|
அத்தியாயம்-68
ஸ_ரத்துல்
கலம்
(எழுதுகோல்)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
68:1.
நூன்,
எழுதுகோல் மீதும் இன்னும்
(அதன்
மூலம்)
அவர்கள் எழுதுவதின் மீதும் சத்தியமாக!
68:2.
உம்முடைய இறைவன் அருட்கொடையால்,
நீர் பைத்தியக்காரர் அல்லர்.
68:3.
இன்னும்,
உமக்குக் குறைவே இல்லாத நற்கூலி நிச்சயமாக
இருக்கிறது.
68:4.
மேலும்,
(நபியே)
நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம்
உடையவராக இருக்கின்றீர்.
68:5.
எனவே,
வெகு சீக்கிரத்தில் நீரும் பார்ப்பீர்;
அவர்களும் பார்ப்பார்கள்.
68:6.
உங்களில் எவர்
(பைத்தியமென்னும்
நோயால்)
சோதனைக்குள்ளாக்கப்பட்டவர் என்பதை.
68:7.
உம்முடைய இறைவன் அவனுடைய வழியை விட்டுத்
தவறியவர்கள் யார் என்பதை நிச்சயமாக நன்கறிவான்;
(அது
போன்றே)
நேர்வழி பெற்றோரையும் அவன் நன்கறிவான்.
68:8.
எனவே,
(சன்மார்க்கத்தைப்)
பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் வழிபடாதீர்.
68:9. (சன்மார்க்க
போதனையை)
நீர் தளர்த்தினால்,
தாங்களும் தளர்ந்து போகலாம் என்று அவர்கள்
விரும்புகின்றனர்.
68:10.
அன்றியும்,
இழிவானவனான அதிகம் சத்தியம் செய்யும்
ஒவ்வொருவனுக்கும் நீர் வழிபடாதீர்;
68:11. (அத்தகையவன்)
குறைகூறித்திரிபவன்,
கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன்.
68:12. (எப்பொழுதும்)
நன்மையானவற்றைத் தடுத்துக் கொண்டிருப்பவன்,
வரம்பு மீறிய பெரும் பாவி.
68:13.
கடின சித்தமுடையவன்,
அப்பால் இழி பிறப்புமுடையவன்.
68:14.
பெரும் செல்வமும்,
(பல)
ஆண்
மக்களும் உள்ளவனாக அவனிருப்பதால்
68:15.
நம்
வசனங்கள் அவனிடம் ஓதப்பட்டால்,
''இவை
முன்னோர்களின் கட்டுக்கதைகள்""
என்று அவன் கூறுகின்றான்.
68:16.
விரைவிலேயே அவனுடைய மூக்கின் மீது
அடையாளமிடுவோம்.
68:17.
நிச்சயமாக நாம் தோட்டமுடையவர்களைச் சோதித்தது
போலவே,
நாம் அவர்களைச் சோதித்தோம்.
அ(த்
தோட்;டத்திற்குடைய)வர்கள்
அதிலுள்ள கனிகளை அதிகாலையில் சென்று பறித்து
விடுவோமென்று சத்தியம் செய்தார்கள்.
68:18.
அல்லாஹ் நாடினால் என்று அவர்கள் கூறவில்லை,
68:19.
எனவே,
அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது உம்
இறைவனிடமிருந்து சுற்றக் கூடிய
(நெருப்பின்
ஆபத்)து
சுற்றி(த்
தோட்டத்தை)
அழித்து விட்டது.
68:20. (நெருப்புக்
கரித்து விட்ட படியால் அத்தோட்டம்)
காலையில் கருத்த சாம்பலைப் போல் ஆயிருந்தது.
68:21. (இது
அறியாது)
காலையில் எழுந்த அவர்கள் ஒருவரை ஒருவர்
அழைத்தனர்.
68:22. ''நீங்கள்
(விளைந்த)
கனிகளைக் கொய்பவர்களாக இருந்தால் உங்கள்
தோட்டத்திற்கு அதிகாலையில் செல்லுங்கள்""
(என்று
கூறிக் கொண்டனர்).
68:23.
எனவே அவர்கள்
(பிறர்
அறியாது)
மெதுவாகப் பேசிக் கொண்டு சென்றனர்,
68:24. ''எந்த
ஏழை எளியவரும் இன்று உங்களிடம் அ(த்
தோட்டத்)தில்
நிச்சயமாக பிரவேசிக்கக் கூடாது""
(என்று).
68:25.
உறுதியுடன் சக்தியுடையவர்களாக காலையில் சென்றனர்.
68:26.
ஆனால்,
அவர்கள் அதை
(தோட்டத்தை
அழிந்து போன நிலையில்)
கண்ட போது:
''நிச்சயமாக
நாம் வழி தவறி
(வேறு
தோட்டத்திற்கு)
வந்து விட்டோம்""
என்று கூறினார்கள்.
68:27. (பின்னர்
கவனித்துப் பார்த்துவிட்டு)
''இல்லை!
(ஏழை
எளியோர்க்கு எதுவும் கிடைக்காமற் செய்து)
நாம் தாம் பாக்கியம் இழந்தவர்களாக ஆகிவிட்டோம்""
(என்றும்
கூறிக்கொண்டனர்.)
68:28.
அவர்களில் நடுநிலையுள்ள ஒருவர்
''நீங்கள்
தஸ்பீஹ{
செய்திருக்க வேண்டும் என்று நான் உங்களுக்கு
கூறவில்லையா?""
என்று கூறினார்.
68:29. ''எங்கள்
இறைவன் தூயவன்,
நாம் தாம் நிச்சமயாக அநியாயம் செய்தவர்கள்
ஆகிவிட்டோம்""
என்றும் கூறினர்.
68:30.
பின்னர்,
அவர்களில் சிலர் சிலரை நிந்தித்தவர்களாக
முன்னோகினர்.
68:31.
அவர்கள் கூறினார்கள்:
''எங்களுக்குண்டான
கேடே!
நிச்சயமாக நாம் வரம்பு மீறியவர்களாக இருந்தோம்.
68:32. ''எங்களுடைய
இறைவன் இதைவிட மேலானதை எங்களுக்கு மாற்றித்
தரக்கூடும்,
நாங்கள்
(தவ்பா
செய்து)
நிச்சயமாக எங்களுடைய இறைவன் மீதே ஆதரவு
வைக்கிறோம்""
(எனக்
கூறினர்).
68:33.
இவ்வாறுதான்
(இவ்வுலக)
வேதனை வருகிறது,
அவர்கள் அறிந்து கொள்வார்களானால் மறுமையின்
வேதனை
(இதைவிட)
மிகவும் பெரிது
(என
உணர்ந்து சன்மார்க்கத்தின் பால் திரும்புவார்கள்).
68:34.
நிச்சயமாக,
பயபக்தியுடையோருக்கு,
அவர்களுடைய இறைவனிடத்தில்
(பாக்கியமுடைய)
சுவனச் சோலைகள் உண்டு.
68:35.
நாம் முஸ்லிம்களை,
(பாவம்
செய்யும்)
குற்றவாளிகளைப் போல் ஆக்குவோமா?
68:36. (சத்தியத்தை
நிராகரிப்போரே!
உங்களுக்கு என்ன நேர்ந்தது?
(இரு
சாராரும் சமமென)
எவ்வாறு நீங்கள் தீர்ப்புச் செய்கிறீர்கள்?
68:37.
அல்லது உங்களிடம் ஏதாவது வேத(ஆதார)ம்
இருக்கின்றதா?
அதில் நீங்கள் படித்திருக்கின்றீர்களா?
68:38.
நிச்சயமாக நீங்கள் உங்களுக்காகத்
தெரிந்தெடுத்துக் கொள்வதுவே
(சரி)
என்று அதில் இருக்கின்றதா,
68:39.
அல்லது,
நீங்கள் தீர்ப்புச் செய்து கொள்வதெல்லாம் கியாம
நாள் வரை உங்களுக்கு நிச்சயமாகக் கிடைத்துக்
கொண்டிருக்கும் என்று நம் உறுதி பிரமாணங்கள்
உங்களிடம் இருக்கின்றனவா?
68:40. (அவ்வாறெனில்)
அவர்களில் எவர் அதற்குப் பொறுப்பேற்பவர் என்பதை
(நபியே!)
நீர் அவர்களிடம் கேட்பீராக.
68:41.
அல்லது
(பொறுப்பேற்க)
அவர்களுக்கு இணை வைக்கும் கூட்டாளிகள் தாம்
இருக்கின்றார்களா?
அவ்வாறாயின்,
அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களுடைய
கூட்டாளிகளைக் கொண்டு வரட்டும்.
68:42.
கெண்டைக் காலை விட்டு
(திரை)
அகற்றப்படும் நாளில் ஸ{ஜூது
செய்யுமாறு
(மக்கள்)
அழைக்கப்படும் நாளில்,
(இவ்வுலகில்
மாறு செய்த)
அவர்கள் அதற்கும் இயலாதிருப்பார்கள்.
68:43.
அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியவையாக
இருக்கும்நிலையில் இழிவு அவர்களை மூடிக்
கொள்ளும்;
அவர்களோ
(உலகில்)
திடமாக இருந்த போது,
ஸ{ஜூது
செய்யுமாறு அழைக்கப்பட்டுக் கொண்டுதானிருந்தனர்.
(ஆனால்
அப்போது அலட்சியமாக இருந்தனர்.)
68:44.
எனவே,
என்னையும்,
இந்தச் செய்தியைப் பொய்யாக்குவோரையும் விட்டு
விடுவீராக!
அவர்களே அறியாத விதத்தில் படிப்படியாகப்
பிடிப்போம்.
68:45.
அன்றியும்,
நான் அவர்களுக்கு அவகாசம் கொடுப்பேன்,
நிச்சயமாக என் திட்டமே உறுதியானது.
68:46.
நீர் அவர்களிடம் ஏதாவது கூலிகேட்டு,
அதனால் அவர்களுக்கு கடன் சுமை ஏற்பட்டு விட்டதா?
68:47.
அல்லது மறைவான விஷயங்கள்
(எழுதப்படும்
ஏடு)
அவர்களிடம் இருந்து
(அதில்)
அவர்கள் எழுதுகின்றார்களா?
68:48.
ஆகவே,
உம்முடைய இறைவனின் கட்டளைக்காக
(நபியே!)
நீர் பொறுத்திருப்பீராக,
மீனுடையவரைப் போன்று
(அவசரப்பட்டவர்)
ஆகிவிடவேண்டாம்,
அவர் துன்பம் நிறைந்தவராகத்
(தன்
இறைவனை)
அழைத்தபோது:
68:49.
அவருடைய இறைவனிடமிருந்து அருள் கொடை அவரை
அடையாதிருந்தால்,
அவர் பழிக்கப்பட்டவராக வெட்டவெளியில்
எறியப்பட்டிருப்பார்.
68:50.
ஆனால்,
அவருடைய இறைவன்,
அவரைத் தேர்ந்தெடுத்து,
அவரை ஸாலிஹானவர்களில்
-
நல்லவர்களில் நின்றும் ஆக்கினான்.
68:51.
மேலும்,
எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்கள்
நல்லுபதேசத்தை
(குர்ஆனை)
கேட்கும் போது,
தங்களுடைய பார்வைகளால் உம்மை வீழ்த்திட
நெருங்குகிறார்கள்;
''நிச்சயமாக
அவர் பைத்தியக்காரர்""
என்றும் கூறுகின்றனர்.
68:52.
ஆனால் அது
(குர்ஆன்)
அகிலத்தார் அனைவருக்குமே நல்லுபதேசயேன்றி
வேறில்லை.
|