|
அத்தியாயம்-38
ஸ_ரத்து
ஸாத்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
38:1.
ஸாத்.
(நல்லுபதேசங்களின்)
நினைவுறுத்தலைக் கொண்ட இக்குர்ஆன் மீது
சத்தியமாக.
38:2.
ஆனால்,
நிராகரிப்பவர்களோ பெருமையிலும்,
மாறுபாட்டிலும்
(ஆழ்ந்து)
கிடக்கின்றனர்.
38:3.
இவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறைகளை நாம்
அழித்திருக்கின்றோம்;
அப்போது,
அவர்கள் தப்பி ஓட வழியில்லாத நிலையில்
(உதவி
தேடிக்)
கூக்குரலிட்டனர்.
38:4.
அன்றியும் தங்களிடமிருந்தே அச்சமூட்டி
எச்சரிப்பவர் தங்களிடம் வந்ததைப் பற்றி
ஆச்சரியமடைந்தனர்
''இவர்
ஒரு சூனியக்காரப் பொய்யர்!""
என்றும் காஃபிர்கள் கூறினர்.
38:5. ''இவர்
(எல்லாத்)
தெய்வங்களையும் ஒரே நாயனாக ஆக்கிவிட்டாரா?
நிச்சயமாக இது ஓர் ஆச்சரியமான விஷயமே!
(என்றும்
கூறினர்).
38:6. ''(இவரை
விட்டும் விலகிச்)
செல்லுங்கள்.
உங்கள் தெய்வங்களை உறுதியுடன் பற்றிக்
கொள்ளுங்கள்.
நிச்சயமாக இதில்
(இவரது
பிரச்சாரத்தில்)
ஏதோ
(சுயநலம்)
நாடப்படுகிறது""
என்று அவர்களின் தலைவர்கள்
(கூறிச்)
சென்றனர்.
38:7. ''வேறு
(எந்த)
சமுதாயத்திலும் நாம் இது
(போன்று)
கேள்விப்பட்டதில்லை இது
(இவருடைய)
கற்பனையேயன்றி வேறில்லை
(என்றும்).
38:8. ''நம்மில்,
இவர் பேரில்தான் நினைவுறுத்தும் நல்லுபதேசம்
இறக்கப்பட்டு விட்டதோ?""
(என்றும்
கூறுகிறார்கள்.)
அவ்வாறல்ல!
அவர்கள் எனது போதனையில் சந்தேகத்தில்
இருக்கின்றனர் அவ்வாறல்ல!
இன்னும் அவர்கள் என் வேதனையை அனுபவித்ததில்லை.
38:9.
அல்லது,
யாவரையும் மிகைத்தவனும் மிகப்பெருங்
கொடையாளியுமாகிய உமது இறைவனின் கிருபைக்
கருவூலங்கள்
-
அவர்களிடம் இருக்கின்றனவா,
38:10.
அல்லது வானங்களுடையவும்,
பூமியினுடையவும் அவ்விரண்டிற்கும் இடையேயும்
இருப்பவற்றின் மீதுள்ள ஆட்சி அவர்களிடம்
இருக்கிறதா?
அவ்வாறாயின் அவர்கள்
(ஏணி
போன்ற)
சாதனங்களில் ஏறிச் செல்லட்டும்.
38:11.
ஆனால் இங்கிருக்கும் படையினரும்
(முன்
தலைமுறைகளில்)
முறியடிக்கப்பட்ட ஏனைய கூட்டங்களைப் போலவே
ஆவார்கள்.
38:12. (இவ்வாறு)
இவர்களுக்கு முன் இருந்த நூஹ{டைய
சமூகத்தாரும்,
ஆது(சமூகத்தாரு)ம்,
முளைகளுடைய ஃபிர்அவ்னும் நம் தூதர்களைப்
பொய்ப்பித்தனர்.
38:13. (இவ்வாறு)
'ஸமூது"ம்
லூத்துடைய சமூகத்தவரும்,
(மத்யன்)
தோப்பு வாசிகளும்
(பொய்யாக்கினார்கள்);
இவர்கள்
(எல்லோரும்
முன் தலைமுறைகளில் முறியடிக்கப்பட்ட)
கூட்டத்தினர் ஆவார்கள்.
38:14.
இவர்கள் ஒவ்வொருவரும்
(நம்)
தூதர்களைப் பொய்ப்பிக்க முற்படாமல் இல்லை எனவே
என்னுடைய தண்டனை
(அவர்கள்
மீது)
உறுதியாயிற்று.
38:15.
இன்னும் இவர்களும் ஒரே ஒரு பேரொளியைத் தவிர
(வேறெதனையும்)
எதிர் பார்க்கவில்லை.
அதில் தாமதமும் இராது.
38:16. ''எங்கள்
இறைவா!
கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாளுக்கு முன்னரே,
எங்கள்
(வேதனையின்)
பாகத்தை துரிதப்படுத்தி(க்
கொடுத்து)
விடுவாயாக""
என்றும்
(ஏளனமாகக்)
கூறுகின்றனர்.
38:17.
இவர்கள் கூறுவதைப்பற்றிப் பொறுமையுடன்
இருப்பீராக!
இன்னும்,
வல்லமையுள்ள நம் அடியார் தாவூதையும் நினைவு
கொள்வீராக!
நிச்சயமாக அவர்
(எந்நிலையிலும்
நம்மையே)
நோக்குபவரகா இருந்தார்.
38:18.
நிச்சயமாக நாம் மலைகளை அவருக்கு வசப்படுத்திக்
கொடுத்தோம்;
மாலை வேளையிலும்,
காலை வேளையிலும் அவை அவருடன் சேர்ந்து
(நம்மைத்
துதித்து)
தஸ்பீஹ{
செய்தன.
38:19.
மேலும் பறவைகளை ஒன்று திரட்டி
(நாம்
வசப்படுத்திக் கொடுத்தோம்)
அனைத்தும் அவனையே நோக்குபவையாக இருந்தன.
38:20.
மேலும்,
நாம் அவருடைய அரசாங்கத்தையும் வலுப்படுத்தினோம்;
இன்னும் அவருக்கு ஞானத்தையும்,
தெளிவான சொல்லாற்றலையும் அளித்தோம்.
38:21.
அந்த வழக்காளிகளின் செய்தி உமக்கு வந்ததா?
அவர்கள்
(தாவூது
இறைவணக்கத்திற்காக அமைத்திருந்த)
மிஹ்ராபின் சுவரைத் தாண்டி
-
38:22.
தாவூதிடம் நுழைந்த போது அவர்;
அவர்களைக் கண்டு திடுக்குற்றார்;
அப்போது அவர்கள் கூறினார்கள்;
''பயப்படாதீர்!
நாங்களிருவரும் வழக்காளிகள்;
எங்களில் ஒருவர் மற்றவர் மீது அநீதம்
செய்திருக்கிறார்;;
எங்களிருவருக்கிடையில் நீதத்தைக் கொண்டு
தீர்ப்பளிப்பீராக!
(அதில்)
தவறிழைத்து விடாதீர்!
எங்களைச் செவ்வையான பாதைக்கு நேர்வழி
காட்டுவீராக!""
38:23. (அவர்களில்
ஒருவர் கூறினார்;)
''நிச்சயமாக
இவர் என்னுடைய சகோதரர்;
இவரிடம் தொண்ணு}ற்றொன்பது
ஆடுகள் இருக்கின்றன் ஆனால் என்னிடம் ஒரே ஓர்
ஆடுதான் இருக்கிறது அவர் அதனையும் தனக்குக்
கொடுத்துவிட வேண்டுமெனச் சொல்லி,
வாதத்தில் என்னை மிகைத்து விட்டார்.""
38:24. (அதற்கு
தாவூது;)
''உமமுடைய
ஆட்டை அவர் தம்முடைய ஆடுகளுடன் சேர்த்து
விடும்படிக் கேட்டது கொண்டு நிச்யசமாக அவர்
உம்மீது அநியாயம் செய்து விட்டார்;
நிச்சயமாகக் கூட்டாளிகளில் பெரும்பாலோர்
-
அவர்களில் சிலர் சிலரை மோசம் செய்து
விடுகின்றனர்;
ஈமான் கொண்டு
(ஸாலிஹான)
நல்லமல்கள் செய்பவர்களைத் தவிர இத்தகையவர் சிலரே""
என்று கூறினார்;
இதற்குள்;
''நிச்சயமாக
நாமே அவரைச் சோதித்து விட்டோம்""
என்று தாவூது எண்ணித் தம்முடைய இறைவனிடம்
மன்னிப்பு கோரிக்குனிந்து விழுந்தவராக இறைவனை
நோக்கினார்.
38:25.
ஆகவே,
நாம் அவருக்கு அ(க்
குற்றத்)தை
மன்னித்தோம்;
அன்றியும்,
நிச்சயமாக அவருக்கு நம்மிடத்தில் நெருங்கிய
(அந்தஸ்)தும்,
அழகிய இருப்பிடமும் உண்டு.
38:26. (நாம்
அவரிடம் கூறினோம்;)
''தாவூதே!
நிச்சயமாக நாம் உம்மை பூமியில் பின்தோன்றலாக
ஆக்கினோம்;
ஆகவே மனிதர்களிடையே சத்தியத்தைக் கொண்டு
(நீதமாக)த்
தீர்ப்புச் செய்யும்;
அன்றியும்,
அனோ
இச்சையைப் பின் பற்றாதீர்;
(ஏனெனில்
அது)
உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுத்து
விடும்.
நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் பாதையை விட்டு
வழிகெடுக்கிறாரோ,
அவர்களுக்குக் கேள்வி கணக்குக் கேட்கப்படும்
நாளை மறந்து விட்டமைக்காக மிகக்கொடிய
வேதனையுண்டு.
38:27.
மேலும்,
வானத்தையும்,
பூமியையும்,
இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் வீணுக்காக
நாம் படைக்கவில்லை.
இது
(வீணென்பது)
காஃபிர்களின் எண்ணமாகும்;
காஃபிர்களுக்கு
(நரக)
நெருப்பின் கேடுதான் உண்டு.
38:28.
அல்லது ஈமான் கொண்டு
(ஸாலிஹான)
நல்லமல்கள் செய்வோரை பூமியில் குழப்பம்
செய்வோரைப்போல் நாம் ஆக்கிவிடுவோமா?
அல்லது,
பயபக்தியுடையோரைப் பாவிகளைப் போல் நாம்
ஆக்கிவிடுவோமா?
38:29. (நபியே!)
பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது
அருளியுள்ளோம்
-
அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து
ஆய்வதற்காகவும்,
அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும்.
38:30.
இன்னும் தாவூதுக்கு(ப்
புதல்வராக)
ஸ{லைமானை
வழங்கினோம்;
சிறப்பான
(நம்)
நல்லடியார்,
நிச்சயமாக அவர்
(எதிலும்
நம்மையே)
நோக்குபவர்.
38:31.
நன்கு பயிற்சியளிக்கப்பட்ட உயர்ந்த குதிரைகள்
(ஒரு)
மாலை நேரத்தில் அவர் முன் கொண்டுவரப்பட்ட பொழுது
38:32. ''நிச்சயமாக
நான்
(சூரியன்
இரவாகிய)
திரைக்குள் மறைந்து விடும்வரை,
என்னுடைய இறைவனை நினைப்பது விட்டும் இந்த நல்ல
பொருட்களின் மேல் அதிக அன்பாக அன்பு
பாராட்டிவிட்டேன்""
என
அவர் கூறினார்.
38:33. ''என்னிடம்
அவற்றை திரும்ப கொண்டு வாருங்கள்
(என்று
கூறினார் அவை திரும்ப கொண்டு வரப்பட்டபின்)
அவற்றின் பின்னங்கால்களையும் கழுத்துகளையும்
தடவிக் கொடுத்தார்.""
38:34.
இன்னும் நாம் ஸ{லைமானைத்
திட்டமாகச் சோதித்தோம்;
அவருடைய அரியணையில் ஒரு முண்டத்தை எறிந்தோம்
-
ஆகவே அவர்
(நம்மளவில்)
திரும்பினார்.
38:35. ''என்
இறைவனே!
என்னை மன்னித்தருள்வாயாக!
அன்றியும்,
பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் அரசாங்கத்தை
எனக்கு நீ நன்கொடையளிப்பாயாக!
நிச்சயமாக நீயே மிகப்பொருங் கொடையாளியாவாய்""
எனக் கூறினார்.
38:36.
ஆகவே,
நாம் அவருக்குக் காற்றை வசப்படுத்திக்
கொடுத்தோம்;
அது
அவருடைய கட்டளைப்படி அவர் நாடிய
இடங்களுக்கெல்லாம் இலகுவாக
(அவரைச்
சுமந்து)
சென்று கொண்டிருந்தது.
38:37.
மேலும்,
ஷைத்தான்களிலுள்ள கட்டடங்கட்டுவோர்,
முத்துக்குளிப்போர் ஆகிய யாவரையும்;
38:38.
சங்கிலியால் விலங்கிடப்பட்டிருந்த வேறு பலரையும்
(நாம்
அவருக்குக் வசப்படுத்திக் கொடுத்தோம்).
38:39. ''இது
நம்முடைய நன்கொடையாகும்;
(நீர்
விரும்பினால் இவற்றைப் பிறருக்குக் கொடுக்கலாம்,
அல்லது கொடாது நிறுத்திக் கொள்ளலாம்
-
கேள்வி கணக்கில்லாத நிலையில்
(என்று
நாம் அவரிடம் கூறினோம்).
38:40.
மேலும்,
நிச்சயமாக அவருக்கு,
நம்மிடத்தில் நெருங்கிய
(அந்தஸ்)தும்,
அழகிய இருப்பிடமும் உண்டு.
38:41.
மேலும்
(நபியே!)
நம்முடைய
(நல்)
அடியார் அய்யூபை நினைவு கூர்க!
அவர் தம் இறைவனிடம்,
''நிச்சயமாக
ஷைத்தான் எனக்குத் துன்பத்தையும்,
வேதனையையும் கொடுத்து விட்டான்""
(என்று
கூறிய போது);
38:42. ''உம்முடைய
காலால்
(பூமியைத்)
தட்டும்""
(அவ்வாறு
தட்டவே ஒரு நீருற்றுப் பொங்கி வந்ததும்)
''இதோ
குளிர்ச்சியான குளிக்குமிடமும்,
பானமும்
(உமக்கு)
இருக்கின்றன""
(என்று
சொன்னோம்).
38:43.
பின்னர் நம்மிடத்திலிருந்துள்ள கிருபையாகவும்
அறிவுடையயோருக்கு நினைவுட்டுதலாகவும் அவருடைய
குடும்பத்தையும்,
பின்னும் அதைப் போன்ற ஒரு தொகையினரையும்
(அவருக்குக்
குடும்பமாகக்)
கொடுத்தோம்.
38:44. ''ஒரு
பிடி புல்
(கற்றையை)
உம்
கையில் எடுத்து,
அதைக் கொண்டு
(உம்
மனைவியை)
அடிப்பீராக நீர்
(உம்)
சத்தியத்தை முறிக்கவும் வேண்டாம்""
(என்று
கூறினோம்).
நிச்சயமாக நாம் அவரைப் பொறுமையுடையவராகக்
கண்டோம்;
அவர் சிறந்த நல்லடியார்
-
நிச்சயமாக அவர்
(எதிலும்
நம்மை)
நோக்கியவராகவே இருந்தார்.
38:45. (நபியே!
ஆத்மீக)
ஆற்றலும்,
அகப்பார்வையும் உடையவர்களாயிருந்த நம்
அடியார்களான இப்றாஹீம்,
இஸ்ஹாஃக்,
யஃகூப் ஆகியோரையும் நினைவு கூர்வீராக!
38:46.
நிச்சயமாக,
நாம் இவர்களை
(மறுமை)
வீட்டை நினைவூட்டுவதற்காகவே பூரண
பரிசுத்தமானவர்களாக(த்
தேர்ந்தெடுத்தோம்).
38:47.
நிச்சயமாக இவர்கள் நம்மிடத்தில்
தேர்தெடுக்கப்பட்ட நல்லோர்களில்
நின்றுமுள்ளவர்கள்.
38:48.
இன்னும்
(நபியே!)
நினைவு கூர்வீராக இஸ்மாயீலையும்,
அல்யஸவுவையும்,
துல்கிஃப்லையும்
- (இவர்கள்)
எல்லோரும் நல்லோர்களில் உள்ளவராகவே இருந்தனர்.
38:49.
இது
நல்லுபதேசமாக இருக்கும்;
நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு அழகிய
இருப்பிடமுண்டு.
38:50. 'அத்னு"
என்னும் சுவனபதிகளின் வாயில்கள் அவர்களுக்காகத்
திறந்து வைக்கப்பட்டவையாக இருக்கும்.
38:51.
அதில் அவர்கள்
(பஞ்சணைகள்
மீது)
சாய்ந்தவர்களாக,
அங்கே ஏராளமான கனிவகைகளையும்,
பானங்களையும் கேட்(டு
அருந்திக் கொண்டிருப்)பார்கள்.
38:52.
அவர்களுடன் கீழ்நோக்கிய பார்வையும்,
ஒரே
வயதுமுடைய அமர கன்னிகைகளும் இருப்பார்கள்.
38:53. ''கேள்வி
கணக்குக்குரிய நாளுக்கென உங்களுக்கு
வாக்களிக்கப்பட்டிருந்தது இதுதான்.
38:54. ''நிச்சயமாக
இவை நம்முடைய கொடையாகும்;
இதற்கு
(என்றும்)
முடிவே இராது""
(என்று
அவர்களுக்குக் கூறப்படும்).
38:55.
இது
(நல்லோருக்காக)
ஆனால் நிச்சயமாகத் தீயவர்களுக்கு மிகக் கெட்ட
தங்குமிடம் இருக்கிறது.
38:56. (அதுவே
நரகம்)
ஜஹன்னம்
-அதில்
அவர்கள் நுழைவார்கள்;
அது
தங்குமிடங்களில் மிகவும் கெட்டது.
38:57.
இது
(தீயோர்களுக்காக)
ஆகவே அவர்கள் அதனைச் சுவைத்துப் பார்க்கட்டும்
-
கொதிக்கும் நீரும்;
சீழும் ஆகும்.
38:58.
இன்னும்
(இதைத்தவிர)
இது
போன்ற பல
(வேதனைகளும்)
உண்டு.
38:59. (நரகவாதிகளின்
தலைவர்களிடம்;)
''இது
உங்களுடன் நெருங்கிக் கொண்டு
(நரகம்)
புகும் சேனையாகும்;
இவர்களுக்கு அங்கு சங்கை இருக்காது நிச்சயமாக
இவர்கள் நரகில் சேர்ப்பவர்கள்""
(என்று
கூறப்படும்).
38:60.
அதற்கு அவர்கள்;
''அப்படியல்ல,
நீங்களும் தான்!
உங்களுக்கும் சங்கை கிடையாது!
நீங்கள் தாம் எங்களுக்கு இதை
(இந்
நிலையை)
முற்படுத்தி வைத்தீர்கள்;
(ஆதலால்
நம் இரு கூட்டத்தாருக்கும்)
தங்குமிடம் மிகவும் கெட்டது!""
என்று கூறுவர்.
38:61. ''எங்கள்
இறைவா!
எவர் எங்களுக்கு இதை
(இந்நிலையை)
முற்படுத்தி வைத்தாரோ அவருக்கு நரகத்தின்
வேதனையை இரு மடங்காக அதிகப்படுத்துவாயாக!""
என்று அவர்கள் கூறுவர்.
38:62.
இன்னும்,
அவர்கள்;
''நமக்கு
என்ன நேர்ந்தது?
மிகக் கெட்ட மனிதர்களிலுள்ளவர்கள் என்று நாம்
எண்ணிக் கொண்டிருந்தோமே,
அவர்களை
(நரகத்தில்)
ஏன்
காணவில்லை?
38:63. ''நாம்
அவர்களைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தோமா?
அல்லது
(அவர்களைக்
காணமுடியாதவாறு)
அவர்களை விட்டும் நம் பார்வைகள் சருகி விடடனவா?""
என்று கூறுவர்.
38:64.
நிச்சயமாக இது தான் உண்மை.
நரகவாசிகள்
(இவ்வாறு
தான்)
ஒருவரோடு ஒருவர் தர்க்கம் செய்து கொள்வார்கள்.
38:65. (நபியே!)
நீர் கூறுவீராக
''நான்
அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே,
அன்றியும் ஏகனும்,
(யாவரையும்)
அடக்கியாளபவனுமாகிய அல்லாஹ்வைத் தவிர நாயன்
இல்லை.
38:66. ''(அவனே)
வானங்களுக்கும்,
பூமிக்கும்,
இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றுக்கும் இறைவனாக
இருக்கின்றான்;
அவன்
(யாவரையும்)
மிகைத்தவன்;
மிகவும் மன்னிப்பவன்.""
38:67. (நபியே?)
கூறுவீராக
''(நான்
உங்களுக்கு எடுத்துரைக்கும்)
இது
மகத்தான செய்தியாகும்.
38:68. ''நீங்களோ
அதைப் புறக்கணித்தவர்களாக இருக்கிறீர்கள்.
38:69. ''மேலான
கூட்டத்தார் தர்க்கித்துக் கொண்டது பற்றி எனக்கு
ஒன்றும் தெரியாது.
38:70. ''நிச்சயமாக
நாம் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்""
என்பதற்காக அல்லாமல் எனக்கு வஹீ
அறிவிக்கப்படவில்லை.
38:71. (நபியே!
நினைவு கூர்வீராக!)
''நிச்சயமாக
நாம் களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்க
இருக்கின்றேன்""
என்று உம்முடைய இறைவன் கூறிய வேளையில்;
38:72. ''நான்
அவரைச் செவ்வைப்படுத்தி,
எனது ஆவியிலிருந்து அவருக்குள் ஊதிய பொழுது
அவருக்கு நீங்கள் விழுந்து ஸ{ஜூது
செய்யுங்கள்""
(எனக்
கூறியதும்);
38:73.
அது
சமயம் மலக்குகள் யாவரும் ஸ{ஜூது
செய்தார்கள்.
38:74.
இப்லீஸைத் தவிர அவன் பெருமை அடித்தவனாக
(நம்
கட்டளையை மறுத்த)
காஃபிர்களில்
(ஒருவனாக)
ஆகிவிட்டான்.
38:75. ''இப்லீஸே!
நான் என்னுடைய கைகளால் படைத்தவருக்கு ஸ{ஜூது
செய்வதை விட்டும் உன்னைத்தடுத்தது எது?
பெருமையடிக்கிறாயா?
அல்லது நீ உயர்ந்தவர்களில்
(ஒருவனாக)
ஆகிவிட்டாயா?""
என்று
(அல்லாஹ்)
கேட்டான்.
38:76. ''நானே
அவரைவிட மேலானவன்;
(ஏனெனில்)
என்னை நீ நெருப்பிலிருந்து படைத்தாய்;
ஆனால் அவரையோ நீ களிமண்ணிலிருந்து படைத்தாய்""
என்று
(இப்லீஸ்)
கூறினான்.
38:77. (அப்போது
இறைவன்)
''இதிலிருந்து
நீ வெளியேறு!
ஏனெனில் நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாகி
விட்டாய்""
எனக் கூறினான்.
38:78. ''இன்னும்,
நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள்வரை உன்மீது என்
சாபம் இருக்கும்""
(எனவும்
இறைவன் கூறினான்).
38:79. ''இறைவனே!
அவர்கள்
(இறந்து)
எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம்
கொடுப்பாயாக""
என்று அவன் கேட்டான்.
38:80. ''நிச்சயமாக
நீ அவகாசம் சொடுக்கப்பட்டவர்களில் உள்ளவனே""
என
(அல்லாஹ்)
கூறினான்.
38:81. ''குறிப்பிட்டகாலத்தின்
நாள்வரையில்""
(உனக்கு
அவகாசம் உண்டு எனவும் கூறினான்.
38:82.
அப்பொழுது
''உன்
கண்ணியத்தின் மீது சத்தியமாக,
நிச்சயமாக நான் அவர்கள் யாவரையும் வழிகெடுப்பேன்""
என்று
(இப்லீஸ்)
கூறினான்.
38:83. ''(எனினும்)
அவர்களில் அந்தரங்க சுத்தியான உன் அடியார்களைத்
தவிர""
(என்றான்).
38:84. (அதற்கு
இறைவன்;)
''அது
உண்மை உண்மையையே நான் கூறுகிறேன் என்று இறைவன்
கூறினான்.
38:85. ''நிச்சயமாக,
உன்னைக் கொண்டும்,
அவர்களில் உன்னைப் பின்பற்றியவர்கள் அனைவரைக்
கொண்டும் நரகத்தை நான் நிரப்புவேன்""
(என்றான்)
38:86. (நபியே!)
நீர் கூறும்;
(''இக்
குர்ஆனுக்காக)
நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை
அன்றியும்,
(இதை
இட்டுக் கட்டி)
சிரமம் எடுத்துக் கொண்டவனும் அல்லன்.
38:87. ''இது
அகிலங்களுக்கெல்லாம் நல்லுபதேசமேயன்றி வேறில்லை.""
38:88. ''நிச்சயமாக
(சிறிது)
காலத்திற்குப் பின்னர்,
நீங்கள் இதன் உண்மையைத் திட்டமாக அறிந்து
கொளவீர்கள்.""
|