|
அத்தியாயம்-44
ஸ_ரத்துத்
துகான்
(புகை)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
44:1.
ஹா,
மீம்.
44:2.
தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!
44:3.
நிச்சயமாக,
நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்;
நிச்சயமாக
(அதன்
மூலம்)
அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்.
44:4.
அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும்
தீர்மானிக்கப்படுகிறது.
44:5.
அக்கட்டளை நம்மிடமிருந்து வந்ததாகும்;
நாம் நிச்சயமாக
(தூதர்களை)
அனுப்புபவர்களாக இருந்தோம்.
44:6. (அது)
உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள ரஹ்மத்தாகும்;
நிச்சயமாக,
அவன்
(யாவற்றையும்)
செவியேற்பவன்;
நன்கறிபவன்.
44:7.
நீங்கள் உறுதியுடையவர்களாயிருப்பின்,
வானங்கள்,
பூமி,
இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவை ஆகியவற்றிற்கு
அவனே இறைவன்
(என்பதைக்
காண்பீர்கள்).
44:8.
அவனையன்றி
(வேறு)
நாயன் இல்லை.
அவன் உயிர்ப்பிக்கிறான்;
அவனே மரிக்கச் செய்கிறான்;
அவனே உங்கள் இறைவனாகவும் முன் சென்ற உங்கள்
மூதாதையரின் இறைவனாகவும் இருக்கின்றான்.
44:9.
ஆனால்,
அவர்கள் சந்தேகத்தில் விளையாடிக்
கொண்டிருக்கிறார்கள்.
44:10.
ஆகவே,
வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை
நீர் எதிர் பார்ப்பீராக.
44:11. (அப்புகை)
மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும்;
''இது
நோவினை செய்யும் வேதனையாகும்.""
44:12. ''எங்கள்
இறைவனே!
நீ
எங்களை விட்டும் இந்த வேதனையை நீக்குவாயாக!
நிச்சயமாக நாங்கள் முஃமின்களாக இருக்கிறோம்""
(எனக்
கூறுவர்).
44:13.
நினைவுறுத்தும் நல்லுபதேசம் அவர்களுக்கு எவ்வாறு
(அந்நேரம்)
பயனளிக்கும்?
(முன்னமேயே
சத்தியத்தை)
விளக்குபவரான தூதர் அவர்களிடம்
வந்திருக்கின்றார்.
44:14.
அவர்கள் அவதை விட்டுப் பின் வாங்கிக் கொண்டு
(மற்றவர்களால்
இவர்)
''கற்றுக்
கொடுக்கப்பட்டவர்;
பைத்தியக்காரர்""
எனக் கூறினர்.
44:15.
நிச்சயமாக நாம் வேதனையைச் சிறிது
(காலத்திற்காக)
விலக்குவோம்;
(ஆனால்,
பின்னரும்)
நீங்கள் நிச்சயமாகத்
(தீமையின்
பக்கம்)
திரும்புபவர்களே.
44:16.
ஒருநாள் நாம்
(உங்களைப்)
பெரும் பிடியாகப் பிடிப்போம்;
நிச்சயமாக
(அந்நாளில்)
நாம் பழி தீர்ப்போம்.
44:17.
அன்றியும்,
நாம் இவர்களுக்கு முன்னரே ஃபிர்அவ்னுடைய
சமூகத்தவரை நிச்சயமாகச் சோதித்தோம்;
கண்ணியமான தூதரும் அவர்களிடம் வந்தார்.
44:18.
அவர்
(கூறினார்;)
''என்னிடம்
நீங்கள் அல்லாஹ்வின் அடியார்களை ஒப்படைத்து
விடுங்கள்;
நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய
(இறை)
தூதனாவேன்.
44:19.
அன்றியும்,
''நீங்கள்
அல்லாஹ்வுக்கு எதிராக உங்களை உயர்த்திக்
கொள்ளாதீர்கள்;
நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான சான்றுகளுடன்
வந்திருக்கின்றேன்.
44:20.
அன்றியும்,
''என்னை
நீங்கள் கல்லெறிந்து கொல்லாதிருக்கும் பொருட்டு
நான்,
என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய
அவனிடமே நிச்சயமாகப் பாதுகாவல் தேடுகிறேன்.
44:21. ''மேலும்,
நீங்கள் என் மீது நம்பிக்கை கொள்ளவில்லையாயின்
என்னை விட்டு விலகிக் கொள்ளங்கள்""
(என்று
மூஸா கூறினார்).
44:22. (அவர்கள்
வரம்பு மீறியவர்களாகவே இருந்தார்கள்).
''நிச்சயமாக
இவர்கள் குற்றவாளிகளான சமூகத்தாராகவே
இருக்கிறார்கள்""
என்று தம் இறைவனிடம் பிரார்த்தித்துக் கூறினார்.
44:23. ''என்
அடியார்களை
(அழைத்து)க்
கொண்டு,
இரவில் நீர்
(வேறிடம்)
செல்க நிச்சயமாக நீங்கள பின் தொடரப்படுவீர்கள்""
(என்று
இறைவன் கூறினான்.)
44:24. 'அன்றியும்.
அக்கடலைப் பிளவுள்ளதாகவே விட்டுச் செல்லும்,
நிச்சயமாக அவர்கள்
(அதில்)
மூழ்கடிக்கப்பட வேண்டிய படையினராகவே
இருக்கின்றார்கள்
(எனக்
கூறி""
இறைவன் ஃபிர்அவ்னையும் அவன் படையினரையும்
மூழ்கடித்தான்).
44:25.
எத்தனை தோட்டங்களையும்,
நீர் ஊற்றுக்களையும் அவர்கள் விட்டுச்
சென்றார்கள்?
44:26.
இன்னும்
(எத்தனையோ)
விளைநிலங்களையும் நேர்த்தியான மாளிகைகளையும்
(விட்டுச்
சென்றார்கள்).
44:27.
இன்னும் அவர்கள் இன்பமாக அனுபவித்துக்
கொண்டிருந்த சுகானுபவங்களையும்
(விட்டுச்
சென்றார்கள்).
44:28.
அவ்வாறே
(முடிவு
ஏற்பட்டதும்)
அவற்றிற்கு வேறு சமூகத்தாரை வாரிசாக நாம்
ஆக்கினோம்.
44:29.
ஆகவே,
அவர்களுக்காக வானமும் பூமியும் அழவுமில்லை
(தப்பித்துக்
கொள்ள)
அவகாசமும் கொடுக்கப்பட்டவர்களாகவும் அவர்களில்லை.
44:30.
நாம் இஸ்ராயீலின் சந்ததியை இழிவு தரும்
வேதனையிலிருந்தும் திட்டமாகக் காப்பாற்றினோம்;
44:31.
ஃபிர்அவ்னை விட்டும்
(காப்பாற்றினோம்)
நிச்சயமாக அவன் ஆணவம் கொண்டவனாக,
வரம்பு மீறியவனாக இருந்தான்.
44:32.
நிச்சயமாக,
நாம் நன்கு தெரிந்தே அவர்களை உலக மக்களிலிருந்து
தேர்ந்தெடுத்தோம்.
44:33.
அன்றியும்,
நாம் அவர்களுக்கு அத்தாட்சிகளை கொடுத்தோம்;
அவற்றில் துலக்கமான சோதனை இருந்தது.
44:34.
நிச்சயமாக அவர்கள்
(மக்கா
காஃபிர்கள்)
கூறுகிறார்கள்;
44:35. ''எங்களுக்கு
முதலில் ஏற்படும் மரணத்தைத் தவிர வேறு
எதுவுமில்லை நாங்கள் மீண்டும் எழுப்படுபவர்கள்
அல்லர்.""
44:36. ''நீங்கள்
உண்மையாளர்களாக இருந்தால்,
எங்கள் மூதாதையரை
(திரும்பக்)
கொண்டு வாருங்கள்.""
44:37.
இவர்களும் மேலா?
அல்லது
'துப்பஉ
சமூகத்தார்களும்,
அவர்களுக்கு முன்னருந்தவர்களுமா?
நிச்சயமாக அவர்கள் பாவம் செய்பவர்களாகவே
இருந்தார்கள்;
(ஆகவே)
அவர்களை நாம் அழித்தோம்.
44:38.
மேலும்,
வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே
உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம்
படைக்கவில்லை.
44:39.
இவ்விரண்டையும்,
சத்தியத்தைக் கொண்டேயன்றி நாம் படைக்கவில்லை.
எனினும் அவர்களில் பெரும்பாலோர்
(இதை)
அறியமாட்டார்கள்.
44:40.
நிச்சயமாக
(நியாயத்)
தீர்ப்பு நாள்தாம் அவர்கள் யாவருக்கும்
குறிப்பிட்ட தவணையாகும்.
44:41.
ஒரு
நண்பன் மற்றொரு நண்பனுக்கு எவ்விதப் பயனும்
அளிக்க முடியாத நாள்;
அன்றியும்
(அந்நாளில்)
அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
44:42. (எவர்கள்
மீது)
அல்லாஹ் கிருபை செய்கிறானோ,
அவர்களைத் தவிர
-
நிச்சயமாக அவன்
(யாவரையும்)
மிகைத்தவன்;
மிக்க கிருபையுடையவன்.
44:43.
நிச்சயமாக,
ஜக்கூம்
(கள்ளி)
மரம்
(அதுவே).
44:44.
பாவிகளுக்குரிய உணவு
44:45.
அது
உருக்கப்பட்ட செம்பு போல் இருக்கும்;
வயிறுகளில் அது கொதிக்கும்.
44:46.
வெந்நீர் கொதிப்பதைப் போல்.
44:47. ''அவனைப்பிடித்துக்
கொழுந்து விட்டெரியும் நரகத்தின் மையத்திற்கு
இழுத்துச் செல்லுங்கள்.
44:48. ''பின்னர்,
அவனது தலைக்கு மேல் வேதனை கொடுக்கும் கொதிக்கும்
நீரை ஊற்றுங்கள்.
44:49. ''நீ
(இதைச்)
சுவைத்துப்பார்!
நிச்சயமாக நீ வல்லமை சாலியாகவும்,
சங்கையுடையவனாகவும் இருந்தாய்!
44:50. ''நிச்சயமாக
இதுதான் நீங்கள் சந்தேகித்துக்
கொண்டிருந்தீர்களே அதுவாகும்""
(என்று
அவர்களிடம் சொல்லப்படும்).
44:51.
பயபக்தியுடையவர்கள் நிச்சயமாக
(அவர்கள்)
அச்சமற்ற,
இடத்தில் இருப்பார்கள்.
44:52.
சுவனச் சோலைகளிலும்,
நீர் ஊற்றுகளிலும்
(இருப்பார்கள்).
44:53.
ஸ{ன்துஸ்,
இஸ்தப்ரக்
(ஆகிய
அழகிய பட்டாடைகள்,
பீதாம்பரங்கள்)
அணிந்து ஒருவரை ஒருவர் முகம் நோக்கி
இருப்பார்கள்.
44:54.
இவ்வாறே
(அங்கு
நடைபெறும்)
மேலும் அவர்களுக்கு ஹ_ருல்
ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.
44:55.
அச்சமற்றவர்களாக,
சகல
விதக்கனிவகைகளையும்,
அங்கு கேட்டு(ப்
பெற்றுக்)
கொண்டுமிருப்பார்கள்.
44:56.
முந்திய மரணத்தைத் தவிர,
அங்கு மரணத்தை அவர்கள் அனுபவிக்கமாட்டார்கள்;
மேலும்
(இறைவன்)
அவர்களை நரகத்தின் வேதனையை விட்டும்
காப்பாற்றிவிட்டான்.
44:57. (இதுவே)
உம்முடைய இறைவனின் அருள் கொடையும்;
இதுவே மிகப் பெரிய வெற்றியமாகும்.
44:58.
அவர்கள்
(அறிந்து)
நல்லுபதேசம் பெறுவதற்காக,
இதை
நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம்.
44:59.
ஆகவே,
நீரும் எதிர்பார்ப்பீராக!
அவர்களும் எதிர்பார்த்துக் கொண்டுதான்
இருக்கிறார்கள்.
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
|