|
அத்தியாயம்-36
ஸ_ரத்து
யாஸீன்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
36:1.
யாஸீன்.
36:2.
ஞானம் நிறம்பிய இக் குர்ஆன் மீது சத்தியமாக!
36:3.
நிச்சயமாக,
நீர்
(நம்)
தூதர்களில் உள்ளவராவீர்.
36:4.
நேரான பாதை மீது
(இருக்கின்றீர்).
36:5. (இது)
யாவரையும் மிகைத்தோன்,
கிருபையுடையவனால் இறக்கி அருளப்பட்டதாகும்.
36:6.
எந்த சமூகத்தினரின் மூதாதையர்கள்,
எச்சரிக்கப்படாமையினால் இவர்கள்
(நேர்வழி
பற்றி)
அலட்சியமாக இருக்கின்றார்களோ இ(த்தகைய)வர்களை
நீர் எச்சரிப்பதற்காக.
36:7.
இவர்களில் பெரும்பாலோர் மீது
(இவர்களுக்கு
வரவிருக்கும் வேதனை பற்றிய)
வாக்கு நி;ச்சயமாக
உண்மையாகிவிட்டது ஆகவே இவர்கள் ஈமான்
கொள்ளமாட்டார்கள்.
36:8.
நிச்சயமாக நாம் அவர்களுடைய கழுத்துகளில்
மோவாய்க் கட்டைகள் வரையில்,
அரிகண்டங்களைப் போட்டிருக்கின்றோம்,
ஆகவே அவர்கள்
(குனிய
முடியாதவாறு)
தலை
நிமிர்ந்து விட்டனர்.
36:9.
இன்னும் நாம் அவர்களுக்கு முன்னே ஒரு
தடுப்பையும் அவர்களுக்குப் பின்னே ஒரு
தடுப்பையும் ஏற்படுத்தியுள்ளோம்;
(இவ்வாறாக)
அவர்களை மூடிவிட்டோம்
-
ஆகையால் அவர்கள் பார்க்க முடியாது.
36:10.
இன்னும்,
அவர்களை நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும்
அல்லது அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை
செய்யாமலிருப்பதும் அவர்களுக்கு சமமே தான்;
அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
36:11.
நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம்
உபதேசத்தைப் பின்பற்றி யார் மறைவாகவும்
அர்ரஹ்மானுக்கு அஞ்சி நடக்கிறார்களோ அவர்களைத்
தான்;
அ(த்தகைய)வருக்கு
மன்னிப்பும் மகத்தான நற்கூலியும் உண்டென்று
நன்மாராயம் கூறுவீராக.
36:12.
நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே
உயிர்ப்பிக்கிறோம்;
அன்றியும்
(நன்மை,
தீமைகளில்)
அவர்கள் முற்படுத்தியதையும்,
அவர்கள் விட்டுச் சென்றவற்றையும் நாம்
எழுதுகிறோம்;
எல்லாவற்றையும்,
நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே
வைத்துள்ளோம்.
36:13. (நபியே!
நம்)
தூதர்கள் ஓர் ஊர்வாசிகளிடம் வந்த(போது
நிகழ்ந்த)தை
அவர்களுக்கு உதாரணமாகச் சொல்வீராக.
36:14.
நாம் அவர்களிடம் தூதர்கள் இருவரை அனுப்பியபோது,
அவ்விருவரையும் அவர்கள் பொய்யாக்கினார்கள்;
ஆகவே
(அவர்களை)
மூன்றாவது தூதரைக் கொண்டு வலுப்படுத்தினோம்;
ஆகவே,
''நிச்சயமாக
நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட தூதர்கள் ஆவோம்""
என்று அவர்கள் கூறினார்கள்.
36:15. (அதற்கு
அம்மக்கள்;)
''நீங்களும்
எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி வேறல்லர்;
அர்ரஹ்மான்
(உங்களுக்கு)
எதனையும் இறக்கி வைக்கவில்லை.
நீங்கள் பொய்யே கூறுகிறீர்களேயன்றி வேறில்லை""
என்று கூறினார்கள்.
36:16. (இதற்கு
அவர்கள்;)
''நிச்சயமாக
நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்டுள்ளவர்கள்
என்பதை எங்கள் இறைவன் நன்கறிவான்""
என்று கூறினர்.
36:17. ''இன்னும்,
எங்கள் கடமை
(இறைவனின்
தூதுச் செய்தியை)
விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை""
(என்றும்
கூறினார்).
36:18. (அதற்கு
அம்மக்கள்;)
கூறினார்கள்;
''நிச்சயமாக
நாங்கள் உங்களைத் துர்ச்சகுனமாகவே கருதுகின்றோம்;
நீங்கள்
(இதிலிருந்து)
விலகிக் கொள்ளாவிட்டால் உங்களைத் திட்டமாகக்
கல்லாலடிப்போம்;
மேலும் எம்மிடமிருந்து உங்களை நோவினை செய்யும்
வேதனையும் பிடித்துக் கொள்ளும்.""
36:19.
அ(தற்கு
தூதனுப்பப்பட்ட)வர்கள்
கூறினார்கள்;
''உங்கள்
துர்ச்சகுனம் உங்களிடத்தில் தான் இருக்கின்றது
உங்களுக்கு நற்போதனை செய்வதையா
(துர்ச்சகுனமாகக்
கருதுகிறீர்கள்?)
அப்படியல்ல!
நீங்கள் வரம்பு மீறிய சமூகத்தாராகவே
இருக்கிறீர்கள்.
36:20. (அப்பொழுது)
ஒரு
மனிதர் அப்பட்டணத்தின் கடைக்கோடியிலிருந்து
விரைந்து வந்து
(அவர்களிடம்);
''என்
சமூகத்தவரே!
நீங்கள் இத்தூதர்களைப் பின்பற்றுங்கள்""
என்று கூறினார்.
36:21. ''உங்களிடம்
ஒரு கூலியும் கேட்காத இவர்களை நீங்கள்
பின்பற்றுங்கள்;
இன்னும் இவர்களே நேர்வழி பெற்றவர்கள்""
(என்றும்
அவர் கூறினார்).
36:22. ''அன்றியும்,
என்னைப்படைத்தவனை நான் வணங்காமலிருப்பதற்கு
எனக்கென்ன
(காரணமிருக்கிறது?)
அவனிடமே நீங்கள் மீள்விக்கப்படுவீர்கள்.
36:23. ''அவனையன்றி
வேறு நாயனை நான் எடுத்துக் கொள்வேனா?
அர்ரஹ்மான் எனக்கு ஏதேனும் கெடுதியைக் கொண்டு
நாடினால்,
இவற்றின் சிபாரிசு ஒரு பயனும் எனக்கு அளிக்காது.
இவை
என்னை விடுவிக்கவும் முடியா.
36:24. ''(எனவே,
நான் அவன் ஒருவனையே வணங்காவிட்டால்)
அப்போது நான் நிச்சயமாக,
வெளிப்படையான வழிகேட்டில் இருப்பேன்.
36:25. ''உங்கள்
இறைவன் மீதே நிச்சயமாக நான் ஈமான்
கொண்டிருக்கின்றேன்;
ஆகவே,
நீங்கள் எனக்குச் செவிசாயுங்கள்.""
36:26. (ஆனால்,
செவிசாய்க்காது அவரைக் கொன்றுவிட்டனர்.)
''நீர்
சுவர்க்கத்தில் பிரவேசிப்பீராக"
என்று
(அவரிடம்)
கூறப்பட்டது.
''என்னுடைய
சமூகத்தார் அறிந்து கொள்ள வேண்டுமே என்று
கூறினார்.""
36:27. ''என்னுடைய
இறைவன் எனக்கு மன்னிப்பளித்து,
கண்ணியமானவர்களில் நின்றும் அவன் என்னை
ஆக்கிவிட்டான்""
(என்பதை).
36:28.
தவிர,
நாம் அவருக்குப் பின்னால் அவருடைய சமூகத்தார்
மீது வானத்திலிருந்து எந்த சேனையையும்
(அவர்களை
அழிப்பதற்காக)
இறக்கிவைக்கவில்லை அப்படி இறக்கி வைப்பவராகவும்
நாம் இல்லை.
36:29.
ஒரே
ஒரு பேரொலி!
(அவ்வளவு)தான்!
அவர்கள் சாம்பலாயினர்.
36:30.
அந்தோ!
அடியார்கள் மீது கைசேதமே!
அவர்களிடம் எந்தத்தூதர் வந்தாலும்,
அவரை அவர்கள் பரிகாசம் செய்யாதிருந்ததில்லை.
36:31. ''அவர்களுக்கு
முன்னர் எத்தனையோ தலைமுறைகளை நாம்
அழித்திருக்கின்றோம்;
நிச்சயமாக அவர்கள்,
இவர்களிடம் திரும்பி வரவேமாட்டார்கள்""
என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா?
36:32.
மேலும் அவர்கள் யாவரும் ஒன்று திரட்டப்பட்டு
(விசாரணைக்கு)
நம்மிடமே கொண்டுவரப்படுவர்.
36:33.
அன்றியம்,
இறந்து
(தரிசாகக்)கிடக்கும்
பூமி அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்;
(பின்னர்
மழையினால்)
அதனை நாமே உயிர்ப்பித்து,
அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகின்றோம்;
அதிலிருந்துதான் இவர்கள் உண்கிறார்கள்.
36:34.
மேலும்,
அதில் நாம் போPத்த
மரங்களினாலும்,
திராட்டசை(க்
கொடி)களினாலும்
தோட்டங்களை உண்டாக்குகிறோம்;
இன்னும் அதில் நீரூற்றுக்களைப் பீறிட்டு
ஓடச்செய்கின்றோம்.
36:35.
அதன் பழவகைகளை அவர்கள் உண்பதற்காக ஆனால்
அவர்களுடைய கைகள் இதை உண்டாக்கவில்லை
-
ஆகவே அவர்கள் நன்றி செலுத்தமாட்டார்களா?
36:36.
பூமி முளைப்பிக்கின்ற
(புற்
பூண்டுகள்)
எல்லாவற்றையும்,
(மனிதர்களாகிய)
இவர்களையும்,
இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப்
படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.
36:37.
இரவும் இவர்களுக்கோர் அத்தாட்சியாகும்;
அதிலிருந்து பகலை கழற்றி விடுகிறோம்;
அதனால் இவர்கள் ஆழ்ந்த இருளிலாகிவிடுகிறார்கள்.
36:38.
இன்னும்
(அவர்களுக்கு
அத்தாட்சி)
சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று
கொண்டிருக்கிறது இது யாவரையும் மிகைத்தோனும்,
யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய
(இறை)வன்
வித்ததாகும்.
36:39.
இன்னும்
(உலர்ந்த
வளைந்த)
பழைய போPத்த
மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம்
பல மன்ஸில்களை
(தங்குமிடங்களை)
ஏற்படுத்தியிருக்கின்றோம்.
36:40.
சூரியன் சந்திரனை
(நெருங்கிப்)
பிடிக்க முடியாது இரவு பகலை முந்தமுடியாது.
இவ்வாறே எல்லாம்
(தம்)
வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.
36:41.
இன்னும் அவர்களுக்கு ஓர் அத்தாட்சி,
நாம் நிச்சயமாக அவர்களுடைய சந்ததிகளை
நிறப்பப்பட்ட கப்பலில் ஏற்றிச் செல்வதில் உள்ளது.
36:42.
இன்னும்,
அவர்கள் ஏறிச் செல்வதற்காக அதைப் போன்ற
(பல்வேறு
கலங்களை)
நாம் அவர்களுக்காகப் படைத்திருக்கின்றோம்.
36:43.
அன்றியும் நாம் நாடினால் அவர்களை மூழ்கடித்து
விடுவோம்;
அப்பொழுது அவர்களைக் காப்பாற்றுவோர் எவரும்
இருக்க மாட்டார்;
மேலும்,
அவர்கள் விடுவிக்கப்படவும் மாட்டார்கள்.
36:44.
நம்முடைய கருணையினால் சிறிது காலம் அவர்கள்
சுகிப்பதற்காக
(விட்டு
வைக்கப்பட்டாலன்றி),
36:45. ''இன்னும்,
நீங்கள் கிருபை செய்யப்பெறும் பொருட்டு,
உங்களுக்குமுன் இருப்பதையும்,
உங்களுக்குப்பின் இருப்பதையும் அஞ்சி நடந்து
கொள்ளுங்கள்""
என்று அவர்களுக்குக் கூறப்பட்டாலும்
36:46.
அவர்களுடைய இறைவனின் அத்தாட்சிகளில் எந்த ஓர்
அத்தாட்சி அவர்களிடம் வந்தாலும் அதனை அவர்கள்
புற்ககணிக்காமல் இருப்பதில்லை.
36:47. ''அல்லாஹ்
உங்களுக்கு அளித்திருப்பவற்றிலிருந்து நீங்கள்
(அவன்
பாதையில்)
செலவு செய்யுங்கள்""
என்று அவர்களிடம் கூறப்பட்டால்,
''அல்லாஹ்
நாடியிருந்தால் எவருக்கு அவன் உணவளித்திருப்பானோ,
அவர்களுக்கு நாம் உணவளிப்போமா?
நீங்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே
இருக்கின்றீர்கள்""
என்று நிராகரிப்பவர்கள் ஈமான் கொண்டவர்களைப்
பார்த்துக் கூறுகிறார்கள்.
36:48.
இன்னும்,
அவர்கள் கூறுகிறார்கள்;
''நீங்கள்
உண்மையாளர்களாக இருப்பின்,
(மறுமை
பற்றிய)
அந்த வாக்குறுதி எப்பொழுது வந்து சேரும்?""
என்று.
36:49.
அவர்கள் ஒரே ஒரு பேரொலிக்காகக் காத்துக்
கொண்டிருப்பதைத் தவிர வேறில்லை அவர்கள்
வழக்காடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே அது
அவர்களைப் பிடித்துக் கொள்ளும்.
36:50.
அப்போது அவர்கள் வஸிய்யத்து சொல்ல சக்தி
பெறமாட்டார்கள்;
தம்
குடும்பத்தாரிடம் மீளவும் மாட்டார்கள்.
36:51.
மேலும்,
ஸ_ர்
ஊதப்படடதும்,
உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத்
தங்கள் இறைவனிடம் விரைவார்கள்.
36:52. ''எங்களுடைய
துக்கமே!
எங்கள் தூங்குமிடங்களிலிருந்து எங்களை
எழுப்பியவர் யார்?""
என்று அவர்கள் கேட்பார்கள்;
அர்ரஹ்மான் வாக்களித்ததும்,
(அவனுடைய)
தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுதான்""
(என்று
அவர்களுக்குக் கூறப்படும்).
36:53.
ஒரே
ஒரு பேரொளி தவிர
(வேறொன்றும்)
இருக்காது உடன்,
அவர்கள் யாவரும் நம்முன் கொண்டுவரப்படுவார்கள்.
36:54.
அன்றியும்,
அந்நாளில் எந்த ஓர் ஆத்மாவுக்கும் ஏதம் அநியாயம்
செய்யப்பட மாட்டாது இன்னும்,
நீங்கள் செய்தவற்றிற்கேயன்றி
(வேறு
எதற்கும்)
கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்.
36:55.
அந்நாளில்,
நிச்சயமாக சுவர்க்கவாசிகள்
(தங்கள்)
அலுவலில் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.
36:56.
அவர்களும்,
அவர்களுடைய மனைவியரும் நிழல்களில் கட்டில்களின்
மீது சாய்தவர்களாக இருப்பார்கள்.
36:57.
அங்கே அவர்களுக்கு
(பலவகைக்)
கனி
வகைகள் உண்டு;
இன்னும் அவர்களுக்க அவர்கள் வேண்டுவது
கிடைக்கும்.
36:58. 'ஸலாமுன்"
என்று,
நிகரற்ற அன்புடையோனுமான இறைவனிடமிருந்து
சொல்லுதல் உண்டு.
36:59.
அன்றியும்;
''குற்றவாளிகளே!
இன்று நீங்கள்
(நல்லோரிலிருந்து)
பிரிந்து நில்லுங்கள்""
(என்று
குற்றவாளிகளிடம் கூறப்படும்).
36:60. ''ஆதமுடைய
மக்களே!
நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள்,
நிச்சயமாக அவன் உங்ளுக்குப் பகிரங்மான பகைவன்""
என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?
36:61. ''என்னையே
நீங்கள் வணங்க வேண்டும்;
இதுதான் நேரானவழி.
36:62. ''அவ்வாறிருந்தும்,
நிச்சயமாக அவன் உங்களில் மிகுதமான மக்களை வழி
கெடுத்து விட்டான்.
இதை
நீங்கள் அறிந்து கொள்ளவில்லையா?
36:63. ''இதுதான்
உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட ஜஹன்னம்
(நரகம்)
ஆகும்.
36:64. ''நீங்கள்
நிராகரித்துக் கொண்டிருந்ததனால் இன்று இதனுள்
நுழையுங்கள்""
(என்று
குற்றவாளிகளிடம் கூறப்படும்).
36:65.
அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது
முத்திரையிட்டு விடுவோம்;
அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது
பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்;
அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.
36:66.
நாம் நாடியிருந்தால்,
நாம் அவர்களுடைய கண்களைப் போக்கியிருப்போம்;
அப்பொழுது
(அவர்கள்
தப்பும்)
வழிதேடி ஓடினால் அவர்கள் எதைப் பார்ப்பார்கள்?
36:67.
அன்றியும்,
நாம் நாடியிருந்தால்,
அவர்களுடைய இடத்திலேயே அவர்களை உரு
மாற்றியிருப்போம்.
அப்போது,
அவர்கள் முன் செல்லவும் சக்தி பெறமாட்டார்கள்;
இன்னும் அவர்கள் மீளவும் மாட்டார்கள்.
36:68.
மேலும்,
எவரை நாம் வயோதிகமாக்குகிறோமோ,
அவருடைய நிலைமையைப் படைப்பில்
(பலஹீனமான
நிலைக்கு)
மாற்றிவிடுகிறோம்;
அவர்கள்
(இதை)
அறிந்து கொள்ள வேண்டாமா?
36:69. (நம்முடைய
தூதராகிய)
அவருக்கு நாம் கவிதை
(இயற்றக்)
கற்றுக் கொடுக்கவில்லை அது அவருக்குத்
தேவையானதும் அல்ல இது நல்லுப தேசமும் தெளிவான
குர்ஆனுமே தவிர வேறில்லை.
36:70. (இது)
உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை
செய்கிறது.
நிராகரிப்பவர்களுக்கு
(தண்டனை
உண்டு என்ற)
வாக்கை உண்மையென உறுதிப் படுத்துகிறது.
36:71.
நிச்சயமாக நாம் அவர்களுக்காக நம்முடைய கைகள்
செய்தவற்றிலிருந்து கால்நடைகளைப்
படைத்திருக்கின்றோம் என்பதை அவர்கள்
பார்க்கவில்லையா?
அவற்றின் மீது அவர்கள் உரிமை பாராட்டுகிறார்கள்.
36:72.
மேலும்,
அவற்றை அவர்களுக்குக் கீழ்படியுமாறு
செய்துள்ளோம்;
ஆகவே,
அவற்றில் சிலவற்றின் மீது அவர்கள் ஏறிச்சவாரி
செய்வதும் இருக்கிறது இன்னும் அவற்றிலிருந்து
சிலவற்றைப் புசிக்கிறார்கள்.
36:73.
மேலும்,
அவற்றிலிருந்து அவர்களுக்கு பயன்களும்,
பானங்களும் இருக்கின்றன,
இவற்றுக்கெல்லாம் அவர்கள் நன்றி செலுத்த
மாட்டார்களா?
36:74.
எனினும் அல்லாஹ் அல்லாதவற்றையும்
-
தாங்கள் உதவி செய்யப்படும் பொருட்டு அவர்கள்
தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
36:75.
ஆனால் அவை அவர்களுக்கு உதவி செய்யும் சக்தி
பெறவில்லை
-ஆயினும்
அவற்றையே இவர்களுக்கு
(எதிரான)
படையாகக் கொண்டுவரப்படும்.
36:76. (நபியே!)
அவர்களுடைய பேச்சு உம்மை விசனப்படுத்த
வேண்டியதில்லை.
அவர்கள்
(தங்கள்
மனத்தில்)
மறைப்பபதையும் அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும்
நிச்சயமாக நாம் நன்கறிவோம்.
36:77.
மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே
நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன்
பார்க்கவில்லையா?
அவ்வாறிருந்தும்,
அவன்
(நமக்கு)
வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான்.
36:78.
மேலும்,
அவன் தன் படைப்பை
(தான்
படைக்கப்பட்டதெப்படி என்பதை)
மறந்துவிட்டு,
அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்;
''எலும்புகள்
அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை
உயிர்ப்பிப்பது யார்?""
என்று.
36:79. ''முதல்
முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே
(பின்னும்)
அவற்றுக்கு உயிர் கொடுப்பான்.
அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்""
என்று
(நபியே!)
நீர் கூறுவீராக!
36:80. ''பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக
நெருப்பை உண்டாக்குபவனும் அவனே அதிலிருந்தே
நீங்கள் (தீ) மூட்டுகிறீர்கள்.
36:81. வானங்களையும் பூமியையும் படைத்தவன்,
அவர்களைப் போன்றவர்களபை; படைக்கச் சக்தியற்றவனா?
ஆம் (சக்தியுள்ளவனே!) மெய்யாகவே, அவனே (பல
வகைகளையும்) படைப்பவன்; யாவற்றையும்
நன்கறிந்தவன்.
36:82. எப்பொருளையேனும் அவன் (படைக்க) நாடினால்,
அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; ''குன்""
(ஆகிவிடுக) என்று கூறுவதுதான்; உடனே அது
ஆகிவிடுகிறது.
36:83. ஆகவே, எல்லாப் பொருட்களின் ஆட்சியும்
எவன் கையிலிருக்கிறதோ அவனே மிகத் தூய்மையானவன்,
அவனிடமே நீங்கள் மீள்விக்கப்படுவீர்கள்.
|