|
அத்தியாயம்-40
ஸ_ரத்துல் முஃமின்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
40:1. ஹா, மீம்.
40:2. (யாவரையும்) மிகைத்தோனும், மிக
அறிந்தோனுமாகிய அல்லாஹ்விடமிருந்து
இறக்கியருளப்பட்டதே இவ்வேதம்.
40:3. பாவத்தை மன்னிப்பவனும், தவ்பாவை -
மன்னிப்புக் கேட்பதை - அங்கீகரிப்பவனும்,
தண்டிப்பதில் கடுமையானவனும், தயை மிக்கவனும்
ஆவான், அவனைத் தவிர நாயன் இல்லை அவனிடமே
(யாவரும்) மீள வேண்டியதிருக்கிறது.
40:4. நிராகரிப்பவர்களைத் தவிர(வேறு எவரும்)
அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றி தர்க்கம் செய்ய
மாட்டார்கள். ஆகவே, பட்டணங்களில் அவர்களுடைய
(ஆடம்பர) நடமாட்டம் உம்மை ஏமாற்றி விட வேண்டாம்.
40:5. இவர்களுக்கு முன்னரே நூஹின் சமூகத்தாரும்,
அவர்களுக்குப் பிந்திய கூட்டங்களும்
(நபிமார்களைப்) பொய்ப்பித்தார்கள்; அன்றியும்
ஒவ்வொரு சமுதாயமும் தம்மிடம் வந்த தூதரைப்
பிடிக்கக் கருதி, உண்மையை அழித்து விடுவதற்காகப்
பொய்யைக் கொண்டும் தர்க்கம் செய்தது. ஆனால் நான்
அவர்களைப் பிடித்தேன்; (இதற்காக அவர்கள் மீது
விதிக்கப் பெற்ற) என் தண்டனை எவ்வாறு இருந்தது?
40:6. இவ்வாறே, நிராகரிப்பவர்கள் நிச்சயமாக
நரகவாசிகள்தாம் என்ற உம்முடைய இறைவனின் வாக்கு
அவர்கள் மீது உறுதியாகிவிட்டது.
40:7. அர்ஷை சுமந்து கொண்டிருப்பவர்களும், அதைச்
சுற்றியுள்ளவர்களும் தங்கள் இறைவனின் புகழைக்
கொண்டு அவனைத் தஸ்பீஹ{ செய்து கொண்டும்
இருக்கிறார்கள்; அவன் மேல் ஈமான் கொண்டவர்களாக
மற்ற ஈமான் கொண்டவர்களுக்காக மன்னிப்புக்
கோருகின்றனர்; ''எங்கள் இறைவனே! நீ
ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப்
பொருட்களையும் சூழந்து இருக்கிறாய்! எனவே,
பாவமீட்சி கோரி, உன் வழியைப்
பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக.
இன்னும் அவர்களை நரக வேதனையிலிருந்தும்
காத்தருள்வாயாக!
40:8. ''எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு
வாக்களித்திருக்கும், நிலையான சுவர்க்கத்தில்,
அவர்களையும், அவர்கள் மூதாதையர்களிலும், அவர்கள்
மனைவியர்களிலும், அவர்கள் சந்ததியார்களிலும்
நன்மை செய்தோரையும் பிரவேசிக்கச் செய்வாயாக.
நிச்சயமாக நீ தான் (யாவரையும்) மிகைத்தவன்;
ஞானம் மிக்கவன்.
40:9. ''இன்னும், அவர்களைத் தீமைகளிலிருந்து
காப்பாயாக! அந்நாளில் நீ யாரை தீமைகளிலிருந்து
காத்துக் கொள்கிறாயோ, அவர்களுக்கு நிச்சயமாக நீ
அருள் புரிந்து விட்டாய் - அதுவே மகத்தான
வெற்றியாகும்"" (என்றும் கூறுவர்).
40:10. நிச்சயமாக நிராகரிப்பவர்களிடம்; ''இன்னு
நீங்கள் உங்கள் ஆன்மாக்களைக் கோபித்துக்
கொள்வதைவிட அல்லாஹ்வுடைய கோபம் மிகப்
பெரியதாகும்; ஏனென்றால் நீங்கள் நம்பிக்கையின்
பால் அழைக்கப்பட்ட போது (அதை) நிராகரித்து
விட்டீர்களே"" என்று அவர்களிடம் கூறப்படும்.
40:11. அதற்கவர்கள்; ''எங்கள் இறைவனே! நீ எங்களை
இருமறை மரணமடையச் செய்தாய்; இருமறை நீ எங்களை
உயிர்ப்பித்தாய்; ஆகையால் நாங்கள் (இப்பொழுது)
எங்கள் பாவங்களை ஒப்புக் கொண்டோம் - எனவே
(இதிலிருந்து தப்பி) வெளியேர ஏதும் வழியுண்டா?""
எனக் கூறுவர்.
40:12. (பதில் கூறப்படும்;) ''அதற்குக் காரணம்
அல்லாஹ் ஒருவனே (வணக்கத்திற்குரியவன்; எனவே அவனை
வணங்குங்கள்) என்று அழைக்கப்பட்ட போது நீங்கள்
நிராகரித்தீர்கள்; ஆனால், அவனுக்கு (எதையும்)
இணையாக்கப்பட்டால் (அதன் மீது) நீங்கள்
நம்பிக்கை கொண்டீர்கள்; ஆகவே இத்தீர்ப்பு மிக்க
மேலானவனும், மகாப் பெரியவனுமான அல்லாஹ்வுக்கே
உரியது.""
40:13. அவனே தன் அத்தாட்சிகளை உங்களுக்குக்
காண்பிக்கிறான்; உங்களுக்கு வானத்திலிருந்து
உணவையும் இறக்கிவைக்கிறான் - எனவே அவனையே
முன்னோக்கி நிற்பவர்களைத் தவிர (வேறு யாரும்)
நல்லுணர்வு பெறமாட்டார்கள்.
40:14. ஆகவே, காஃபிர்கள் வெறுத்த போதிலும்,
நீங்கள் முற்றிலும் அவனுக்கே வழிபட்டு
மார்க்கத்தில் பரிசுத்தத்துடன் அல்லாஹ் ஒருவனையே
(பிரார்த்தித்து) அழையுங்கள்.
40:15. (அவனே) அந்தஸ்துகளை உயர்த்துபவன்;
அர்ஷ{க்குரியவன்; சந்திப்புக்குரிய (இறுதி)
நாளைப்பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக
தன் அடியார்களில் தான் நாடியவர்கள் மீது
கட்டளையை வஹீ மூலம் இறக்கி வைக்கிறான்.
40:16. அந்நாளில் அவர்கள் வெளிப்பட்டு
வருவார்கள்; அவர்களுடைய எந்த விஷயமும்
அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இருக்காது அந்நாளில்
ஆட்சி யாருக்குடையதாக இருக்கும் - ஏகனாகிய,
அடக்கியாளும் வல்லமை மிக்க அல்லாஹ்வுக்கே
யாகும்.
40:17. அந்நாளில் ஒவ்வோர் ஆத்மாவும், அது
சம்பாதித்ததற்குக் கூலி கொடுக்கப்படும்;
அந்நாளில் எந்த அநியாயமும் இல்லை. நிச்சயமாக,
அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகவும்
தீவிரமானவன்.
40:18. (நபியே!) அண்மையில் வரும் (கியாம)
நாளைப்பற்றி அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை
செய்வீராக இருதயங்கள் விசனத்தால் நிரம்பி
தொண்டைக்குழிகளுக்கு வரும் (அவ்)வேளையில்,
அநியாயக்காரர்களுக்கு இரக்கப்படும் நண்பனோ,
அல்லது ஏற்றுக்கொள்ளப்படும் சிபாரிசு செய்பவனோ
இருக்கமாட்டான்.
40:19. கண்கள் செய்யும் மோசத்தையும், உள்ளங்கள்
மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான்.
40:20. மேலும், அல்லாஹ் உண்மையைக் கொண்டே
தீர்ப்பளிப்பவன். அன்றியும், அவனையன்றி அவர்கள்
(வேறு) எவர்களை அழைத்(துப்
பிரார்த்தித்)தார்களோ, அவர்கள் யாதொரு
விஷயத்தைப் பற்றியும் தீர்ப்புச் செய்ய
மாட்டார்கள் - நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்)
செவியெற்பவனாகவும், தீர்க்கமாகப்
பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
40:21. இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து
இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு
எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா?
அவர்கள், பலத்தாலும், பூமியில் (விட்டுச் சென்ற
பூர்வ)சின்னங்களாலும் இவர்களைவிட
வலிமையுடையவர்களாகவே இருந்தார்கள் - ஆனால்
அவர்களின் பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ்
பிடித்துக் கொண்டான்; இன்னும்
அல்லாஹ்விடமிருந்து அவர்களைக் காப்பாற்ற எவரும்
இல்லை.
40:22. அது (ஏனெனில்) நிச்சயமாக அவர்களிடம்
அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன்
வந்தார்கள்; ஆனால், அவர்கள் நிராகரித்தனர்.
ஆகவே, அல்லாஹ் அவர்களைப் பிடித்தான் - நிச்சயமாக
(அல்லாஹ்) வலிமை மிக்கவன்; தண்டிப்பதில்
கடுமையானவன்.
40:23. மெய்யாகவே நாம் மூஸாவுக்கு நம்முடைய
அத்தாட்சிகளையும், தெளிவான சான்றையும்
கொடுத்தனுப்பினோம்-
40:24. ஃபிர்அவ்ன், ஹாமான், ஃகாரூன்
ஆகியவர்களிடம்; ஆனால் அவர்களோ ''(இவர்)
பொய்யுiரைப்பவர், சூனியக்காரர்"" என்று கூறினர்.
40:25. ஆகவே, அவர் நம்மிடமிருந்து சத்தியத்தை
அவர்களிடம் கொண்டு வந்த போது, அவர்கள்;
''இவருடன் ஈமான் கொண்டிருப்போரின் ஆண்
குழந்தைகளை கொன்று, அவர்களின் பெண் குழந்தைகளை
உயிருடன் விட்டு விடுங்கள்"" என்று கூறினார்கள்;
மேலும் காஃபிர்களின் சதி வழிகேட்டிலன்றி
வேறில்லை.
40:26. மேலும் ஃபிர்அவ்ன் கூறினான்; ''மூஸாவை
கொலை செய்ய என்னை விட்டு விடுங்கள்! இன்னும்
இவர் தம்முடைய இறைவனை அழை(த்துப்
பிரார்த்தி)க்கட்டும்; நிச்சயமாக இவர் உங்கள்
மார்க்கத்தை மாற்றிவிடுவார்; அல்லது இப்பூமியில்
குழப்பத்தை வெளியாக்குவார் என்று நான்
அஞ்சுகிறேன்"" என்று.
40:27. மூஸா கூறினார்; ''கேள்வி கணக்குக்
கேட்கப்படும் நாள் மீது நம்பிக்கை கொள்ளாத,
பெருமையடிக்கும் எல்லோரையும் விட்டு, என்னுடைய
இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும்
இருப்பவனிடம் நிச்சயமாக நான் பாதுகாவல்
தேடுகிறேன்.""
40:28. ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் தம் ஈமானை
மறைத்து வைத்திருந்த ஒரு நம்பிக்கை கொண்டவர்
கூறினார்; ''என் இறைவன் அல்லாஹ்வே தான்!"" என்று
ஒரு மனிதர் கூறுவதற்காக அவரை நீங்கள் கொன்று
விடுவீர்களா? மேலும் அவர் மெய்யாகவே உங்கள்
இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகளை உங்களிடம்
கொண்டு வந்துள்ளார். எனவே அவர் பொய்யராக
இருந்தால், அப்பொய் அவருக்கே (கேடு) ஆகும்;
ஆனால் அவர் உண்மையாளராக இருந்தால், அவர்
உங்களுக்கு வாக்களிக்கும் சில (வேதனைகள்) உங்களை
வந்தடையுமே! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறிய
பொய்யரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.""
40:29. ''என்னுடைய சமூகத்தார்களே! இன்று ஆட்சி
உங்களிடம்தான் இருக்கிறது நீங்கள் தாம்
(எகிப்து) பூமியில் மிகைத்தவர்களாகவும்
இருக்கின்றீர்கள்; ஆயினும் அல்லாஹ்வின் தண்டனை
நமக்கு வந்து விட்டால், நமக்கு உதவி செய்பவர்
யார்?"" என்றும் கூறினார்) அதற்கு ''நான் (உண்மை
எனக்) காண்பதையே உங்களுக்கு நான்
காண்பிக்கிறேன்; நேரான பாதையல்லாது (வேறு)
எதையும் நான் உங்களுக்கு காண்பிக்கவில்லை"" என
ஃபிர்அவ்ன் கூறினான்.
40:30. நம்பிக்கை கொண்டிருந்த அவர் இன்னும்
கூறினார்; ''என்னுடைய சமூகத்தாரே! (அழிந்து போன
மற்ற) கூட்டத்தினர்களின் நாட்களைப் போன்றவை
உங்கள் மீது வந்து விடுமே என்று நான் நிச்சயமாக
பயப்படுகிறேன்.""
40:31. ''நூஹ{டைய சமூகத்திற்கும், இன்னும்
'ஆது", 'ஸமூது"டைய சமூகத்திற்கும்,
அவர்களுக்குப் பின்னுள்ளவர்களுக்கும் உண்டான
நிலையைப் போன்று (உங்களுக்கு நிகழ்ந்து விடுமோ
எனப் பயப்படுகிறேன்); ஆனால் அல்லாஹ் (தன்)
அடியார்களுக்கு அநியாயம் செய்ய நாடமாட்டான்
(என்றும்).
40:32. ''என்னுடைய சமூகத்தாரே! உங்கள் மீது
அழைக்கப்படும் (தீர்ப்பு) நாளைப் பற்றியும் நான்
பயப்படுகிறேன்.
40:33. ''அல்லாஹ்வை விட்டும் உங்களைக்
காப்பாற்றுபவர் எவருமில்லாத நிலையில் நீங்கள்
பின் வாங்கும் நாள் (அது) அன்றியும் அல்லாஹ்
யாரைத் தவறான வழியில் விட்டுவிடுகின்றானோ,
அவனுக்கு நேர்வழி காட்டுவோர் எவருமில்லை.
40:34. ''மேலும், முற்காலத்தில் திட்டமாக
யூஸ{ஃப் தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம்
வந்தார், எனினும் அவர் இறந்து விடும் வரையில்,
அவர் உங்களிடம் கொண்டு வந்ததைப் பற்றி நீங்கள்
சந்தேகத்திலேயே இருந்தீர்கள்; இறுதியில் (அவர்
இறந்தபின்) ''அவருக்குப் பின் எந்த ரஸ_லையும்
(தூதரையும்) அல்லாஹ் அனுப்பவே மாட்டான்""
என்றும் கூறினீர்கள்; இவ்வாறே, எவர் வரம்பு
மீறிச் சந்தேகிக்கிறாரோ அவரை அல்லாஹ்
வழிகேட்டில் விட்டு விடுகிறான்.
40:35. ''(இறைவனிடமிருந்து) தங்களுக்கு வந்த
யாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப்
பற்றித் தர்க்கம் செய்வது, அல்லாஹ்விடத்திலும்
ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும்
வெறுக்கப்பட்டதாகும்; இவ்வாறே, பெருமையடித்து
ஆணவம் கொள்ளும் ஒவ்வோர் இருதயத்தின் மீதும்
அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான்"" (என்றும்
அவர் கூறினார்).
40:36. (இவ்வளவு உபதேசித்த பின்னரும்;) ''ஹாமானே
உயரமான ஒரு கோபுரத்தை எனக்காக நீ கட்டுவாயாக -
நான் (மேலே செல்வதற்கான) பாதைகளைப் பெறும்
பொருட்டு!
40:37. ''(ஆம்) வானங்களின் பாதைகளை அடைந்து
மூஸாவுடைய ஆண்டவனை நான் காண வேண்டும்; எனினும்
அவர் பொய் சொல்லுகிறார் என்றே நிச்சயமாக நான்
எண்ணுகிறேன்;"" என ஃபிர்அவ்ன் கூறினான். இவ்வாறே
ஃபிர்அவ்னுக்கு அவனுடைய தீய செயல்கள்
அழகாக்கப்பட்டன இன்னும் (நேர்) வழியிலிருந்து
அவன் தடுக்கப்பட்டான்; ஃபிர்அவ்னுடைய சதி
அழிவில்லாமல் (வேறு எவ்விதமாகவும்) முடிய
வில்லை.
40:38. ஈமான் கொண்டிருந்த அம்மனிதர் மேலும்
கூறினார்; ''என்னுடைய சமூகத்தாரே! என்னைப்
பின்பற்றுங்கள்; நான் உங்களுக்கு நேர்மையுடைய
பாதையைக் காண்பிக்கிறேன்.
40:39. ''என்னுடைய சமூகத்தாரே! இவ்வுலக
வாழ்க்கையெல்லாம் அற்ப சுகம்தான்; அன்றியும்
நிச்சயமாக, மறுமையோ - அதுதான்
(என்றென்றுமிருக்கும்) நிலையான வீடு.
40:40. ''எவர் தீமை செய்கிறாரோ, அவர் அதைப்
போன்றதையே கூலியாகக் கொடுக்கப்படுவார்; எவர்
ஒருவர், ஆணோ அல்லது பெண்ணோ முஃமினான நிலையில்
ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறாரோ அவர்கள்
சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்; அதில்
கணக்கில்லாது அவர்கள் உணவளிக்கப்படுவார்கள்.
40:41. ''என்னுடைய சமூகத்தாரே! எனக்கென்ன? நான்
உங்களை ஈடேற்றத்தின்பால் அழைக்கிறேன்; ஆனால்
நீங்களோ என்னை (நரக) நெருப்பினால்
அழைக்கிறீர்கள்.
40:42. ''நான் அல்லாஹ்வுக்கு (மாறு செய்து அவனை)
நிராகரிக்க வேண்டுமென்றும், எனக்கு எதைப்பற்றி
அறிவு இல்லையோ அதை நான் அவனுக்கு இணைவைக்க
வேண்டுமென்றும் என்னை அழைக்கின்றீர்கள். ஆனால்
நானோ யாவரையும் மிகைத்தவனும், மிக
மன்னிப்பவனுமாகியவனிடம் அழைக்கின்றேன்.
40:43. ''என்னை நீங்கள் எதன் பக்கம்
அழைக்கின்றீர்களோ, அது நிச்சயமாக இவ்வுலகிலும்
மறுமையிலும் (நாயன் என) அழைப்பதற்கு சிறிதும்
தகுதியில்லாதது மேலும் நிச்சயமாக நாம்
அல்லாஹ்விடமே திரும்பச் செல்வோம். இன்னும்
நிச்சயமாக வரம்பு மீறியவர்கள் நரக வாசிகளாகவே
இருக்கிறார்கள்.
40:44. ''எனவே, நான் உங்களுக்குச் சொல்வதை
நீங்கள் விரைவில் உணர்வீர்கள்; மேலும், நான் என்
காரியத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுகிறேன் -
நிச்சயமாக அல்லாஹ் அடியார்களைக் கண்ணுற்றவனாகவே
இருக்கின்றான்"" (என்றும் அவர் கூறினார்).
40:45. ஆகவே, அவர்கள் திட்டமிட்ட தீமைகளை
விட்டும் அல்லாஹ் அவரைக் காத்துக் கொண்டான்.
மேலும் வேதனையின் கேடு ஃபிர்அவ்னின்
கூட்டத்தாரைச் சூழ்ந்து கொண்டது.
40:46. காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக
நெருப்பின் முன் கொண்டுவரப்படுவார்கள்; மேலும்
நியாயத் தீர்ப்பு காலம் நிலைபெற்றிருக்கும்
நாளில் ''ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான
வேதனையில் புகுத்துங்கள்"" (என்று கூறப்படும்).
40:47. அவர்கள் நரக நெருப்பில் தர்க்கம் செய்து
கொண்டு, பலஹீனர்கள் பெருமை அடித்துக்
கொண்டிருந்தோரை நோக்கி; ''நிச்சயமாக நாங்கள்
உங்களைப் பின்பற்றுபவர்களாக இருந்தோம் - எனவே,
எங்களை விட்டும் இந்நெருப்பிலிருந்து ஒரு
பகுதியையாவது விலக்கி வைப்பீர்களாக?"" என்று
அவர்கள் சொல்லும் வேளையை (நினைவுட்டுவீராக!).
40:48. (அப்போது) ''நிச்சயமாக நாம் எல்லோருமே
இதிலிருக்கிறோம்; நிச்சயமாக அல்லாஹ் (தன்)
அடியார்களுக்கிடையில் தீர்ப்புச் செய்து
விட்டான்"" என்று பெருமை அடித்துக்
கொண்டிருந்தவர்கள் கூறுவார்கள்.
40:49. ''இவ்வேதனையை ஒரு நாளைக்கு (மட்டுமாவது)
எங்களுக்கு இலேசாக்கும்படி உங்கள் இறைவனிடத்தில்
பிரார்த்தனை செய்யுங்கள்"" என்று (நரக)
நெருப்பில் இருப்பவர்கள் நரகத்தின் காவலாளிகளை
நோக்கி கூறுவார்கள்.
40:50. ''உங்கள் ரஸ_ல்கள் (தூதர்கள்) உங்களிடம்
தெளிவான அத்தாட்சிகளுடன் வரவில்லையா?"" என
(அக்காவலாளிகள்) கேட்பார்கள். ''ஆம்!
நிச்சயமாக"" என அவர்கள் பதில் கூறுவார்கள்.
''அவ்வாறாயின் நீங்களே பிரார்த்தனை செய்து
கொள்ளுங்கள்"" என்று அவர்கள் கூறுவர். ஆனால்
காஃபிர்களின் பிரார்த்தனை வழி கேட்டிலில்லாமல்
இல்லை.
40:51. நிச்சயமாக, நாம் நம்முடைய
ரஸ_ல்(தூதர்)களுக்கும், ஈமான்
கொண்டவர்களுக்கும், இவ்வுலக வாழ்க்கையிலும்,
சாட்சிகள் நிலைபெறும் நாளிலும் உதவி செய்வோம்.
40:52. அந்நாளில், அநியாயக்காரர்களுக்கு அவர்கள்
புகழ் கூறுதல் பயனளிக்காது - அவர்களுக்கு
லஃனத்தும் (சாபமும்) உண்டு தீய இருப்பிடமும்
அவர்களுக்குண்டு.
40:53. நிச்சயமாக மூஸாவுக்கு நேர்வழி (காட்டும்
வேதத்தை) நாம் அளித்தோம் - அன்றியும்
இஸ்ராயீலின் சந்ததியினரை வேதத்திற்கு
வாரிசாக்கினோம்.
40:54. (அது) நேரான வழிகாட்டியாகவும்
அறிவுடையோருக்கு நல்லுபதேசமாகவும் இருந்தது.
40:55. ஆகவே, நீர் பொறுமையுடன் இருப்பீராக.
நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி
உறுதியுடையதாகும். உம் பாவத்திற்காக மன்னிப்புக்
கோருவீராக மாலையிலும் காலையிலும் உம் இறைவனைப்
புகழ்ந்து, தஸ்பீஹ் (துதி) செய்து கொண்டு
இருப்பீராக!
40:56. நிச்சயமாக எவர்கள் தங்களிடம் வந்த
அல்லாஹ்வுடைய வசனங்களைப்பற்றி எந்த
ஆதாரமுமின்றித் தர்க்கம் செய்கின்றார்களோ,
அவர்களுடைய இருதயங்களில் பெருமை தவிர (வேறு
எதுவும்) இல்லை ஆனால் அ(ப் பெருமையான)தை அவர்கள்
அடையவும் மாட்டார்கள்; ஆகவே (நபியே!) நீர்
அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுவீராக! நிச்சயமாக
அவன், யாவற்றையும் செவியேற்பவன், பார்ப்பவன்.
40:57. நிச்சயமாக வானங்களையும், பூமியையும்
படைப்பது, மனிதர்களைப் படைப்பதை விட மிகவும்
பெரிதாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர்
அறிய மாட்டார்கள்.
40:58. குருடரும், பார்வையுடையோரும் சமமாகார்
அவ்வாறே, ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள்
செய்வோரும், தீயோரும் சமமாக மாட்டார்கள்;
உங்களில் சொற்பமானவர்களே (இதைக் கொண்டு)
நல்லுபதேசம் பெறுகிறீர்கள்.
40:59. (விசாரணைக்குரிய) காலம் நிச்சயமாக வந்தே
தீரும்; அதில் சந்தேகமே இல்லை - எனினும்
மனிதர்களில் பெரும்பாலோர் இதில் ஈமான்
கொள்ளவில்லை.
40:60. உங்கள் இறைவன் கூறுகிறான்; ''என்னையே
நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள்
பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள்
என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக்
கொண்டிருக்கிறார்களோ, அவர்கள்
சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.""
40:61. நீங்கள் இளைப்பாறுவதற்காக இரவையும்,
நீங்கள் பார்ப்பதற்காக பகலையும் அல்லாஹ்தான்
படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது
அருள் பொழிகின்றான்; ஆயினும் மனிதர்களில்
பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
40:62. அவன் தான் உங்கள் அல்லாஹ் - உங்கள்
இறைவன் - எல்லாப் பொருட்களையும் படைப்பவன் -
அவனைத் தவிர வேறு நாயனில்லை எனவே நீங்கள்
(சத்தியத்தை விட்டும்) எங்கு
திருப்பப்படுகிறீர்கள்?
40:63. அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக்
கொண்டிருந்தார்களே அவர்களும் இவ்வாறே
திருப்பப்பட்டனர்.
40:64. அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியைத்
தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும்
உண்டாக்கியிருக்கிறான்; மேலும், அவன் தான்
உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களை அழகாக்கி,
சிறந்த ஆகார வசதிகளையும் அளித்தான்; அவன்தான்
அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அகிலதாருக்கெல்லாம்
இறைவனாகிய அல்லாஹ் மிக பாக்கியமுடையவன்.
40:65. அவனே (என்றென்றும்) உயிரோடிருப்பவன்;
அவனையன்றி (வேறு) நாயனில்லை - ஆகவே நீங்கள்
அவனுக்கே முற்றிலும் வழிபட்டு தூய உள்ளத்தோடு
அவனை அழையுங்கள்; அல்ஹம்து லில்லாஹி ரப்பில்
ஆலமீன் - அனைத்துப் புகழும் அகிலங்கள்
எல்லாவற்றையும் படைத்துக் காத்துப்
பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே
ஆகும்.
40:66. (நபியே!) கூறுவீராக ''என்னுடைய
இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகள் எனக்கு
வந்த பொழுது, அல்லாஹ்வையன்றி நீங்கள்
அழைப்பவற்றை வணங்குவதை விட்டும் நிச்சயமாக நான்
தடுக்கப்பட்டுள்ளேன் - அன்றியும் - அகிலத்தின்
இறைவனுக்கே அடிபணிய வேண்டும் என்று
கட்டளையிடப்பட்டிருக்கின்றேன்.""
40:67. அவன்தான் உங்களை மண்ணிலிருந்து
படைத்தான்; பின் இந்திரியத்திலிருந்தும் பின்
அலக் என்னும் நிலையிலிருந்தும் (உருவாக்கி)
உங்களைக் குழந்தையாக வெளியாக்குகிறான்; பின்
நீங்கள் உங்கள் வாலிபத்தை அடைந்து , பின்னர்
முதியோராகுகிறீர்கள்; இதற்கு முன்னர் இறந்து
விடுவோரும் உங்களில் இருக்கின்றனர் - இன்னும்
நீங்கள் ஒரு குறிப்பிட்ட தவணையை அடைவீர்கள்;
(இதிலிருந்து) நீங்கள் உணர்வு பெறும் பொருட்டு
(இதை அறிந்து கொள்ளுங்கள்).
40:68. அவனே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரிக்கச்
செய்கிறான். ஆகவே அவன் ஒரு காரியத்தை(ச்
செய்ய)த் தீர்மானித்தால்; 'ஆகுக!" என்று
அதற்குக் கூறுகிறான். உடன் அது ஆகிவிடுகிறது.
40:69. அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம்
செய்பவர்களை நீங்கள் பார்க்கவில்லையா? எவ்வாறு
அவர்கள் (சத்தியத்தை விட்டும்)
திருப்பப்படுகின்றனர்?
40:70. எவர் இவ்வேதத்தையும், நம்முடைய (மற்ற)
தூதர்கள் கொண்டு வந்ததையும் பொய்ப்பிக்கிறார்களோ
அவர்கள் விரைவிலேயே (உண்மையை) அறிவார்கள்.
40:71. அவர்களுடைய கழுத்துகளில்
மோவாய்க்கட்டைகள் வரை அரிகண்டங்களுடன்
விலங்குகளுடனும் இழுத்துக் கொண்டு வரப்பட்டு
40:72. கொதிக்கும் நீரிலும், பிறகு (நரக)த்
தீயிலும் கரிக்கப்படுவார்கள்.
40:73. பிறகு அவர்களுக்குச் சொல்லப் படும்;
''(அல்லாஹ்வையன்றி,) நீங்கள் (அவனுக்கு)
இணைவைத்துக் கொண்டிருந்தவை எங்கே?"" என்று.
40:74. ''அல்லாஹ்வையன்றி"" (நீங்கள் இணைவைத்துக்
கொண்டிருந்தவை எங்கே என்று கேட்கப்படும்); ''அவை
எங்களை விட்டும் மறைந்து விட்டன அன்றியும்
முன்னர் நாங்கள் (அல்லாஹ்வைத் தவிர எதையும்)
அழைத்துக் கொண்டிருக்கவில்லையே!"" என்று
கூறுவார்கள். இவ்வாறுதான் காஃபிர்களை அல்லாஹ்
வழி கெடச் செய்கிறான்.
40:75. ''இது, நீங்கள் பூமியில் நியாயமின்றிப்
(பெருமையடித்து) மகிழ்ந்து பூரித்துக்
கொண்டிருந்தீர்களே (அதற்கான தண்டனையாகும்).
40:76. ''நீங்கள் நரகத்தின் வாயில்களுள் அதில்
என்றென்றும் தங்குபவர்களாக - பிரவேசியுங்கள்'"
(என்று கூறப்படும்) . எனவே, பெருமையடித்துக்
கொண்டிருந்தவர்களின் தங்குமிடம் மிகவும்
கெட்டது.
40:77. ஆகவே, (நபியே!) நீர் பொறுமையுடன்
இருப்பீராக நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி
உண்மையானது; அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட
சிலவற்றை, நாம் உமக்குக் காண்பித்தாலும் அல்லது
அதற்கு முன்னரே நிச்சயமாக நாம் உம்மை மரணமடையச்
செய்தாலும், அவர்கள் நம்மிடமே
கொண்டுவரப்படுவார்கள்.
40:78. திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை
அனுப்பியிருக்கின்றோம்; அவர்களில் சிலருடைய
வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம்; இன்னும்
எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ
(அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர்
(இவ்விருசாராரில்) எந்தத் தூதரும் அல்லாஹ்வின்
அனுமதியின்றி எந்த அத்தாட்சியையும் கொண்டு
வருவதற்கு (அதிகாரமும்) இல்லை ஆகவே அல்லாஹ்வுடைய
கட்டளைவரும் போது, (அனைவருக்கும்) நியாயமாகத்
தீர்ப்பளிக்கப்படும்; அன்றியும், அந்த இடத்தில்
பொய்யர்கள் தாம் நஷ்டமடைவார்கள்.
40:79. அல்லாஹ்தான் கால் நடைகளை உங்களுக்காக
உண்டாக்கியிருக்கிறான் - அவற்றில் சிலவற்றின்
மீது நீங்கள் சவாரி செய்கிறீர்கள் - இன்னும்
அவற்றி(ல் சிலவற்றி)லிருந்து நீங்கள்
புசிக்கிறீர்கள்.
40:80. இன்னும், அவற்றில் உங்களுக்கு (வேறு பல)
பயன்களும் இருக்கின்றன மேலும் உங்கள்
உள்ளங்களிலுள்ள விருப்பங்களை அதனால் நீங்கள்
நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு, அவற்றின்
மீதும் கப்பல்கள் மீதும் நீங்கள் சுமந்து
செல்லப்படுகிறீர்கள்.
40:81. இன்னும், அவன் தன் அத்தாட்சிகளை
உங்களுக்குக் காண்பிக்கிறான்; ஆகவே அல்லாஹ்வின்
அத்தாட்சிகளில் எதை நீங்கள் மறுப்பீர்கள்?
40:82. இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து
தங்களுக்கு முன்னர் இருந்தவர்களின் முடிவு
எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா?
அவர்கள் இவர்களை விட (எண்ணிக்கையில்)
அதிகமாகவும், பலத்திலும், பூமியில் விட்டுச்
சென்ற சின்னங்களிலும் மிகைத்தவர்களாகவும்
இருந்தார்கள் - எனினும், அவர்கள் சம்பாதித்தது
(எதுவும்) அவர்களுக்குப் பயனளிக்கவில்லை.
40:83. ஆகவே, அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம்
தெளிவான அத்தாட்சிகளுடன் வந்த போது, அவர்கள்
தங்களிடமிருந்த கல்வியைக் கொண்டு பெரும்
மகிழ்ச்சி அடைந்திருந்தார்கள், எனினும், அவர்கள்
பரிகாசம் செய்து கொண்டிருந்ததுவே அவர்களை
சூழ்ந்து கொண்டது.
40:84. எனவே அவர்கள் நம்(கட்டளையால் உண்டான)
வேதனையை கண்டபோது, ''நாங்கள் அல்லாஹ் ஒருவன்
மீதே ஈமான் கொள்கிறோம்; நாங்கள் (அவனுடன்)
இணைவைத்தவற்றை நிராகரிக்கிறோம்"" என்று
கூறினார்கள்.
40:85. ஆயினும், நம் (கட்டளையால் உண்டான)
வேதனையைக் கண்டபோது, அவர்கள் கொண்ட நம்பிக்கை
அவர்களுக்குப் பயனளிக்கவில்லை. (இதுவே)
அல்லாஹ்வுடைய வழியாகும்; அவனுடைய அடியார்களுக்கு
(முன்னரும் இவ்வாறே) நிகழ்ந்திருக்கின்றது.
ஆதலால், அந்நேரத்தில் காஃபிர்கள் நஷ்டத்தையே
அடைந்தார்கள்.
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
|