|
அத்தியாயம்-52
ஸ_ரத்துத்
தூர்
(மலை)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
52:1.
தூர்
(மலை)
மீது சத்தியமாக!
52:2-3.
விரித்து வைக்கப்பட்ட,
ஏட்டில் எழுதப்பட்ட வேதத்தின் மீது சத்தியமாக!
52:4.
பைத்துல் மஃமூர் மீது சத்தியமாக!
52:5.
உயர்த்தப்பட்ட முகட்டின் மீது சத்தியமாக!
52:6.
பொங்கும் கடலின் மீது சத்தியமாக!
52:7.
நிச்சயமாக உம்முடைய இறைவன்
(விதித்திருக்கும்)
வேதனை சம்பவிக்கும்.
52:8.
அதனைத் தடுப்பவர் எவருமில்லை.
52:9.
வானம் துடித்துச் சுற்றிக் குமுறும் நாளில்,
52:10.
இன்னும்,
மலைகள் தூள் துளாகி விடும் போது,
52:11. (சன்மார்க்கத்தை
எதிர்த்து அதைப்)
பொய்யாக்கிக் கொண்டிருந்தோருக்கு அந்நாளில்
கேடுதான்.
52:12.
எவர்கள்
(பொய்யானவற்றில்)
மூழ்கி விளையாடிக் கொண்டிருக்கின்றனரோ,
52:13.
அந்நாளில் அவர்கள் நரக நெருப்பின் பால்
இழுக்கப்படுவோராக இழுக்கப்படுவர்.
52:14.
அந்நாளில்;
(அவர்களுக்குக்
கூறப்படும்:)
''நீங்கள்
பொய்யாக்கிக் கொண்டிருந்த
(நரக)
நெருப்பு இதுதான்.
52:15. ''இது
சூனியம் தானா?
அல்லது பார்க்க முடியாது
(குருடர்களாக)
ஆகிவிட்டீர்களா?
52:16. ''நீங்கள்
அதில் நுழையுங்கள்,
பிறகு நீங்கள்
(அதன்
வேதனையைச்)
சகித்துக் கொள்ளுங்கள்;
அல்லது சகித்துக் கொள்ளாதிருங்கள்,
(இரண்டும்)
உங்களுக்குச் சமமே,
நிச்சயமாக நீங்கள் செய்து கொண்டிருந்த
வற்றிற்காகத்தான் நீங்கள் கூலி
கொடுக்கப்படுகிறீர்கள்.""
52:17.
நிச்சயமாக,
பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளிலும்,
(இறையருளில்)
இன்புற்றும் இருப்பார்கள்.
52:18.
அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அளித்ததை
அனுபவித்தவர்களாகயிருப்பார்கள்
-
அன்றியும்,
அவர்களுடைய இறைவன் நரக வேதனையிலிருந்து
அவர்களைப் பாதுகாத்துக் கொண்டான்.
52:19. (அவர்களுக்குக்
கூறப்படும்:)
''நீங்கள்
(நன்மைகளைச்)
செய்து கொண்டிருந்ததற்காக,
(சுவர்க்கத்தில்)
தாராளமாகப் புசியுங்கள்,
பருகுங்கள்.""
52:20.
அணி
அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது
சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்;
மேலும்,
நாம் அவர்களுக்கு,
நீண்ட கண்களையுடைய
(ஹ_ருல்
ஈன்களை)
மணம் முடித்து வைப்போம்.
52:21.
எவர்கள் ஈமான் கொண்டு,
அவர்களுடைய சந்ததியாரும் ஈமானில் அவர்களைப் பின்
தொடர்கிறார்களோ,
அவர்களுடைய அந்த சந்ததியனரை அவர்களுடன்
(சுவனத்தில்
ஒன்று)
சேர்த்து விடுவோம்.
(இதனால்)
அவர்களுடைய செயல்களில் எந்த ஒன்றையும்,
நாம் அவர்களுக்குக் குறைத்து விட மாட்டோம்
-
ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்த
செயல்களுக்குப் பிணையாக இருக்கின்றான்.
52:22.
இன்னும் அவர்கள் விரும்பும் கனிவகைகளையும்
இறைச்சியையும்,
நாம் அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருப்போம்.
52:23. (அமுதம்
நிறைந்த)
ஒருவர் கோப்பையை மற்றொருவர் பறித்துக் கொள்வர்,
ஆனால் அதில் வீணுமில்லை,
குற்றமிழைப்பதும் இல்லை.
52:24.
அவர்களுக்கு(ப்
பணி விடைக்கு)
உள்ள சிறுவர்கள்,
அவர்களைச் சுற்றிக் கொண்டே இருப்பார்கள்,
அவர்கள் பதித்த ஆணி முத்துகளைப் போல்
(இருப்பார்கள்).
52:25.
அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி விசாரித்துக்
கொள்வார்கள்.
52:26. ''இதற்கு
முன்
(உலகில்)
நாம் நம் குடும்பத்தாரிடையே இருந்த போது
(வேதனை
பற்றி)
நிச்சயமாக அஞ்சியவர்களாகவே இருந்தோம்.
52:27. ''ஆனால்
அல்லாஹ் நம்மீது உபகாரம் செய்து கொடிய
வேதனையிலிருந்து நம்மை காப்பாற்றினான்.
52:28. ''நிச்சயமாக
நாம் முன்னே
(உலகில்)
அவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம்,
நிச்சயமாக அவனே மிக்க நன்மை செய்பவன்,
பெருங்கிருபையுடையவன்.""
52:29.
எனவே,
(நபியே!
நீர் மக்களுக்கு நல்லுபதேசத்தால்)
நினைவுறுத்திக் கொண்டிருப்பீராக!
உம்முடைய இறைவனின் அருளால்,
நீர் குறிகாரரும் அல்லர்,
பைத்தியக்காரருமல்லர்.
52:30.
அல்லது:
அவர்கள்
(உம்மைப்
பற்றி,
''அவர்)
புலவர்,
அவருக்குக் காலத்தின் துன்பத்தைக் கொண்டு
நாங்கள் வழி பார்த்து இருக்கிறோம்""
என்று கூறுகிறார்களா?
52:31. ''நீங்களும்
வழி பார்த்திருங்கள்
-
நிச்சயமாக நானும் உங்களுடன் வழி பார்க்கிறேன்""
என்று
(நபியே!)
நீர் கூறும்.
52:32.
அல்லது,
அவர்களுடைய புத்திகள் தாம் அவர்களை இவ்வா(றெல்லாம்
பேசுமா)று
ஏவுகின்றனவா?
அல்லது அவர்கள் வரம்பு மீறிய சமூகத்தாரா?
52:33.
அல்லது,
இ(வ்வேதத்)தை
நீர் இட்டுக் கட்டினீர் என்று அவர்கள்
கூறுகின்றனரா?
அல்ல.
அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
52:34.
ஆகவே,
(இவ்வாறெல்லாம்
கூறும்)
அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால்,
இ(வ்வேதத்)தைப்
போன்ற ஒரு செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும்.
52:35.
அல்லது,
அவர்கள் எந்தப் பொருளின்றியும்
(தாமாகவே)
படைக்கப்பட்டனரா?
அல்லது அவர்கள்
(எதையும்)
படைக்கிற
(சக்தியுடைய)வர்களா?
52:36.
அல்லது,
வானங்களையும் பூமியையும் அவர்கள் படைத்தார்களா?
அல்ல.
அவர்கள் உறுதி கொள்ளமாட்டார்கள்.
52:37.
அல்லது,
அவர்களிடம் உம்முடைய இறைவனின் பொக்கிஷங்கள்
இருக்கின்றனவா?
அல்லது இவர்கள் தாம்
(எல்லாவற்றையும்)
அடக்கியாள்பவர்களா?
52:38.
அல்லது,
அவர்களுக்கு ஏணி இருந்து அதன் மூலம்
(வானத்தின்
இரகசியங்களை)
கேட்டு வருகின்றார்களா?
அவ்வாறாயின்,
அவர்களில் கேட்டு வந்தவர் செவியேற்றதைத் தெளிவான
ஆதாரத்துடன் கொண்டு வரட்டும்.
52:39.
அல்லது,
அவனுக்குப் பெண் மக்களும் உங்களுக்கு ஆண்
மக்களுமா?
52:40.
அல்லது,
நீர் அவர்களிடம் ஏதாவது கூலி கேட்டு,
(அதைக்
கொடுத்ததினால்)
அவர்கள் கடன் பட்டு
சுமையேற்றப்பட்டிருக்கின்றார்களா,
52:41.
அல்லது,
அவர்களிடம் மறைவான செய்திகளிலிருந்து,
அவற்றை அவர்கள் எழுதுகின்றார்களா,
52:42.
அல்லது,
அவர்கள்
(உமக்கு
எதிராக)
ஏதாவது சூழ்ச்சி செய்ய நாடுகிறார்களா,
அப்படியானால்,
அந்த காஃபிர்கள் தாம் சூழச்சிக்குள்ளாவார்கள்.
52:43.
அல்லது,
அவர்களுக்கு அல்லாஹ் அல்லாமல்
(வேறு)
நாயன் இருக்கின்றானா,
அவர்கள் இணை வைப்பதை விட்டும் அல்லாஹ் மிகத்
தூயவன்.
52:44.
வானத்திலிருந்து ஒரு துண்டு விழுவதை அவர்கள்
கண்டார்களானால்,
அதை
அடர்த்தியான மேகம் என்று அவர்கள்
கூறிவிடுவார்கள்.
52:45.
ஆகவே அச்சத்தால் அவர்கள் உணர்விழக்கும் நாளைச்
சந்திக்கும்வரை,
அவர்களை விட்டு விடுவீர்களாக.
52:46.
அந்நாளில்,
அவர்களுடைய சூழ்ச்சிகள் எதுவும் அவர்களுக்குப்
பயன் அளிக்காது,
அன்றியும்
(எவராலும்)
அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
52:47.
அன்றியும்,
அநியாயம் செய்து கொண்டு இருந்தவர்களுக்கு
நிச்சயமாக மற்றொரு வேதனையும்
(இம்மையில்)
உண்டு எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதை அறிய
மாட்டார்கள்.
52:48.
எனவே
(நபியே!)
உம்முடைய இறைவனின் தீர்ப்புக்காகப்
பொறுத்திறுப்பீராக,
நிச்சயமாக நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர்;
மேலும் நீங்கள் எழுந்திருக்கும் சமயத்தில் உம்
இறைவனின் புகழைக் கூறித் தஸ்பீஹ{
செய்வீராக,
52:49.
இன்னும்,
இரவின் ஒரு பாகத்திலும்,
நட்சத்திரங்கள் அடையும் நேரத்திலும் அவனைத்(துதி
செய்து)
தஸ்பீஹ{
செய்வீராக!
|