|
அத்தியாயம்-54
ஸ_ரத்துல்
கமர்
(சந்திரன்)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
54:1. (இறுதி)
நேரம் நெருங்கி விட்டது சந்திரனும் பிளந்து
விட்டது.
54:2.
எனினும்,
அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால்,
(அதைப்)
புறக்கணித்து விடுகிறார்கள்,
''இது
வழமையாக நடைபெறும் சூனியம் தான்""
என்றும் கூறுகிறார்கள்.
54:3.
அன்றியும்,
அவர்கள்
(காண்பிக்கப்
பெறும் அத்தாட்சிகளைப்)
பொய்ப்பிக்க முற்படுகின்றனர்,
மேலும் தங்கள் இச்சைகளையே பின்பற்றுகின்றனர்,
ஆயினும் ஒவ்வொரு காரியமும்
(அதற்கான
நிலையில்)
உறுதிப்பட்டே விடும்.
54:4.
அச்சுறுத்தலுள்ள பல செய்திகள் திடமாக
(முன்னரே)
அவர்களிடம் வந்திருக்கின்றன.
54:5.
நிறைவான ஞானம் உடையவை
-
ஆனால்
(அவர்களுக்கு
அவற்றின்)
எச்சரிக்கைகள் பயனளிக்கவில்லை.
54:6.
ஆகையால்
(நபியே!)
அவர்களை விட்டும் நீர் திரும்பி விடும்,
(அவர்களுக்கு)
வெறுப்பான
(கேள்வி
கணக்கு)
விஷயத்திற்காக அழைப்பவர்
(அவர்களை)
அழைக்கும் நாளில்;
54:7. (தாழ்ந்து
பணிந்து)
கீழ்நோக்கிய பார்வையுடன்,
அவர்கள் புதை குழிகளிலிருந்து பரவிச் செல்லும்
வெட்டுக் கிளிகளைப் போல் வெளியேறுவார்கள்.
54:8.
அழைப்பவரிடம் விரைந்து வருவார்கள்,
''இது
மிகவும் கஷ்டமான நாள்""
என்றும் அக்காஃபிர்கள் கூறுவார்கள்.
54:9.
இவர்களுக்கு முன்னர் நூஹின் சமூகத்தினர்
(மறுமையைப்)
பொய்யாக்கினர்,
ஆகவே அவர்கள் நம் அடியாரைப் பொய்ப்பித்து
(அவரைப்)
'பைத்தியக்காரர்"
என்று கூறினர்,
அவர் விரட்டவும் பட்டார்.
54:10.
அப்போது அவர்,
''நிச்சயமாக
நாம் தோல்வியடைந்தவனாக இருக்கிறேன்,
ஆகவே,
நீ
(எனக்கு)
உதவி செய்வாயாக!""
என்று அவர் தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்.
54:11.
ஆகவே,
நாம் கொட்டும் மழையைக் கொண்டு வானங்களின்
வாயில்களைத் திறந்து விட்டோம்.
54:12.
மேலும்,
பூமியின் ஊற்றுகளை பொங்க வைத்தோம்,
இவ்வாறாக,
குறிப்பிட்ட ஓர் அளவின் படி
(இரு
வகை)
நீரும் கலந்(து
பெருக் கெடுத்)தது.
54:13.
அப்போது,
பலகைகளினாலும் ஆணிகளினாலும் செய்யப்பட்ட
மரக்கலத்தின் மீது அவரை ஏற்றிக் கொண்டோம்.
54:14.
எனவே,
எவர்
(அவர்களால்)
நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தாரோ,
அவருக்கு
(நற்)
கூலி கொடுப்பதற்காக,
(அம்மரக்கலம்)
நம்
கண் முன்னிலையில் மிதந்து சென்று கொண்டிருந்தது.
54:15.
நிச்சயமாக நாம்
(வருங்காலத்திற்கு
இ(ம்
மரக்கலத்)தை
ஓர் அத்தாட்சியாக விட்டு வைத்தோம்;
(இதன்
மூலமாக)
நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
54:16.
ஆகவே,
என்
(கட்டளையினால்
ஏற்பட்ட)
வேதனையும்,
எச்சரிக்கையும் எப்படி இருந்தன?
(என்பதை
கவனிக்க வேண்டாமா?)
54:17.
நிச்சயமாக,
இக்
குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும்
பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்.
எனவே
(இதிலிருந்து)
நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
54:18. 'ஆது"
(கூட்டத்தாரும்
தங்கள் நபியை)
பொய்ப்படுத்தினர்,
அதனால்,
என்
(கட்டளையினால்
ஏற்பட்ட)
வேதனையும்.
எச்சரிக்கையும் எப்படி இருந்தன
(என்பதை
கவனிக்க வேண்டாமா?)
54:19.
நிச்சயமாக நாம் அவர்கள் மீது,
நிலையான துர்பாக்கியமுடைய ஒரு நாளில்,
பேரிறைச்சலைக் கொண்ட வேகமான காற்றை அனுப்பினோம்.
54:20.
நிச்சயமாக:
வேரோடு பிடுங்கப் பட்ட போPத்த
மரங்களின் அடித்துறைப் போல்
(அக்காற்று)
மனிதர்களை பிடுங்கி எறிந்து விட்டது.
54:21.
ஆகவே,
என்
(கட்டளையினால்
ஏற்பட்ட)
வேதனையும் எச்சரிக்கையும் எப்படி இருந்தன?
(என்பதைக்
கவனிக்க வேண்டாமா?)
54:22.
நிச்சமயாக,
இக்
குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும்
பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்,
எனவே
(இதிலிருந்து)
நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
54:23.
ஸமூது(கூட்டமு)ம்
எச்சரிக்கைகளைப் பொய்ப்பித்தது.
54:24. ''நம்மிலிருந்துள்ள
ஒரு தனி மனிதரையா நாம் பின்பற்றுவோம்?
(அப்படிச்
செய்தால்)
நாம் நிச்சயமாக வழி கேட்டிலும் பைத்தியத்திலும்
இருப்போம்""
என்றும்
(அக்கூட்டத்தினர்)
கூறினர்.
54:25. ''நம்மிடையே
இருந்து இவர் மீதுதானா
(நினைவுறுத்தும்)
நல்லுபதேசம் இறக்கப்படவேண்டும்,
அல்ல!
அவர் ஆணவம் பிடித்த பெரும் பொய்யர்""
(என்றும்
அவர்கள் கூறினர்).
54:26. ''ஆணவம்
பிடித்த பெரும் பொய்யர் யார்?""
என்பதை நாளைக்கு அவர்கள் திட்டமாக அறிந்து
கொள்வார்கள்.
54:27.
அவர்களைச் சோதிக்கும் பொருட்டு,
நிச்சயமாக நாம் ஒரு பெண் ஒட்டகத்தை அனுப்பி
வைப்போம்,
ஆகவே,
நீர் அவர்களை கவனித்துக் கொண்டும்,
பொறுமையுடனும் இருப்பீராக!
54:28. (அவ்வூரிலுள்ள
கிணற்றின்)
தண்ணீர் அவர்களுக்கு(ம்
அந்த ஒட்டகத்திற்கும்)
இடையில் பங்கிடப்பட்டுள்ளது,
''ஒவ்வொருவரும்
(தண்ணீர்)
முறைப்படி குடிப்பதற்கு வரலாம்""
என்று அவர்களுக்கு அறிவித்து விடும்.
54:29
ஆனால்
(அம்மக்களோ
ஒட்டகையை அறுத்துவிடத்)
தம்
தோழனை அழைத்தனர்,
அவன்
(துணிந்து
கை)
நீட்டி
(அதன்
கால் நரம்புகளைத்)
தரித்து விட்டான்.
54:30.
என்
(கட்டளையினால்
பின்னர் அம் மக்களுக்கு)
வேதனையும்,
எச்சரிக்கையும் எப்படி இருந்தன?
(என்பதை
கவனிக்க வேண்டாமா?)
54:31.
நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஒரு பெரும்
சப்தத்தை அனுப்பினோம்
-
அதனால் அவர்கள் காய்ந்து மிதிபட்ட வேலி(யின்
கூளம்)
போல் ஆகிவிட்டனர்.
54:32.
நிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக்
கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்,
எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
54:33.
லூத்துடைய சமூகத்தாரும்
(நம்முடைய)
எச்சரிக்கைகளைப் பொய்ப்பித்தனர்.
54:34.
லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர,
மற்றவர்கள் மீது,
நாம் நிச்சயமாக கல்மாரியை அனுப்பினோம்,
விடியற்காலையில் நாம் அவர் குடும்பத்தார்களை
பாதுகாத்துக் கொண்டோம்.
54:35.
நம்மிடமிருந்துள்ள அருள் கொடையால்
(இப்படிக்
காப்பாற்றினோம்)
இவ்வாறே நாம் நன்றி செலுத்துபவர்களுக்கு கூலி
அளிக்கிறோம்.
54:36.
திட்டமாக நம்முடைய கடுமையான பிடியைப்பற்றி அவர்
(தம்
சமூகத்தாருக்கு)
அச்சுறுத்தி எச்சரித்திருந்தார்.
எனினும் அச்சுறுத்தும் அவ்வெச்சரிக்கைகளைப்
பற்றி அவர்கள் சந்தேகி(த்துத்
தர்க்கி)க்காலாயினர்.
54:37.
அன்றியும் அவருடைய விருந்தினரை
(துர்ச்
செயலுக்காக)க்
கொண்டு போகப் பார்த்தார்கள்,
ஆனால் நாம் அவர்களுடைய கண்களைப் போக்கினோம்.
''என்(னால்
உண்டாகும்)
வேதனையையும்,
எச்சரிக்கைகளையும் சுவைத்துப் பாருங்கள்""
(என்றும்
கூறினோம்).
54:38.
எனவே,
அதிகாலையில் அவர்களை நிலையான வேதனை திட்டமாக
வந்தடைந்தது.
54:39. ''ஆகவே,
என்(னால்
உண்டாகும்)
வேதனையையும் எச்சரிக்கையையும் சுவைத்துப்
பாருங்கள்""
(என்று
கூறினோம்).
54:40.
நிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக்
கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்.
எனவே
(இதிலிருந்து)
நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
54:41.
ஃபிர்அவ்னின் கூட்டத்தாருக்கும் அச்சமூட்டும்
எச்சரிக்கைகள் வந்தன.
54:42.
ஆனால் அவர்கள் நம்முடைய அத்தாட்சிகள்
அனைத்தையும் பொய்யாக்கினர்,
அப்போது,
சக்தி வாய்ந்த
(யாவற்றையும்)
மிகைக்கின்றவனின் பிடியாக அவர்களை நாம்
பிடித்துக் கொண்டோம்.
54:43. (சென்று
போன)
அவர்களை விட உங்களிலுள்ள காஃபிர்கள் மேலானவர்களா?
அல்லது,
உங்களுக்கு
(வேதனையிலிருந்து)
விலக்கு இருப்பதாக வேத ஆதாரம் உண்டா?
54:44.
அல்லது
(நபியே!)
''நாங்கள்
யாவரும் வெற்றி பெறுங் கூட்டத்தினர்""
என்று அவர்கள் கூறுகின்றார்களா?
54:45.
அதிசீக்கிரத்தில் இக்கூட்டத்தினர்
சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர்.
54:46.
அதுவுமின்றி,
மறுமைதான் இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட
(சோதனைக்)
காலமாகும்,
மறுமை அவர்களுக்கு மிகக் கடுமையனதும் மிக்க
கசப்பானதுமாகும்.
54:47.
நிச்சயமாக,
அக்குற்றவாளிகள் வழி கேட்டிலும்,
மதியிழந்தும் இருக்கின்றனர்.
54:48.
அவர்களுடைய முகங்களின் மீது அவர்கள் நரகத்திற்கு
இழுத்துச் செல்லப்படும் நாளில்,
''நரக
நெருப்புத் தீண்டுவதைச் சுவைத்துப் பாருங்கள்""
(என்று
அவர்களுக்கு கூறப்படும்).
54:49.
நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக
(குறிப்பான)
அளவின்படியே படைத்திருக்கின்றோம்.
54:50.
நம்முடைய கட்டளை
(நிறைவேறுவது)
கண்
மூடி விழிப்பது போன்ற ஒன்றே அன்றி வேறில்லை.
54:51. (நிராகரிப்போரே!)
உங்களில் எத்தனையோ வகுப்பார்களை நாம்,
நிச்சயமாக அழித்திருக்கின்றோம்,
எனவே
(இதிலிருந்து)
நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
54:52.
அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும்
(அவர்களுக்கான)
பதிவேடுகளில் இருக்கிறது.
54:53.
சிறிதோ,
பெரிதோ அனைத்தும்
(அதில்)
வரையப்பட்டிருக்கும்.
54:54.
நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச்
சோலைகளில்
(அவற்றிலுள்ள)
ஆறுகளில் இருப்பார்கள்
54:55.
உண்மையான இருக்கையில் சர்வ வல்லமையுடைய அரசனின்
(அருள்)
அண்மையில் இருப்பார்கள்.
|