|
அத்தியாயம்-45
ஸ_ரத்துல்
ஜாஸியா
(முழந்தாளிடுதல்)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
45:1.
ஹா,
மீம்.
45:2.
இவ்வேதம்,
யாவரையும் மிகைத்தோனும் ஞானம் மிக்கோனுமாகிய
அல்லாஹ்விடமிருந்தே இறக்கியருளப்பட்டது.
45:3.
முஃமின்களுக்கு நிச்சயமாக வானங்களிலும்,
பூமியிலும் அத்தாட்சிகள் இருக்கின்றன.
45:4.
இன்னும் உங்களைப் படைத்திருப்பதிலும்,
அவன் உயிர்ப் பிராணிகளைப் பரப்பியிருப்பதிலும்
(நம்பிக்கையில்)
உறுதியுள்ள சமூகத்தாருக்கு அத்தாட்சிகள்
இருக்கின்றன.
45:5.
மேலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும்,
வானத்திலிருந்து அருள் மாரியை அல்லாஹ் இறக்கி
வைத்து,
இறந்து போன பூமியை அதைக் கொண்டு
உயிர்ப்பிப்பதிலும்;
காற்றுகளை மாறி மாறி வீசச்செய்வதிலும் அறிவுடைய
சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
45:6.
இவை
அல்லாஹ்வுடைய வசனங்கள்,
இவற்றை
(நபியே!)
உம்மீது உண்மையுடன் ஓதிக் காண்பிக்கிறோம்;
அல்லாஹ்வுக்கும் அவனுடைய வசனங்களுக்கும் பின்னர்
இவர்கள் எதனைத் தான் நம்பப் போகிறார்கள்.
45:7. (சத்தியத்தை
புறக்கணித்துப்)
பொய்க் கற்பனை செய்யும் பாவிகள் யாவருக்கும்
கேடுதான்.
45:8.
தன்
மீது ஓதிக்காட்டப்படும் அல்லாஹ்வுடைய வசனங்களைக்
கேட்கிறான்;
பின்பு பெருமையடித்துக் கொண்டு அவன் அதைக்
கேளாதது போல்
(தன்
நிராகரிப்பில்)
பிடிவாதம் செய்கிறான்;
அ(த்தகைய)வனுக்கு
நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயம்
கூறுவீராக.
45:9.
நம்
வசனங்களிலிருந்து ஏதாவது ஒன்றை அவன் அறிந்து
கொண்டால்,
அதைப் பரிகாசமாக எடுத்துக் கொள்கிறான்;
அ(த்தகைய)வர்களுக்கு
இழிவு தரும் வேதனை உண்டு.
45:10.
அவர்களுக்கு முன்னால் நரகம் இருக்கிறது அவர்கள்
சம்பாதித்துக் கொண்டதில் எப்பொருளும்
அவர்களுக்குப் பயன் தராது அல்லாஹ்வையன்றி,
எவற்றை அவர்கள் பாதுகாவலர்களாக எடுத்துக்
கொண்டார்களோ அவையும்
(அவர்களுக்குப்
பயன் தராது)
மேலும்,
அவர்களுக்கு மாபெரும் வேதனையுமுண்டு.
45:11.
இது
(குர்ஆன்)தான்
நேர்வழிகாட்யாகும்,
எவர்கள் தம்முடைய இறைவனின் வசனங்களை நிராகரித்து
விட்டார்களோ,
அவர்களுக்கு நோவினை மிகுந்த கடினமான வேதனையுண்டு.
45:12.
கப்பல்கள் அவன் கட்டளையைக் கொண்டு
(கடலில்)
செல்லும் பொருட்டும்,
நீங்கள் அவனுடைய அருளைத் தேடிக்கொள்ளும்
பொருட்டும்;
மேலும் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டும்
உங்களுக்குக் கடலை வசப்படுத்திக் கொடுத்தவன்
அல்லாஹ்வே ஆவான்.
45:13.
அவனே வானங்களிலுள்ளவை,
பூமியிலுள்ளவை அனைத்தையும் தன் அருளால்
உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்;
அதில் சிந்திக்கும் சமூகத்தாருக்கு நிச்சயமாகப்
பல அத்தாட்சிகள் உள்ளன.
45:14.
ஈமான் கொண்டவர்களுக்கு
(நபியே!)
நீர் கூறிவிடும்;
அல்லாஹ்வுடைய
(தண்டனைக்கான)
நாட்களை நம்பாதவர்களை அவர்கள் மன்னித்து
(அவர்களைப்
பற்றி அல்லாஹ்விடம் பரஞ் சாட்டிவிடட்டும்);
ஜனங்களுக்கு அவர்கள் தேடிக் கொண்ட வினைக்குத்
தக்கபலனை அவன் கொடுப்பான்.
45:15.
எவர் ஸாலிஹான
(நல்ல)
அமலை செய்கிறாரோ அது அவருக்Nகு
நன்மையாகும்;
அன்றியும்,
எவர் தீமையைச் செய்கிறாரோ,
அது
அவருக்கே தீமையாகும்,
பின்னர் உங்கள் இறைவனிடமே நீங்கள்
மீட்டப்படுவீர்கள்.
45:16.
நிச்சயமாக நாம்,
இஸ்ராயீலின் சந்ததியினருக்கு வேதத்தையும்,
அதிகாரத்தையும்,
நுபுவ்வத்தையும் கொடுத்தோம்;
அவர்களுக்கு மணமான உணவு
(வசதி)களையும்
கொடுத்தோம்
-
அன்றியும் அகிலத்தாரில் அவர்களை
மேன்மையாக்கினோம்.
45:17.
அவர்களுக்கு
(மார்க்க
விஷயத்தில்)
தெளிவான கடடளைகளையும் கொடுத்தோம்;
எனினும் அவர்களுக்கிடையே உண்டான பொறாமையினால்,
அவர்களுக்கு
(வேத)
ஞானம் வந்தபின்னரும் அவர்கள் அபிப்பிராய பேதம்
கொண்டார்கள்;
நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் எதில் அபிப்பிராய
பேதம் கொண்டிருந்தார்களோ அதில் கியாம நாளில்
அவர்களிடையே தீர்ப்புச் செய்வான்.
45:18.
இதன் பின்னர் ஷாPஅத்தில்
(மார்க்கத்தில்)
ஒரு
நேரான வழியில் நாம் ஆக்கியுள்ளோம்.
ஆகவே நீர் அதனையே பின்பற்றுவீராக அன்றியும்,
அறியாமல் இருக்கின்றார்களே அவர்களின்
விருப்பங்களைப் பின்பற்றாதீர்.
45:19.
நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு எதிராக உமக்கு
யாதோர் உதவியும் செய்து விட முடியாது.
இன்னும் நிச்சயமாக அநியாயக்காரர்களில் சிலர்
சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கிறார்கள்;
ஆனால் பயபக்தியுடையவர்களுக்கு அல்லாஹ்வே
பாதுகாவலன்.
45:20.
இது
(குர்ஆன்)
மனிதர்களுக்கு தெளிவான அத்தாட்சிகளைக்
கொண்டதாகவும்,
உறுதியான நம்பிக்கையுடைய சமூகத்தாருக்கு
நேர்வழியாகவும்,
ரஹ்மத்தாகவும் இருக்கிறது.
45:21.
எவர்கள் தீமைகள் செய்கிறார்களோ அவர்களை,
எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல்கள்
செய்கிறார்களோ அவர்களுக்குச் சமமாக நாம்
ஆக்கிவிடுவோம் என்று எண்ணுகின்றார்களா?
அவர்கள் உயிருடனிருப்பதும்,
மரணமடைவதும் சமமாகுமா?
அவர்கள் முடிவு செய்து கொண்டது மிகவும்
கெட்டதாகும்.
45:22.
வானங்களையும் பூமியையும் அல்லாஹ் உண்மையுடன்
(தக்க
காரணத்தைக் கொண்டே)
படைத்துள்ளான்;
ஒவ்வோர் ஆத்மாவும் அது தேடிக் கொண்டதற்குத் தக்க
கூலி கொடுக்கப்படுவதறாகாக அவை அநியாயம்
செய்யப்படமாட்டா.
45:23. (நபியே!)
எவன் தன்னுடைய
(சாPர,
மனோ)
இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ,
அவனை நீர் பார்த்தீரா?
மேலும்,
அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு
அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும்
முத்திரையிட்டு;
இன்னும்,
அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான்.
எனவே,
அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி
காண்பிப்பவர் யார்?
நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா?
45:24.
மேலும்
(மறுமையை
நம்பாத)
அவர்கள்;
''நமது
இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு
(வாழ்க்கை)
கிடையாது நாம் இறக்கிறோம்;
ஜீவிக்கிறோம்;
''காலம்""
தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை""
என்று கூறுகிறார்கள்;
அவர்களுக்கு அது பற்றிய அறிவு கிடையாது
-
அவர்கள்
(இது
பற்றிக் கற்பனையாக)
எண்ணுவதைத் தவிர வேறில்லை.
45:25.
அவர்களிடம் தெளிவான நம் வசனங்கள்
ஓதிக்காண்பிக்கப்பட்டால்,
அவர்களுடைய வாதமெல்லாம்,
''நீங்கள்
உண்மையாளர்களாக இருந்தால் எங்களுடைய மூதாதையரை
(எழுப்பிக்)
கொண்டு வாருங்கள்""
என்பது தவிர வேறில்லை.
45:26. ''அல்லாஹ்
உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்;
பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்;
பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று
சேர்ப்பான்
-
இதில் சந்தேகமேயில்லை""
எனினும் மனிதரில் பெரும்பாலோர்
(இதை)
அறியமாட்டார்கள் என்று
(நபியே!)
நீர் கூறும்.
45:27.
அன்றியும்,
வானங்களுடையவும்,
பூமியுடையவும் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது
மேலும்,
இறுதித் தீர்ப்புக்கான வேளைவந்து வாய்க்கும்
நாளில்,
பொய்யர்கள் நஷ்டமடைவார்கள்.
45:28. (அன்று)
ஒவ்வொரு சமுதாயத்தையும் முழந்தாளிட்டிருக்க
(நபியே!)
நீர் காண்பீர்;
ஒவ்வொரு சமுதாயமும் அதனதன்
(பதிவு)
புத்தகத்தின் பக்கம் அழைக்கப்படும்;
அன்று,
நீங்கள்
(உலகில்)
செய்திருந்ததற்குரிய கூலி கொடுக்கப்படுவீர்கள்.
45:29. ''இது
உங்களைப்பற்றிய உண்மையைக் கூறும் நம்முடைய
புத்தகம்;
நிச்சயமாக நாம் நீங்கள் செய்து வந்ததைப் பதிவு
செய்து கொண்டிருந்தோம்""
(என்று
கூறப்படும்).
45:30.
ஆகவே,
எவர்கள் ஈமான் கொண்டு நல்லமல்கள் செய்து
வந்தார்களோ,
அவர்களை அவர்களுடைய இறைவன் தன் ரஹமத்தில்
பிரவேசிக்கச் செய்வான்;
அதுவே தெளிவான வெற்றியாகும்.
45:31.
ஆனால்,
நிராகரித்தவர்களிடம்;
''உங்களுக்கு
என் வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டுக் கொண்டு
இருக்கவில்லையா?
அப்பொழுது நீங்கள் பெருமையடித்துக் கொண்டு
குற்றவாளிகளாக இருந்தீர்கள்""
(என்று
சொல்லப்படும்).
45:32.
மேலும்
''நிச்சயமாக
அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது மறுமை நாள்
அது பற்றியும் சந்தேகமில்லை""
என்று கூறப்பட்ட போது;
''(மறுமை)
நாள் என்ன என்று நாங்கள் அறியோம்;
அது
ஒரு வெறும் கற்பனை என்றே நாங்கள் கருதுகிறோம்.
எனவே
(அதை)
நாங்கள் உறுதியென நம்புபவர்களல்லர்""
என்று நீங்கள் கூறினீர்கள்.
45:33.
அவர்கள் செய்த தீமையெல்லாம்
(அந்நாளில்)
அவர்களுக்கு வெளியாகும்;
எதை
அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ,
அதுவே அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்.
45:34.
இன்னும்,
''நீங்கள்
உங்களுடைய இந்நாளின் சந்திப்பை மறந்து விட்டது
போன்றே,
இன்றை தினம் நாம் உங்களை மறக்கிறோம்;
அன்றியும் நீங்கள் தங்குமிடம் நரகம் தான்;
மேலும்,
உங்களுக்கு உதவி செய்பவர் எவருமில்லை""
என்று
(அவர்களுக்குக்)
கூறப்படும்.
45:35.
நீங்கள் அல்லஹ்வின் வசனங்களை ஏளனமாக எடுத்துக்
கொண்டதனாலும் இவ்வுலக வாழ்க்கை உங்களை மயக்கி
ஏமாற்றி விட்டதினாலுமே இந்த நிலை.
இன்றைய தினத்தில் அதிலிருந்து அவர்கள்
வெளியேற்றப்படவும் மாட்டார்கள்;
மன்னிப்பளிக்கப்படவும் மாட்டார்கள்.
45:36.
ஆகவே வானங்களுக்கும் இறைவனான
-
பூமிக்கும் இறைவனான
-
அகிலத்தாருக்கெல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கே
எல்லாப் புகழும்.
45:37.
இன்னும்,
வானங்களிலும்,
பூமியிலுமுள்ள பெருமை அவனுக்கே உரியது மேலும்,
அவன் தான்
(யாவரையும்)
மிகைத்தவன்,
ஞானம் மிக்கோன்.
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
|