|
அத்தியாயம்-67
ஸ_ரத்துல்
முல்க்
(ஆட்சி)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
67:1.
எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன்
பாக்கியவான்;
மேலும்,
அவன் எல்லாப் பொருட்களின் மீதும்
பேராற்றலுடையவன்.
67:2.
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர்
என்பதைச் சோதிப்பதற்காக அவன்,
மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்;
மேலும்,
அவன்
(யாவரையும்)
மிகைத்தவன்;
மிக
மன்னிப்பவன்.
67:3.
அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காக படைத்தான்;
(மனிதனே)
அர்ரஹ்மானின் படைப்பில் குறையை நீர் காணமாட்டீர்,
பின்னும்
(ஒரு
முறை)
பார்வையை மீட்டிப்பார்!
(அவ்வானங்களில்)
ஏதாவது ஓர் பிளவை காண்கிறாயா?
67:4.
பின்னர் இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார்,
உன்
பார்வை களைத்து,
மழுங்கிச் சிறுமையடைந்து உன்னிடம் திரும்பும்.
67:5.
அன்றியும்,
திட்டமாக நாமே
(பூமிக்குச்)
சமீபமாக இருக்கும் வானத்தை
(நட்சத்திர)
விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கின்றோம்;
இன்னும்,
அவற்றை ஷைத்தான்களை
(வெருட்டும்)
எறி
கற்களாகவும் நாம் ஆக்கினோம்;
அன்றியும் அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும்
(நரக)
நெருப்பின் வேதனையைச் சித்தம்
செய்திருக்கின்றோம்.
67:6.
இன்னும்,
எவர்கள் தங்கள் இறைவனை நிராகரிக்கின்றார்களோ,
அவர்களுக்கு நரக வேதனை உண்டு;
(அது)
மிகக் கெட்ட மீளுமிடமாகும்.
67:7.
அதில் அவர்கள் போடப்படுவார்களாயின்,
அது
கொதிக்கும் நிலை
(கழுதையின்
பெருங்குரலைப் போல்)
அருவருப்பான சப்தம் உண்டாவதை அவர்கள்
கேட்பார்கள்.
67:8.
அது
கோபத்தால் வெடித்து விடவும் நெருங்குகிறது,
அதில் ஒவ்வொரு கூட்டமும் போடப்படும் போதெல்லாம்,
''அச்சமூட்டி
எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?""
என்று அதன் காவலாளிகள் அவர்களைக் கேட்பார்கள்.
67:9.
அதற்கவர்கள் கூறுவார்கள்;
''ஆம்!
அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் திட்டமாக
எங்களிடம் வந்தார்,
ஆனால் நாங்கள்
(அவரைப்)
பொய்ப்பித்து,
'அல்லாஹ்
யாதொன்றையும் இறக்கவில்லை,
நீங்கள் பெரும் வழிகேட்டில் அல்லாமல் வேறில்லை""
என்று சொன்னோம்.""
67:10.
இன்னும் அவர்கள் கூறுவார்கள்;
''நாங்கள்
(அவர்
போதனையைச்)
செவியுற்றோ அல்லது சிந்தித்தோ
இருந்திருந்தோமானால் நாங்கள் நரகவாசிகளில்
இருந்திருக்க மாட்டோம்.""
67:11. (இவ்வாறு)
தங்கள் பாவங்களை அவர்கள் ஒப்புக் கொள்வார்கள்
-
எனவே,
இந்நரகவாசிகளுக்குக் கேடுதான்.
67:12.
நிச்சயமாக எவர்கள் தங்கள் இறைவனை(ப்
பார்க்காதிருந்தும்)
அந்தரங்கத்தில் அவனுக்கு அஞ்சுகிறார்களோ,
அவர்களுக்கு மன்னிப்புமுண்டு,
பெரிய நற்கூலியும் உண்டு.
67:13.
மேலும்,
உங்கள் சொல்லை நீங்கள் இரகசியமாக்குங்கள்,
அல்லது அதை பகிரங்கமாக்குங்கள்
-
நிச்சயமாக அவன் இதயங்களிலுள்ளவற்றையும் மிக
அறிந்தவன்.
67:14. (அனைத்தையும்)
படைத்தவன் அறிய மாட்டானா?
அவன் நுணுக்கமாக கவனிப்பவன்;
யாவற்;றையும்
நன்கு தெறிந்தவன்.
67:15.
அவனே உங்களுக்கு இப்பூமியை
(நீங்கள்
வாழ்வதற்கு)
வசதியாக ஆக்கினான்;
ஆகவே,
அதன் பல மருங்குகளிலும்,
நடந்து அவனுடைய உணவிலிருந்து புசியுங்கள்;
இன்னும் அவனிடமே
(யாவரும்)
உயிர்த்தெழவேண்டியிருக்கிறது.
67:16.
வானத்தில் இருப்பவன் உங்களைப் பூமியில்
சொறுகிவிடுவான் என்பதை பற்றி நீங்கள் அச்சமற்று
இருக்கிறீர்களா?
அப்போது
(பூமி)
அதிர்ந்து நடுங்கும்.
67:17.
அல்லது வானத்திலிருப்பவன் உங்கள் மீது கல்மாரியை
அனுப்புவது பற்றி அச்சமற்று இருக்கிறீர்களா?
ஆகவே,
எனது எச்சரிக்கை
(செய்யப்பட்ட
வேதனை)
எப்படி என்பதை விரைவில் நீங்கள்
அறிந்துகொள்வீர்கள்.
67:18.
அன்றியும் அவர்களுக்கு முன் இருந்தார்களே
அவர்களும்
(நம்
வசனங்களை இவ்வாறே)
பொய்ப்பித்துக் கொண்டிருந்தனர்,
என்
எச்சரிக்கை எவ்வளவு கடுமையாக இருந்தது?
67:19.
இறக்கைகளை விரித்துக் கொண்டும்,
சேர்த்துக் கொண்டும்,
இவர்களுக்கு மேல்
(வானில்
பறக்கும்)
பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா?
அர்ரஹ்மானைத் தவிர
(வேறு
யாரும் கீழே விழாது)
அவற்றைத் தடுத்துக் கொண்டிருக்கவில்லை
-
நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளையும்
நோட்டமிடுகிபவன்.
67:20.
அன்றியும்,
அர்ரஹ்மானை தவிர வேறு எவர் உங்களுக்குப்
பட்டாளமாக இருந்து கொண்டு உதவி செய்வார்?
காஃபிர்கள் ஏமாற்றத்திலன்றி வேறில்லை.
67:21.
அல்லது,
தான் உணவளிப்பதை அவன் தடுத்துக் கொண்டால்,
உங்களுக்கு உணவளிப்பவர் யார்?
அப்படியல்ல,
ஆனால்,
இவர்கள் மாறு செய்வதிலும்
(சத்தியத்தை)
வெறுப்பதிலும் ஆழ்ந்திருக்கின்றனர்.
67:22.
முகம் குப்புற விழுந்து செல்பவன் மிக நேர்வழி
அடைந்தவனா?
அல்லது நேரான பாதையில் செவ்வையாக நடப்பவ(ன்
மிக நேர்வழி அடைந்தவ)னா.
68:23. (நபியே!)
நீர் கூறுவீராக:
''அவனே
உங்களைப் படைத்து உங்களுக்குச் செவிப்புலனையும்,
பார்வைகளையும் இதயங்களையும் அமைத்தான்;
(எனினும்)
மிகவும் சொற்பமாகவே நீங்கள் நன்றி
செலுத்துகிறீர்கள்.""
67:24. ''அவனே
உங்களைப் பூமியின்
(பல
பாகங்களிலும்)
பரவச் செய்தான்,
அன்றியும்,
அவனிடமே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்""
என்று கூறுவீராக.
67:25.
ஆயினும்,
''நீங்கள்
உண்மையாளர்களாக இருந்தால்,
வாக்களிக்கப்பட்ட
(மறுமையான)து
எப்பொழுது
(வரும்)?""
என்று
(காஃபிர்கள்)
கேட்கிறார்கள்.
67:26. ''இதைப்
பற்றி ஞானம் நிச்சயமாக அல்லாஹ்விடமே தான்
இருக்கிறது,
தவிர,
நிச்சயமாக நான் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை
செய்பவன் தான்""
என்று
(நபியே!)
நீர் கூறும்.
67:27.
எனவே,
அது
நெருங்கி வருவதை அவர்கள் காணும் போது
நிராகரிப்போரின் முகங்கள்
(நிறம்
பேதலித்துக்)
கெட்டுவிடும்,
இன்னும்,
''நீங்கள்
எதை வேண்டிக் கொண்டிருந்தீர்களோ,
அது
இது தான்""
என்று அவர்களுக்குக் கூறப்படும்.
67:28.
கூறுவீராக:
அல்லாஹ்,
என்னையும் என்னுடன் இருப்பவர்களையும்
(நீங்கள்
ஆசிப்பது போல்)
அழித்து விட்டாலும்,
அல்லது
(நாங்கள்
நம்புவது போல்)
அவன் எங்கள் மீது கிருபை புரிந்தாலும்,
நோவினை செய்யும் வேதனையை விட்டு,
காஃபிர்களைக் காப்பவர் யார் என்பதை
கவனித்தீர்களா?
67:29. (நபியே!) நீர் கூறும்: (எங்களைக்
காப்பவன்) அவனே - அர்ரஹ்மான், அவன் மீதே நாங்கள்
ஈமாக் கொண்டோம், மேலும் அவனையே முற்றிலும்
சார்ந்திருக்கிறோம் - எனவே, வெகு சீக்கிரத்தில்
பகிரங்கமான வழி கேட்டிலிருப்பவர் யார் என்பதை
நீங்கள் அறிவீர்கள்!""
67:30. (நபியே!) நீர் கூறும்: உங்களின் தண்ணீர்
பூமியினுள் (உறிஞ்சப்பட்டுப்) போய்விட்டால்,
அப்பொழுது ஓடும் நீரை உங்களுக்குக் கொண்டு
வருபவன் யார்? என்பதை கவனித்தீர்களா? என்று
(எனக்கு அறிவியுங்கள்).
|