|
அத்தியாயம்-50
ஸ_ரத்து
ஃகாஃப்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
50:1.
காஃப்,
கண்ணியமிக்க இக் குர்ஆன் மீது சத்தியமாக!
50:2.
எனினும்;
அவர்களிலிருந்தே,
அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்
ஒருவர் வந்ததைப் பற்றி அவர்கள்
ஆச்சரியப்படுகின்றனர்;
ஆகவே,
காஃபிர்கள் கூறுகிறார்கள்;
''இது
ஓர் ஆச்சரியமான விஷயமேயாகும்.""
50:3. ''நாம்
மரணமடைந்து மண்ணாகி விட்டாலு(ம்
உயிர் கொடுத்து எழுப்பப்படுவோ)மா?
இப்படி மீள்வது
(சாத்தியமில்லாத)
தொலைவானது""
(என்றும்
அவர்கள் கூறுகின்றனர்).
50:4. (மரணத்திற்குப்
பின்)
அவர்களிலிருந்து
(அவர்கள்
உடலை)
பூமி எந்த அளவு குறைத்திருக்கின்றதோ அதைத்
திட்டமாக நாம் அறிந்திருக்கின்றோம்;
நம்மிடம்
(யாவும்
பதிக்கப் பெற்று)
பாதுகாக்கப்பட்ட ஏடு இருக்கிறது.
50:5.
இருப்பினும்,
சத்திய
(வேத)த்தை
-அது
தம்மிடம் வந்த போது பொய்ப்பிக்(க
முற்படு)கிறார்கள்;
அதனால்,
அவர்கள் குழப்பமான நிலையிலேயே இருக்கின்றனர்.
50:6.
அவர்களுக்கு மேலிருக்கும் வானத்தை நாம் எவ்வாறு
அதை
(ஒரு
கட்டுக் கோப்பாக)
அமைத்து,
அதை
அழகு செய்து,
அதில் எவ்வித வெடிப்புகளும் இல்லாமல்
(ஆக்கியிருக்கின்றோம்)
என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?
50:7.
மேலும் நாம் பூமியை நீட்டி விரிவாக்கி,
அதில் உறுதியான மலைகளை அதை;துள்ளோம்;
மேலும் அதில் அழகிய புற்பூண்டுகளை
(ஆண்,
பெண் வகையுள்ள)
ஜோடியாக முளைப்பிக்கவும் செய்திருக்கின்றோம்.
50:8. (இது
இறைவன் பக்கம்)
திரும்பும் அடியார்கள் எல்லோருக்கும்
(அகப்)
பார்வை அளிப்பதாகவும்,
(நினைவூட்டும்)
நல்லுபதேசமாகவும் உள்ளது.
50:9.
அன்றியும்,
வானத்திலிருந்து மிக்க பாக்கியமுள்ள தண்ணீரை
(மழையை)
நாம் இறக்கி வைத்து,
அதைக் கொண்டு தோட்டங்களையும்,
அறுவடை செய்யப்படும் தானியங்களையும்
முளைப்பிக்கிறோம்.
50:10.
அடுக்கடுக்கான பாளைகளைக் கொண்ட
(குலைகளையுடைய)
நெடிய போPச்ச
மரங்களையும்
(உண்டாக்கினோம்).
50:11. (அவற்றின்
கனிகளை)
அடியார்களுக்கு உணவாக
(அளிக்கிறோம்),
மேலும்,
அதைக் கொண்டு இறந்து கிடந்த ஊரை
(பூமியை)
நாம் உயிர்ப்பிக்கிறோம்,
இவ்விதமே,
(இறந்தவர்கள்
உயிர்ப்பிக்கப் பெற்று)
வெளியேறுதலும் இருக்கிறது.
50:12.
இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹ{டைய
சமூகத்தாரும்,
ரஸ்ஸ{
(கிணற்று)
வாசிகளும்,
ஸமூது மக்களும்
(இவ்வாறு
மறுமையை)
மறுத்தார்கள்.
50:13. 'ஆது"
(சமூகத்தாரும்)
ஃபிர்அவ்னும் லூத்தின் சகோதரர்களும்
(மறுத்தனர்).
50:14. (அவ்வாறே
மத்யன்)
தோப்புவாசிகளும்,
துப்பவுடைய கூட்டத்தாரும் ஆக எல்லோரும்
(நம்)
தூதர்களைப் பொய்ப்பிக்க முற்பட்டனர்;
எனவே
(அவர்களைப்
பற்றிய)
என்னுடைய எச்சரிக்கை உண்மையாயிற்று.
50:15.
எனவே,
(எல்லாவற்றையும்)
முதலாவதாகப் படைப்பதில் நாம் சோர்வடைந்து
விட்டோமா?
இல்லை.
எனினும்,
இ(க்காஃபிரான)வர்கள்
(நாம்)
புதிதாக படைப்பதைப் பற்றி சந்தேகத்தில்
இருக்கின்றனர்.
50:16.
மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம்,
அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும்
நாம் அறிவோம்;
அன்றியும்,
(அவன்)
பிடரி(யிலுள்ள
உயிர்)
நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே
இருக்கின்றோம்.
50:17. (மனிதனின்)
வலப்புறத்திலும்,
இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர்
எடுத்தெழுதும் போது-
50:18.
கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம்
(மனிதனிடம்)
இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை.
50:19.
மரண
வேதனை சத்தியத்தைக் கொண்டு
(மெய்யாகவே)
வருகின்றது
(அப்போது
அவனிடம்)
எதை
விட்டும் விரண்டோடிக் கொண்டிருந்தாயோ அது தான்
(இந்நிலை
என்று கூறப்படும்)
50:20.
மேலும் ஸ_ர்
(எக்காளம்)
ஊதப்படும்.
அதுதான் அச்சறுத்தி எச்சரிக்கப்பட்ட நாளாகும்.
50:21.
அன்றியும்,
(அந்நாளில்)
ஒவ்வோர் ஆன்மாவும் தன்னை அழைத்து வருபவர்,
சாட்சியாளர் ஆகியோருடன் வரும்.
50:22. ''நீ
இதைப் பற்றி அலட்சியத்தில் இருந்தாய்;
(இப்பொழுது)
உன்
(பார்வையை)
விட்டு உனது திரையை நாம் அகற்றி விட்டோம்.
எனவே,
இன்று உன் பார்வை கூர்மையாக இருக்கிறது.""
(என்று
கூறப்படும்).
50:23.
அப்போது அவனுடன் இருப்பவர்
(மலக்கு)
''இதோ
(இம்மனிதனின்
ஏடு)
என்னிடம் சித்தமாக இருக்கிறது""
என்று கூறுவார்.
50:24. ''மனமுரண்டாக
நிராகரித்துக் கொண்டிருந்தோர் எல்லோரையும்
நீங்கள் இருவரும் நரகில் போடுங்கள்.
50:25. ''(அவன்)
நன்மையை தடுத்துக் கொண்டேயிருந்தவன்;
(இந்நாளைப்
பற்றி)
சந்தேகிப்பவனாக,
வரம்பு மீறிக் கொண்டும் இருந்தான்.
50:26 ''அவன்
அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை ஏற்படுத்தினான்.
ஆகவே நீங்களிருவரும் இவனை மிகக் கடுமையான
வேதனையில் போட்டு விடுங்கள்""
(என்றுங்
கூறப்படும்).
50:27. (அப்போது
ஷைத்தானாகிய)
அவனுடைய கூட்டாளி கூறுவான்;
''எங்கள்
இறைவா!
நான் இவனை வழி கெடுக்கவில்லை ஆனால்,
அவனே தூரமான வழி கேட்டில் தான் இருந்தான்-""
50:28. ''என்
முன்னிலையில் நீங்கள் வாக்குவாதம் செய்யாதீர்கள்;
(இதைப்பற்றி
என் அச்சுறுத்தலை முன்னரே விடுத்திருக்கிறேன்""
என்று
(அல்லாஹ்)
கூறுவான்.
50:29. (எனவே
என்னுடைய)
அச்சொல்
''என்னிடத்தில்
மாற்றப்படுவதில்லை
-
நான் அடியார்களுக்கு அநியாயம் செய்பவனல்லன்""
(என்றும்
அல்லாஹ் கூறுவான்).
50:30.
நரகத்தை நோக்கி,
''நீ
நிறைந்து விட்டாயா?
என்று நாம் கேட்டு,
அதற்கு அது
''இன்னும்
அதிகமாக ஏதும் இருக்கின்றதா?""
என்று கேட்கும் அந்நாளை
(நபியே!
நீர் நினைவுறுத்துவீராக)!
50:31. (அன்றியும்
அந்நாளில்)
பயபக்தியுடையவர்களுக்கு சுவர்க்கம் தொலைவில்லாத
நிலையில் மிகவும் சமீபமாக்கப்படும்.
50:32. ''இது
தான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டதா(ன
சுவர்க்கமா)கும்;
எப்பொழுதும் இறைவனையே நோக்கி,
(பாவத்தை
தவிர்த்துப்)
பேணி நடந்த ஒவ்வொருவருக்கும்
(இது
உரியது).""
50:33.
எவர்கள்,
மறைவிலும் அர்ரஹ்மானை அஞ்சி நடந்து
கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கும்
(அவனையே)
முற்றிலும் நோக்கிய இதயத்துடன் வருவோருக்கும்
(இது
வாக்களிக்கப்பட்டிருக்கிறது).
50:34. ''ஸலாமுடன்
-
சாந்தியுடன்
-
இ(ச்
சுவர்க்கத்)தில்
பிரவேசியுங்கள்;
இதுதான் நித்தியமாக நீங்க்ள தங்கியிருக்கும்
நாளாகும்""
(என்று
கூறப்படும்).
50:35.
அவர்கள் விரும்பியதெல்லாம்,
அதில் அவர்களுக்கு இருக்கிறது இன்னும்
(அதற்கு)
அதிகமும் நம்மிடம் இருக்கிறது.
50:36.
அன்றியும்,
(நிராகரிப்போரான)
அவர்களைவிட பலசாளிகளாக இருந்த எத்தனையோ
தலைமுறையினரை அவர்களுக்கு முன்னர் நாம்
அழித்திருக்கின்றோம்;
அவர்கள்
(அழிவிலிருந்து
தப்பித்துக் கொள்ள)
பல
ஊர்களிலிரும்
(துளைத்துச்)
சென்றனர்;
ஆனால் அவர்கள் தப்பித்துக் கொள்ள புகலிடம்
இருந்ததா?
50:37.
எவருக்கு
(நல்ல)
இதயம் இருக்கிறதோ,
அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக்
கேட்கிறாரோ அ(த்தகைய)வருக்கு
நிச்சயமாக இதில் நினைவுறுத்தலும்
(படிப்பினையும்)
இருக்கிறது.
50:38.
நிச்சயமாக நாம் தாம் வானங்களையும்,
பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும்
ஆறு நாட்களில் படைத்தோம்;
(அதனால்)
எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை.
50:39.
எனவே
(நபியே!)
அவர்கள் கூறுவதைப் பற்றிப் பொறுமையோடிருப்பீராக
இன்னும்,
சூரிய உதயத்திற்கு முன்னரும்,
(அது)
அஸ்தமிப்பதற்கு முன்னரும் உம்முடைய இறைவனின்
புகழைக் கொண்டு நீர் தஸ்பீஹ{
செய்வீராக.
50:40.
இன்னும் இரவிலிருந்தும்,
ஸ{ஜூதுக்குப்
பின்னரும் அவனைத் தஸ்பீஹ{
செய்வீராக.
50:41.
மேலும்,
சமீபமான இடத்திலிருந்து கூவி அழைப்பவர்
அழைக்கும் நாளை(ப்
பற்றி நபியே!)
நீர் செவிமடுப்பீராக.
50:42.
அந்நாளில்,
உண்மையைக் கொண்டு ஒலிக்கும் பெரும் சப்தத்தை
அவர்கள் கேட்பார்கள்.
அதுதான்
(மரித்தோர்)
வெளியேறும் நாளாகும்.
50:43.
நிச்சயமாக நாமே உயிர் கொடுக்கிறோம்;
நாமே மரிக்கும்படிச் செய்கிறோம்
-
அன்றியும் நம்மிடமே
(எல்லோரும்)
மீண்டு வர வேண்டியிருக்கிறது.
50:44.
பூமி பிளந்து,
அவர்கள் வேகமாக
(வெளியே)
வரும் நாள்;
இவ்வாறு
(அவர்களை)
ஒன்று சேர்ப்பது நமக்கு எளிதானதாகும்.
50:45.
அவர்கள் கூறுவதை நாம் நன்கறிவோம்
-
நீர் அவர்கள் மீது நிர்ப்பந்தம் செய்பவரல்லர்,
ஆகவே
(நம்)
அச்சுறுத்தலை பயப்படுவோருக்கு,
இந்த குர்ஆனை கொண்டு நல்லபதேசம் செய்வீராக.
|