்டார்கள்.
29:64.
இன்னும்,
இவ்வுலக வாழ்கை வீணும் விளையாட்டுமேயன்றி
வேறில்லை
-
இன்னும் நிச்சயமாக மறுமைக்குரிய வீடு திடமாக
அதுவே
(நித்தியமான)
வாழ்வாகும்
-
இவர்கள்
(இதை)
அறிந்திருந்தால்.
29:65.
மேலும் அவர்கள் மரக்கலங்களில் ஏறிக்கொண்டால்,
அந்தரங்க சுத்தியுடன் சன்மார்க்கத்தில்
வழிப்படடவர்களாக அல்லாஹ்வைப்
பிரார்த்திக்கின்றனர்;
ஆனால்,
அவன் அவர்களை
(பத்திரமாகக்)
கரைக்கு கொண்டு வந்து விடுங்கால்,
அவர்கள்
(அவனுக்கே)
இணைவைக்கின்றனர்.
29:67.
அவர்கள்,
நாம் அவர்களுக்கு அளித்துள்ளவற்றுக்கு மாறு
செய்து கொண்டு,
(இவ்வுலகின்
அற்ப)
சுகங்களை அனுபவிக்கட்டும்
-
ஆனால்
(தம்
தீச்செயல்களின் பயனை)
அறிந்து கொள்வார்கள்.
29:67.
அன்றியும்
(மக்காவைச்)
சூழவுள்ள மனிதர்கள்
(பகைவர்களால்)
இறஞ்சிச் செல்லப்படும் நிலையில்
(இதை)
நாம் பாதுகாப்பான புனிதத் தலமாக ஆக்கியிருப்பதை
அவர்கள் பார்க்கவில்லையா?
இன்னும்,
அவர்கள் பொய்யானவற்றை நம்பி,
அல்லாஹ்வின் அருட்கொடையை நிராகரிக்கிறார்களா?
29:68.
அன்றியும்,
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனைவிட
-
அல்லது தன்னிடம் சத்தியம் வந்த போது அதைப்
பொய்ப்பிப்பவனைவிட அநியாயம் செய்பவன் யார்?
(இத்தகைய)
காஃபிர்களுக்கு ஒதுங்குமிடம் நரகத்தில் அல்லவா
இருக்கின்றது,
29:69.
மேலும் எவர்கள் நம்முடைய வழியில்
முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய
நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்;
நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே
இருக்கின்றான்.
ஸ_ரத்துல்
அ'ன்கபூத்
(சிலந்திப்
புச்சி)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
29:1.
அலிஃப்,
லாம்,
மீம்.
29:2. ''நாங்கள்
ஈமான் கொண்டிருக்கின்றோம்""
என்று கூறுவதனால்
(மட்டும்)
அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள்
என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா?
29:3.
நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே
அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம்
-
ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ்
அறிவான்;
இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான்.
29:4.
அல்லது தீமை செய்கிறார்களே அவர்கள்
நம்மைவிட்டும் தாங்கள் தப்பிக் கொள்வார்கள்
என்று எண்ணிக் கொண்டார்களா?
அவர்கள்
(அவ்வாறு)
தீர்மானித்துக் கொண்டது மிகவும் கெட்டது.
29:5.
எவர் அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று
நம்புகிறார்களோ அவர்கள்
(அதற்காக
நல்ல அமல்களைச் செய்து கொள்ளடடும்)
ஏனெனில் அல்லாஹ்
(அதற்காகக்
குறித்துள்ள)
தவணை நிச்சமயாக வருவதாக இருக்கிறது அவன்
(யாவற்றையும்)
செவியேற்பவனாகவும்,
நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான்.
29:6.
இன்னும்,
எவர்
(அல்லாஹ்வின்
பாதையில்)
உழைக்கிறாரோ அவர் நிச்சயமாகத் தமக்காகவே
உழைக்கிறார் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார்
(உதவி
எதுவும்)
தேவைப்படாதவன்.
29:7.
ஆகவே,
எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல்கள்
செய்கிறார்களோ அவர்களுடைய தீங்குகளை அவர்களை
விட்டும் நிச்சயமாக நீக்கி விடுவோம்;
இன்னும்,
அவர்கள் செய்த நன்மைகளுக்கு அவற்றைவிட மிகக
அழகான கூலியை,
நிச்சயமாக நாம் அவர்களுக்கு கொடுப்போம்.
29:8.
தன்
தாய் தந்தையருக்கு நன்மை செய்யும்படியாக நாம்
மனிதனுக்கு வஸிய்யத்து செய்திருக்கிறோம்;
எனினும்,
(மனிதனே!)
உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு
இணையாக்கும்படி அவ்விருவரும் உன்னை
வற்புறுத்தினால்,
நீ
அவ்விருவருக்கும் கீழ்படிய வேண்டாம்;
என்னிடமே உங்கள் அனைவரின் மீளுதலும் இருக்கிறது
நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அப்போது
நான் உங்களுக்கு அறிவிப்பேன்.
29:9.
அன்றியும் எவர் ஈமான் கொண்டு,
நற்கருமங்களைச் செய்கிறார்களோ அவர்களை
நல்லடியார்களுடன் நிச்சயமாக நாம் சேர்த்து
விடுவோம்.
29:10.
மேலும்,
மனிதர்களில் சிலர்
''நாங்கள்
அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொண்டுள்ளோம்""
என்று சொல்கிறார்கள்;
எனினும்,
அவர்களுக்கு அல்லாஹ்வின் பாதையில் துன்பம்
உண்டானால்,
மனிதர்களால் ஏற்படும் அந்த இம்சையை அல்லாஹ்வின்
வேதனைபோல் கருதி
(உம்மை
விட்டும் நீங்கள் முனைந்து)
விடுகிறார்கள்;
ஆனால் உம் இறைவனிடத்திலிருந்து உதவி வரும்போது
''நிச்சயமாக
நாங்கள் உங்களுடனே தான் இருந்தோம்""
என்று கூறுகிறார்கள்.
அல்லாஹ் அகிலத்தாரின் இதயங்களில் இருப்பவற்றை
நன்கறிந்தவனாக இல்லையா?
29:11.
அன்றியும்,
நம்பிக்கை கொண்டவர்களை நிச்சயமாக அல்லாஹ்
நன்கறிவான்;
நயவஞ்சகர்களையும்,
அவன் நிச்சயமாக நன்கறிவான்.
28:12.
நிராகரிப்பவர்கள் நம்பிக்கை கொண்டவர்களிடம்;
''நீங்கள்
எங்கள் வழியை
(மார்க்கத்தைப்)
பின்பற்றுங்கள்;
உங்கள் குற்றங்களை நாங்கள் சுமந்து கொள்கிறோம்""
என்று கூறுகிறார்கள்;
ஆனால்,
அவர்கள் தம் குற்றங்களிலிருந்தும் எதையும்
சுமப்பவர்களாக
(தாங்குபவர்களாக)
இல்லையே!
எனவே
(உங்கள்
குற்றங்களை சுமப்பதற்காகச் சொல்லும்)
அவர்கள் நிச்சயமாக பொய்யர்களே!
29:13.
ஆனால் நிச்சயமாக அவர்கள் தங்களுடைய
(பளுவான
பாவச்)
சுமைகளையும்,
தம்
(பளுவான
பாவச்)
சுமைகளுடன்
(அவர்கள்
வழிகெடுத்தோரின் பளுவான பாவச்)
சுமைகளையும் சுமப்பார்கள்;
கியாம நாளன்று அவர்கள் இட்டுக்கட்டிக்
கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக
விசாரிக்கப்படுவார்கள்.
29:14.
மேலும்;
திடனாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம்
அனுப்பினோம்;
ஆக,
அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம்
ஆண்டுகள் தங்கியிருந்தார்;
ஆனால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால்
அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது.
29:15. (அப்போது)
நாம் அவரையும்,
(அவருடன்)
கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம்;
மேலும்,
அதை
உலக மக்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்.
29:16.
இன்னும் இப்றாஹீமையும்
(தூதராக
நாம் அனுப்பினோம்);
அவர் தம் சமூகத்தாரிடம்;
''அல்லாஹ்வை
நீங்கள் வணங்குங்கள்;
அவனிடம் பயபக்தியுடன் இருங்கள்;
நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால்,
இதுவே உங்களுக்கு நன்மையுடையதாக இருக்கும்""
என்று கூறிய வேளையை
(நபியே!
நினைவூட்டுவீராக).
29:17.
அல்லாஹ்வையன்றி,
சிலைகளை வணங்குகிறீர்கள்
-
மேலும்,
நீங்கள் பொய்யைச் சிருஷ்டித்துக் கொண்டீர்கள்;
நிச்சயமாக,
அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கி வரும் இவை
உங்களுக்கு ஆகார வசதிகள் அளிக்கச் சக்தியற்றவை
ஆதலால்,
நீங்கள் அல்லாஹ்விடமே ஆகார வசதிகளைத் தேடுங்கள்;
அவனையே வணங்குங்கள்;
அவனுக்கே நன்றி செலுத்துங்கள்;
அவனிடத்திலேயே நீ;ங்கள்
திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.
29:18.
இன்னும் நீங்கள் பொய்ப்பிக்க முற்பட்டால்
(தளர்ந்து
போவதில்லை
-
ஏனெனில்)
உங்களுக்கு முன்னிருந்த சமுதாயத்தவரும்
(அவர்களுக்கு
அனுப்பப்பட்ட தூதர்களை இவ்வாறே)
பொய்ப்பிக்க முற்பட்டார்கள்;
ஆகவே,
(இறை)
தூதரின் கடமை
(தம்
தூதை)
பகிரங்கமாக எடுத்துரைப்பதன்றி
(வேறு)
இல்லை.""
29:19.
அல்லாஹ் எவ்வாறு முதலில் படைப்பைத் துவங்கிப்
பிறகு
(அதனை
எவ்வாறு)
தன்பால் மீட்டுகிறான் என்பதை அவர்கள்
பார்க்கவில்லையா?
நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபம்.
29:20. ''பூமியில்
நீங்கள் பிரயாணம் செய்து,
அல்லாஹ் எவ்வாறு
(முந்திய)
படைப்பைத் துவங்கிப் பின்னர் பிந்திய படைப்பை
எவ்வாறு உண்டு பண்ணுகிறான் என்பதைப் பாருங்கள்;
நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும்
பேராற்றலுள்ளவன்""
என்று
(நபியே!)
நீர் கூறுவீராக.
29:21.
தான் நாடியவரை அவன் வேதனை செய்கிறான்;
இன்னும் தான் நாடியவருக்குக் கிருபை செய்கிறான்
- (இறுதியில்)
அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்.
29:22.
பூமியிலோ,
வானத்திலோ நீங்கள்
(அவனை)
இயலாமல் ஆக்குபவர்களல்லர்.
மேலும்,
உங்களுக்கு அல்லாஹ்வையன்றி
(வேறு)
பாதுகாவலனோ,
உதவியாளனோ இல்லை.
29:23.
இன்னும்,
எவர் அல்லாஹ்வின் வசனங்களையும்,
அவனைச் சந்திப்பதையும் நிராகரித்தார்களோ,
அவர்கள் தாம் என் ரஹ்மத்தை விட்டு
நிராசையானவர்கள்;
மேலும்,
இ(த்தகைய)வர்களுக்கு
நோவினை செய்யும் வேதனை உண்டு.
29:24.
இதற்கு அவருடைய சமூகத்தாரின் பதிலெல்லாம்
''அவரைக்
கொன்று விடுங்கள் அல்லது நெருப்பிலிட்டுப்
பொசுக்குங்கள்""
என்று கூறியதைத் தவிர வேறில்லை ஆனால்,
அல்லாஹ் அவரை
(அந்த)
நெருப்பிலிருந்து ஈடேற்றினான்;
நிச்சயமாக இதில்,
ஈமான் கொண்ட சமூகத்தோருக்கு தக்க அத்தாட்சிகள்
இருக்கின்றன.
29:25.
மேலும்
(இப்றாஹீம்)
சொன்னார்;
''உலக
வாழ்ககையில் அல்லாஹ்வையன்றி
(சிலரை)
வணக்கத்திற்குரியவர்களாக நீங்கள் ஆக்கிக்
கொண்டது
(அவர்கள்
மீது)
உங்களிடையேயுள்ள நேசத்தின் காரணத்தினால்தான்;
பின்னர் கியாம நாளன்று உங்களில் சிலர் சிலரை
நிராகரிப்பார்கள்;
உங்களில் சிலர் சிலரை சபித்துக் கொள்வர்;
(இறுதியில்),
நீங்கள் ஒதுங்குந்தலம்
(நரக)
நெருப்புத்தான்;
(அங்கு)
உங்களுக்கு உதவியாளர் எவருமில்லை."
29:26. (இதன்
பின்னரும்)
லூத்
(மட்டுமே)
அவர் மீது ஈமான் கொண்டார்;
(அவரிடம்
இப்றாஹீம்);
''நிச்சயமாக
நான் என் இறைவனை நாடி
(இவ்வூரை
விட்டு)
ஹிஜ்ரத் செய்கிறேன்;
நிச்சயமாக அவன்
(யாவரையும்)
மிகைத்தவன்;
ஞானம் மிக்கவன்""
என்று கூறினார்.
29:27.
மேலும்,
அவருக்கு இஸ்ஹாக்கையும்,
யஃகூபையும் அளித்தோம்;
இன்னும் அவருடைய சந்ததியலே,
நபித்துவத்தையும்,
வேதத்தையும் ஏற்படுத்தினோம்;
அவருக்கு அவருடைய கூலியை இவ்வுலகத்திலும்
கொடுத்தோம்;
நிச்சயமாக மறுமையில் அவர் நல்லவர்களில்
ஒருவராவார்.
29:28.
மேலும்,
லூத்தை
(அவர்
சமூகத்தாரிடையே நபியாக அனுப்பி வைத்தோம்);
அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்;
''நிச்சயமாக
நீங்கள் உலகத்தாரில் எவருமே உங்களுக்கு முன்
செய்திராத மானக்கேடான ஒரு செயலை செய்ய முனைந்து
விட்டீர்கள்.
29:29.
நீங்கள் ஆண்களிடம்
(மோகம்
கொண்டு)
வருகிறீர்களா?
வழி
மறி(த்துப்
பிராயாணிகளைக் கொள்ளையடி)க்கவும்
செய்கின்றீர்கள்;
உங்களுடைய சபையிலும் வெறுக்கத்தக்கவற்றைச்
செய்கின்றீர்கள்""
என்று கூறினார்;
அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில்;
''நீர்
உண்மையாளரில்
(ஒருவராக)
இருப்பின் எங்கள் மீது அல்லாஹ்வின் வேதனையைக்
கொண்டு வருவீருhக""
என்பது தவிர வேறு எதுவுமில்லை.
29:30.
அப்போது அவர்;
''என்
இறைவனே!
குழப்பம் செய்யும் இற்த சமூகத்தாருக்கு எதிராக
எனக்கு நீ உதவி புரிவாயாக!""
என்று
(பிரார்த்தித்துக்)
கூறினார்.
29:31.
நம்
தூதர்(களாகிய
மலக்கு)கள்
இப்ராஹீமிடம் நன்மாராயத்துடன் வந்தபோது,
''நிச்சயமாக
நாங்கள் இவ்வூராரை அழிக்கிறவர்கள்;
ஏனெனில் நிச்சயமாக இவ்வூரார் அநியாயக்காரர்களாக
இருக்கின்றனர்""
எனக் கூறினார்கள்.
29:32. ''நிச்சயமாக
அவ்வூரில் லூத்தும் இருக்கிறாரே""
என்று
(இப்றாஹீம்)
கூறினார்;
(அதற்கு)
அவர்கள் அதில் இருப்பவர்கள் யார் என்பதை நாங்கள்
நன்கறிவோம்;
எனவே நாங்கள் அவரையும்;
அவருடைய மனைவியைத் தவிர,
அவர் குடும்பத்தாரையும் நிச்சயமாகக்
காப்பாற்றுவோம்;
அவள்
(அழிந்து
போவோரில் ஒருத்தியாக)
தங்கி விடுவாள் என்று சொன்னார்கள்.
29:33.
இன்னும் நம் தூதர்கள் லூத்திடம் வந்த போது
அவர்களின் காரணமாக அவர் கவலை கொண்டார்.
மேலும் அவர்களால்
(வருகையால்)
சங்கடப்பட்டார்;
அவர்கள்
'நீர்
பயப்படவேண்டாம்,
கவலையும் படவேண்டாம்"
என்று கூறினார்கள்.
நிச்சயமாக நாம் உம்மையும் உன் மனைவியைத் தவிர
உம் குடும்பத்தினரையும் காப்பாற்றுவோம்;
அவள்
(உம்மனைவி
அழிந்து போவோரில் ஒருத்தியாக)
பின் தங்கி விடுவாள்.
29:34.
நிச்சயமாக,
நாங்கள் இவ்வூரார் மீது,
இவர்கள் செய்து கொண்டிருக்கும் பாவத்தின்
காரணமாக,
வானத்திலிருந்து வேதனையை இறக்குகிறவர்கள் ஆவோம்.
29:35. (அவ்வாறே
அவ்வூரார்,
அழிந்தனர்)
அறிவுள்ள சமூகத்தாருக்கு இதிலிருந்தும் நாம் ஒரு
தெளிவான அத்தாட்சியை விட்டு வைத்துள்ளோம்.
29:36.
மேலும்,
மத்யன்
(ஊராருக்கு)
அவர்கள் சகோதரராகிய ஷ{ஐபை
(அனுப்பி
வைத்தோம்);
ஆகவே அவர்;
''என்
சமூகத்தாரே!
அல்லாஹ்வையே வணங்குங்கள்;
இறுதி நாளை
(நம்பி)
எதிர்பாருங்கள்,
மேலும்,
பூமியில் குழப்பம் செய்வோராக,
(விஷமிகளாகத்)
திரியாதீர்கள்""
என்று கூறினார்.
29:37.
எனினும் அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்;
ஆதலால் அவர்களைப் பூகம்பம் பிடித்துக் கொண்டது
ஆகவே,
அவர்கள் தம் வீடுகளில் அதிகாலையில்
(மரித்து)
முகங்குப்புற விழுந்து கிடந்தார்கள்.
29:38.
இவ்வாறே,
ஆது,
ஸமூது
(சமூகத்தாரையும்
அழித்தோம்);
அன்றியும் அவர்கள் வசித்த இடங்களிலிருந்து
(ஒரு
சில சின்னங்கள்)
உங்களுக்குத் தெளிவாக தென்படுகின்றன ஏனெனில்
ஷைத்தான் அவர்களுடைய
(தீச்)செயல்களை
அவர்களுக்கு அழகாகக் காண்பித்து அவர்கள்
நல்லறிவு படைத்தவர்களாக இருந்தும்,
அவர்களை நேர்வழியில்
(போக
விடாது)
தடுத்து விட்டான்.
29:39.
இன்னும் ஃகாரூனையும்,
ஃபிர்அவ்ன்னையும்,
ஹாமானையும்
(அழித்தோம்);
திடனாக,
அவர்களிடம் மூஸா தெளிவான அத்தாட்சிகளுடன்
வந்தார்;
எனினும்,
(அவற்றை
நிராகரித்து)
அவர்கள் பூமியில் பெருமையடித்து நின்றார்கள்.
ஆனால் அவர்கள்
(அழிவிலிருந்து)
தப்பித்தார்களில்லை.
29:40.
இவ்வாறு,
நாம் ஒவ்வொருவரையும் அவரவர் செய்த பாவத்தின்
காரணமாகப் பிடித்தோம்;
அவர்களில் சிலர் மீது கடும்புயல் மூலமாக
கல்மாரியை அனுப்பினோம்;
அவர்களில் சிலரை பேரிடி முழக்கம் பிடித்துக்
கொண்டது அவர்களில் சிலரைப் பூமியினுள் அழுந்தச்
செய்தோம்;
அவர்களில் சிலரை மூழ்கடித்தோம்;
ஆனால் அல்லாஹ் அவர்களுக்கு அநியாயம் செய்வதற்காக
இருக்க வில்லை அவர்கள் தமக்குத் தாமே அநியாயம்
செய்து கொண்டார்கள்.
29:41.
அல்லாஹ் அல்லாதவற்றை(த்
தங்களுக்குப்)
பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு
உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது
அது
(தனக்காக)
ஒரு
வீட்டைக் கட்டியது ஆனால் நிச்சயமாக
வீடுகளிலெல்லாம் மிகவும் பலஹீனமானது
சிலந்திப்பூச்சியின் வீடேயாகும்
-
இதை
அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின்
(தாங்கள்
இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலஹீனத்தை
அறிவார்கள்).
29:42.
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி அவர்கள் எதை
(நாயனென)
அழைக்கிறார்களோ,
அதை
அவன் அறிகிறான்
-
இன்னும் அவன்
(யாவரையும்)
மிகைத்தவன்;
ஞானம் மிக்கவன்.
29:43.
இவ்வுதாரணங்களை நாம் மனிதர்களுக்காக விளக்கி
வைக்கிறோம்
-
ஆனால் இவற்றை சிந்தித்தறிவோர் தவிர வேறெவரும்
உணர்ந்து கொள்ள மாட்டார்கள்.
29:44.
வானங்களையும்,
பூமியையும் அல்லாஹ் உண்மையைக் கொண்டே
படைத்துள்ளான்
-
நிச்சயமாக இதில் முஃமின்களுக்கு அத்தாட்சி
இருக்கிறது.
29:45. (நபியே!)
இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை
நீர் எடுத்தோதுவீராக இன்னும் தொழுகையை நிலை
நிறுத்துவீராக நிச்சயமாக தொழுகை
(மனிதரை)
மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு
விலக்கும்.
நிச்சயமாக,
அல்லாஹ்வின் திக்ரு
(தியானம்)
மிகவும் பெரிதா(ன
சக்தியா)கும்;
அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை
நன்கறிகிறான்.
29:46.
இன்னும்,
நீங்கள் வேதத்தையுடையவர்களுடன்
-
அவர்களில் அக்கிரமமாய் நடப்பவர்களைத் தவிர்த்து,
(மற்றவர்களுடன்)
அழகிய முறையிலேயன்றித் தர்க்கம் செய்யாதீர்கள்;
''எங்கள்
மீது இறக்கப்பட்ட
(வேதத்)தின்
மீதும் உங்கள் மீது இறக்கப்பட்ட
(வேதத்)தின்
மீதும் நாங்கள் ஈமான் கொள்கிறோம்;
எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே
-
மேலும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு,
நடப்போர்
(முஸ்லிம்கள்)
ஆவோம்""
என்று கூறுவீர்களாக.
29:47.
இவ்விதமே,
(அவர்களுக்கு
வேதம் இறக்கியது போன்றே நபியே!)
உமக்கும் இவ்வேதத்தை இறக்கியிருக்கிறோம்;
ஆகவே,
நாம்
(முன்னர்)
எவருக்கு வேதத்தை,
வழங்கியுள்ளோமோ,
அவர்கள் இதனை நம்பி ஏற்றுக் கொள்கிறார்கள்.
மேலும்,
இதை
நம்பி ஏற்றுக் கொள்வோரும் இவர்களில்
இருக்கிறார்கள்
-
காஃபிர்களைத் தவிர
(வேறு)
எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.
29:48.
அன்றியும்
(நபியே!)
இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி
வந்தவரல்லர்;
உம்
வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை
அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள்
சந்தேகப்படலாம்.
29:49.
அப்படியல்ல!
எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ
அவர்களின் உள்ளங்களில்,
தெளிவான வசனங்களாக இது இருக்கிறது
-
அநியாயக்காரர்கள் தவிர
(வேறு)
எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.
29:50. ''அவருடைய
இறைவனிடமிருந்து அவர் மீது அத்தாட்சிகள் ஏன்
இறக்கப்படவில்லை?""
என்றும் அவர்கள் கேட்கிறார்கள்;
''அத்தாட்சிகளெல்லாம்
அல்லாஹ்விடம் உள்ளன ஏனெனில் நான் வெளிப்படையாக
அச்ச மூட்டி எச்சரிக்கை செய்பவன் தான்""
என்று
(நபியே!)
நீர் கூறுவீராக.
29:51.
அவர்களுக்கு ஓதிக்காட்டப்படும் இவ்வேதத்தை நாம்
உம் மீது இறக்கியிருக்கிறோம் என்பது
அவர்களுக்குப் போதாதா?
நிச்சயமாக அ(வ்
வேதத்)தில்
ரஹ்மத்தும்,
ஈமான் கொண்ட சமூகத்தாருக்கு
(நினைவூட்டும்)
நல்லுபதேசமும் இருக்கின்றன.
29:52. ''எனக்கிடையிலும்,
உங்களுக்கிடையிலும் சாட்சியாயிருக்க அல்லாஹ்வே
போதுமானவன்;
வானங்களிலும்,
பூமியிலும் இருப்பவற்றை அவன் அறிகிறான்;
எனவே,
எவர் பொய்யானவற்றை நம்பி அல்லாஹ்வை
நிராகரிக்கிறார்களோ,
அவர்கள் தாம் நஷ்டவாளிகள்""
என்று
(நபியே!)
நீர் கூறும்.
29:53.
இன்னும்,
(மறுமையின்)
வேதனையைப் பற்றி அவர்கள் உம்மை
அவசரப்படுத்துகிறார்கள்;
மேலும்,
(அதற்கெனக்)
குறிப்பிட்ட தவணை ஏற்படுத்தப்படாதிருப்பின்
அவ்வேதனை அவர்களுக்கு வந்திருக்கும்;
எனினும்
(அத்தவணையை)
அவர்கள் உணர்ந்தறிய முடியாதிருக்கும் நிலையில்,
அவர்களிடம் அ(வ்வேதனையான)து
திடீரென்று வந்து சேரும்.
29:54.
அவ்வேதனையை அவசரப்படுத்து மாறு அவர்கள் உம்மைக்
கேட்கிறார்கள்
-
ஆனால்,
நிச்சயமாக நரகம் காஃபிர்களைச் சூழ்ந்து கொள்வதாக
இருக்கிறது.
29:55.
அந்நாளில்,
அவ்வேதனை அவர்களுக்கு மேலிருந்தும்,
அவர்களுடைய கால்களுக்குக் கீழிருந்தும் அவர்களை
மூடிக் கொள்ளும்.
(அப்போது
இறைவன்)
''நீங்கள்
செய்து கொண்டிருந்த(தின்
பய)னைச்
சுவைத்துப் பாருங்கள்''
என்று கூறுவான்.
29:56.
ஈமான் கொண்ட என் அடியார்களே!
நிச்சயமாக என் பூமி விசாலமானது ஆகையால் நீங்கள்
என்னையே வணங்குங்கள்.
29:57.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகிக்கக் கூடியதே
யாகும்;
பின்னர் நீங்கள் நம்மிடமே மீள்விக்கப்படுவீர்கள்.
29:58.
எவர்கள் ஈமான் கொண்டு,
ஸாலிஹான
(நல்)
அமல்களை செய்கிறார்களோ அவர்களை,
சதா
கீழே ஆறகள் ஓடிக்கொண்டிருக்கும் சவனபதியிலுள்ள
உயர்ந்த மாளிகைகளில்,
நிச்சயமாக நாம் அமர்த்துவோம்;
அவற்றில் அவர்கள் நிரந்தரமாக
(நிலைத்து)
இருப்பார்கள்;
(இவ்வாறாக
நற்)
செயல்கள் புரிவோரின் கூலியும் பாக்கியம்
மிக்கதாகவே உள்ளது.
29:59. (ஏனெனில்)
அவர்கள் பொறுமையைக் கொண்டார்கள்;
மேலும் தங்கள் இறைவன் மீதே முழு நம்பிக்கை
வைத்திருக்கிறார்கள்.
29:60.
அன்றியும்
(பூமியிலுள்ள)
எத்தனையோ பிராணிகள் தங்கள் உணவைச் சுமந்து
கொண்டு திரிவதில்லை அவற்றுக்கும் உங்களுக்கும்
அல்லாஹ் தான் உணவளிக்கின்றான்
-
இன்னும் அவன்
(யாவற்றையும்
செவிமடுப்பவனாகவும்
(நன்கு)
அறிபவனாகவும் இருக்கின்றான்.
29:61.
மேலும்,
(நபியே!)
''நீர்
இவர்களிடத்தில் வானங்களையும்,
பூமியையும் படைத்துச் சூரியனையும் சந்திரனையும்
(தன்
அதிகாரத்தில்)
வசப்படுத்திருப்பவன் யார்?""
என்று கேட்டால்,
''அல்லாஹ்""
என்றே இவர்கள் திட்டமாக கூறுவார்கள்;
அவ்வாறாயின் அவர்கள்
(உண்மையை
விட்டு)
எங்கே திருப்பப்படுகிறார்கள்?
29:62. ''அல்லாஹ்
தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு உணவை
விசாலமாக்குகிறான்,
தான் நாடியவருக்கு சுருக்கியும் விடுகிறான்;
நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொன்றையும் அறிந்தவன்.""
29:63.
இன்னும்,
அவர்களிடம்;
"'வானத்திலிருந்து
நீரை இறக்கி,
பிறகு அதனைக் கொண்டு இப்பூமியை
-
அது
(காய்ந்து)
மரித்தபின் உயிர்ப்பிப்பவன் யார்?""
என்று நீர் கேட்பீராகில்;
''அல்லாஹ்""
என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள்;
(அதற்கு
நீர்)
''அல்ஹம்து
லில்லாஹ்
-
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது""
என்று கூறுவீராக எனினும் இவர்களில் பெரும்பாலோர்
அறிந்துணர மாட்டார்கள்.
29:64.
இன்னும்,
இவ்வுலக வாழ்கை வீணும் விளையாட்டுமேயன்றி
வேறில்லை
-
இன்னும் நிச்சயமாக மறுமைக்குரிய வீடு திடமாக
அதுவே
(நித்தியமான)
வாழ்வாகும்
-
இவர்கள்
(இதை)
அறிந்திருந்தால்.
29:65.
மேலும் அவர்கள் மரக்கலங்களில் ஏறிக்கொண்டால்,
அந்தரங்க சுத்தியுடன் சன்மார்க்கத்தில்
வழிப்படடவர்களாக அல்லாஹ்வைப்
பிரார்த்திக்கின்றனர்;
ஆனால்,
அவன் அவர்களை
(பத்திரமாகக்)
கரைக்கு கொண்டு வந்து விடுங்கால்,
அவர்கள்
(அவனுக்கே)
இணைவைக்கின்றனர்.
29:67.
அவர்கள்,
நாம் அவர்களுக்கு அளித்துள்ளவற்றுக்கு மாறு
செய்து கொண்டு,
(இவ்வுலகின்
அற்ப)
சுகங்களை அனுபவிக்கட்டும்
-
ஆனால்
(தம்
தீச்செயல்களின் பயனை)
அறிந்து கொள்வார்கள்.
29:67. அன்றியும் (மக்காவைச்) சூழவுள்ள
மனிதர்கள் (பகைவர்களால்) இறஞ்சிச் செல்லப்படும்
நிலையில் (இதை) நாம் பாதுகாப்பான புனிதத் தலமாக
ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா?
இன்னும், அவர்கள் பொய்யானவற்றை நம்பி,
அல்லாஹ்வின் அருட்கொடையை நிராகரிக்கிறார்களா?
29:68. அன்றியும், அல்லாஹ்வின் மீது பொய்யை
இட்டுக்கட்டுபவனைவிட - அல்லது தன்னிடம் சத்தியம்
வந்த போது அதைப் பொய்ப்பிப்பவனைவிட அநியாயம்
செய்பவன் யார்? (இத்தகைய) காஃபிர்களுக்கு
ஒதுங்குமிடம் நரகத்தில் அல்லவா இருக்கின்றது,
29:69. மேலும் எவர்கள் நம்முடைய வழியில்
முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய
நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்; நிச்சயமாக
அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான்.
|