|
அத்தியாயம்-56
ஸ_ரத்துல்
வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
56:1. மாபெரும் நிகழ்ச்சி(யான இறுதிநாள்)
ஏற்பட்டால்
56:2. அந்நிகழ்ச்சியைப் பொய்யாக்குவது
எதுவுமில்லை.
56:3. அது (தீயோரைத்) தாழ்த்தி விடும்,
(நல்லோரை)
உயர்த்தி விடும்.
56:4. பூமி நடுக்கத்தால் நடுக்கமடையச் செய்யும்
போது.
56:5. இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும்
போது,
56:6. பின்னர்,
அது
பரப்பப்பட்ட புழுதி ஆகிவிடும்.
56:7. (அப்போது) நீங்களும் மூன்று
பிரிவினர்களாகி விடுவீர்கள்.
56:8. (முதலாமவர்) வலது பாரிசத்திலுள்ளோர் -
வலது பாரிசத்துக்காரர் யார்?
(என்பதை
அறிவீர்களா?)
56:9. (இரண்டாமவர்) இடது பாரிசத்திலுள்ளோர் -
இடது பாரிசத்திலுள்ளோர் யார்?
(என
அறிவீர்களா?)
56:10. (மூன்றாமவர் நம்பிக்கையில்)
முந்தியவர்கள் (மறுமையிலும்) முந்தியவர்களே
யாவார்கள்.
56:11. இவர்கள் (இறைவனுக்கு)
அண்மையிலாக்கப்பட்டவர்கள்.
56:12. இவர்கள் பாக்கியங்களுள்ள (சுவனச்)
சோலைகளில் இருப்பர்.
56:13. முதலாமவரில் ஒரு பெருங் கூட்டத்தினரும்,
56:14. பின்னவர்களில்,
ஒரு
சொற்பத்தொகையினரும் -
56:15. (பொன்னிழைகளால்) ஆக்கப் பெற்ற
கட்டில்களின் மீது -
56:16. ஒருவரையொருவர் முன்னோக்கியவாகளாக,
அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள்.
56:17. நிலையான இளமையுடைய இளைஞர்கள் (இவர்கள்
பணிக்காகச்) சுற்றிக் கொண்டே இருப்பார்கள்.
56:18. தெளிந்த பானங்களால் நிறம்பிய
கிண்ணங்களையும்,
கெண்டிகளையும்,
குவளைகளையும் கொண்டு (அவர்களிடம் சுற்றி
வருவார்கள்).
56:19. (அப்பானங்களைப் பருகும்) அவர்கள்
அவற்றினால் தலை நோய்க்காளாக மாட்டார்கள்,
மதிமயங்கவுமாட்டார்கள்.
56:20. இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி
வகைகளையும் -
56:21. விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும்
(கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்).
56:22. (அங்கு இவர்களுக்கு) ஹ_ருல்
ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர்
இருப்பர்.
56:23. மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள்
(இருப்பார்கள்).
56:24. (இவையாவும்) சுவர்க்க வாசிகள் (இம்மையில்
செய்து கொண்டிருந்த) செயல்களுக்கு கூலியாகும்.
56:25. அங்கு இவர்கள் வீணானதையும்,
பாவமுண்டாக்குவதையும் (கொண்ட பேச்சுகளைச்)
செவியுற மாட்டார்கள்.
56:26.
'ஸலாம்,
ஸலாம்" என்னும் சொல்லையே (செவியுறுவார்கள்).
56:27. இன்னும் வலப்புறத்தார்கள் -
வலப்புறத்தார்கள் யார்?
(என்பதை
அறிவீர்களா?)
56:28. (அவர்கள்) முள்ளில்லாத இலந்தை மரத்தின்
கீழும்:
56:29. (நுனி முதல் அடிவரை) குலை குலையாகப்
பழங்களுடை வாழை மரத்தின் கீழும்:
56:30. இன்னும்,
நீண்ட நிழலிலும்,
56:31. (சதா) ஒலித்தோடிக் கொண்டிருக்கும் நீரின்
அருகிலும்,
56:32. ஏராளமான கனிவகைகளின் மத்தியிலும் -
56:33. அவை அற்றுப் போகாதவை,
(உண்ணத்)
தடுக்கப்படாதவை -
56:34. மேலும்,
உன்னதமான விரிப்புகளில் (அமர்ந்திருப்பர்).
56:35. நிச்சயமாக (ஹ_ருல்
ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக,
நாம் உண்டாக்கி,
56:36. அப்பெண்களைக் கன்னிகளாகவும்,
56:37. (தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும்,
சம
வயதினராகவும்,
56:38. வலப்புறத்தோருக்காக (ஆக்கி
வைத்துள்ளோம்).
56:39. முன்னுள்ளோரில் ஒரு கூட்டமும்,
56:40. பின்னுள்ளோரில் ஒரு கூட்டமும்
(வலப்புறத்தோராக இருப்பார்கள்).
56:41. இடது பாரிசத்திலுள்ளவர்களோ இடது
பாரிசத்திலுள்ளவர்கள் யார்?
(என்று
அறிவீர்களா?)
56:42. (அவர்கள்) கொடிய அனல் காற்றிலும்,
கொதிக்கும் நீரிலும் -
56:43. அடர்ந்து இருண்ட புகையின் நிழலிலும்
இருப்பார்கள்.
56:44. (அங்கு) குளிர்ச்சியுமில்லை,
நலமுமில்லை.
56:45. நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர்
(உலகத்தில்) சுகபோகிகளாக இருந்தனர்.
56:46. ஆனால்,
அவர்கள் பெரும் பாவத்தின் மீது நிலைத்தும்
இருந்தனர்.
56:47. மேலும்,
அவர்கள்,
''நாம்
மரித்து மண்ணாகவும்,
எலும்புகளாகவும் ஆகி விட்டாலும்,
நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா?""
என்று கேட்டுக் கொண்டு இருந்தனர்.
56:48.
''அல்லது,
முன்னோர்களான நம் தந்தையருமா?
(எழுப்பப்படுவர்?""
என்றும் கூறினர்.)
56:49. (நபியே!) நீர் கூறும்:
''(நிச்சயமாக
உங்களில்) முன்னோர்களும்,
பின்னோர்களும்.
56:50.
''குறிப்பிட்ட
நாளின் ஒரு நேரத்தில் (நீங்கள் யாவரும்) ஒன்று
கூட்டப்படுவீர்கள்.
56:51. அதற்குப் பின்னர்:
''பொய்யர்களாகிய
வழி கேடர்களே! நிச்சயமாக நீங்கள்,
56:52. ஜக்கூம் (என்னும் கள்ளி) மரத்திலிருந்தே
நீங்கள் புசிப்பவர்கள்.
56:53. ஆகவே,
''அதைக்
கொண்டே வயிறுகளை நிரப்புவீர்கள்.
56:54. அப்புறம் அதன்மேல் கொதிக்கும் நீரையே
குடிப்பீர்கள்.
56:55.
''பின்னும்
ஹீம் - தாகமுள்ள ஒட்டகை குடிப்பதைப் போல்
குடிப்பீர்கள்.""
56:56. இதுதான் நியாயத் தீர்ப்பு நாளில்
அவர்களுக்கு விருந்தாகும்.
56:57. நாமே உங்களைப் படைத்தோம். எனவே,
(நாம்
கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா?
56:58. (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும்
இந்திரியத்தைக் கவனித்தீர்களா?
56:59. அதை நீங்கள் படைக்கிறீர்களா?
அல்லது நாம் படைக்கின்றோமா?
56:60. உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே
ஏற்படுத்தியுள்ளோம்,
எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது.
56:61. (அன்றியும் உங்களைப் போக்கி விட்டு)
உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள்
அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம்
இயலாதவர்கள் அல்ல).
56:62. முதல் முறையாக (நாம் உங்களைப்) படைத்தது
பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் - எனவே
(அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு
பெற வேண்டாமா?
56:63. (இப்பூமியில்) விதைப்பதை நீங்கள்
கவனித்தீர்களா?
56:64. அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா?
அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா?
56:65. நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய்
ஆக்கிவிடுவோம் - அப்பால் நீங்கள்
ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்.
56:66.
''நிச்சயமாக
நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம்.
56:67.
''மேலும்,
(பயிர்களிலிருந்து
எதுவும் பெற முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு
விட்டோம்"" (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்).
56:68. அன்றியும்,
நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா?
56:69. மேகத்திலிருந்து அதை நீங்கள்
இறக்கினீர்களா?
அல்லது நாம் இறக்குகிறோமா?
56:70. நாம் நாடினால்,
அதைக் கைப்புள்ள தாக்கியிருப்போம்;
(இவற்றுக்கெல்லாம்)
நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
56:71. நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா?
56:72. அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா?
அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா?
56:73. நாம் அதனை நினைவூட்டுவதாகவும்,
பயணிகளுக்கு பயனளிக்கப்பதற்காகவும்
உண்டாக்கினோம்.
56:74. ஆகவே,
மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு
தஸ்பீஹ{
செய்வீராக.
56:75. நட்சத்திர மண்டலங்களின் மீது நான்
சத்தியம் செய்கிறேன்.
56:76. நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது
மகத்தான் பிரமாணமாகும்.
56:77. நீச்சயமாக,
இது
மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆன்
ஆகும்.
56:78. பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது.
56:79. தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்)
இதனைத் தொட மாட்டார்கள்.
56:80. அகிலத்தாரின் இறைவனால் இது
இறக்கியருளப்பட்டது.
56:81. அவ்வாறிருந்தும்,
(குர்ஆனின்
மகத்தான) இச்செய்தி பற்றி நீங்கள் அலட்சியமாக
இருக்கிறீர்களா?
56:82. நீங்கள் பொய்ப்பிப்பதை (இறைவன் தந்த)
உங்கள் பாக்கியங்களுக்கு (நன்றியாக)
ஆக்குகின்றீர்களா?
56:83. மரணத் தறுவாயில் ஒருவனின் (உயிர்)
தொண்டைக் குழியை அடையும் போது -
56:84. அந்நேரம் நீங்கள் பார்த்துக்
கொண்டிருக்கிறீர்கள்.
56:85. ஆயினும்,
நாமோ அவனுக்கு உங்களை விட சமீபமாக இருக்கிறோம்.
எனினும் நீங்கள் பார்க்கிறீர்களில்லை.
56:86. எனவே,
(மறுமையில்
உங்கள் செயல்களுக்கு) கூலி கொடுக்கப்பட
மாட்டீர்கள் என்று இருந்தால் -
56:87. நீங்கள் உண்மையாளராக இருப்பின்,
(அவ்வுயிரை)
மீளவைத்திருக்கலாமே!
56:88. (இறந்தவர் இறைவனுக்கு)
நெருக்கமானவர்களில் நின்றும் இருப்பாராயின்.
56:89. அவருக்குச் சுகமும்,
நல்லுணவும் இன்னும் பாக்கியமுள்ள சுவர்க்கமும்
உண்டு.
56:90. அன்றியும்,
அவர் வலப்புறத்துத் தோழராக இருந்தால்,
56:91.
''வலப்புறத்தோரே!
உங்களுக்கு
''ஸலாம்""
உண்டாவதாக"" (என்று கூறப்படும்).
56:92. ஆனால் அவன் வழிகெட்டுப் பொய்யாக்குவோரில்
(ஒருவனாக) இருந்தால்
56:93. கொதிக்கும் நீரே,
அவனுக்கு விருந்தாகும்.
56:94. நரக நெருப்பில் தள்ளப்படுவது
(விருந்தாகும்).
56:95. நிச்சயமாக இதுதான் உறுதியான உண்மையாகும்.
56:96. எனவே (நபியே!) மகத்தான உம்முடைய இறைவனின்
திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹ{
செய்வீராக.
|