|
அத்தியாயம்-69
ஸ_ரத்துல்
ஹாஃக்ஃகா
(நிச்சயமானது)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
69:1.
நிச்சயமானது.
69:2.
நிச்சயமானது எது?
69:3.
அன்றியும் நிச்சயமானது என்னவென்று உமக்கு
அறிவித்தது எது?
69:4.
ஸமூது
(கூட்டத்தாரு)ம்,
ஆது
(கூட்டத்தாரு)ம்
திடுக்கிடச் செய்வதை
(கியாம
நாளைப்)
பொய்ப்பித்தனர்.
69:5.
எனவே,
ஸமூது கூட்டத்தார்
(அண்டம்
கிடுகிடச் செய்யும்)
பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர்.
69:6.
இன்னும்,
ஆது
கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த
கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.
69:7.
அவர்கள் மீது,
அதை
ஏழு இரவுகளும்,
எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான்,
எனவே அந்த சமூகத்தினரை,
அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல்
(பூமியில்)
விழுந்து கிடப்பதை
(அக்காலை
நீர் இருந்திருந்தால்)
பார்ப்பீர்.
69:8.
ஆகவே,
அவர்களில் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா?
69:9.
அன்றியும் ஃபிர்அவ்னும்,
அவனுக்கு முன் இருந்தோரும் தலை
கீழாய்ப்புரட்டப்பட்ட ஊராரும்,
(மறுமையை
மறுத்து)
பாவங்களைச் செய்து வந்தனர்.
69:10.
அதனால்,
அவர்கள் தம் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர்,
ஆதலால் அவன் அவர்களைப் பலமான பிடியாகப்
பிடித்துக் கொண்டான்.
69:11.
தண்ணீர் பொங்கிய போது நிச்சயமாக நாம் உங்களைக்
கப்பலில் ஏற்றி(க்
காப்பாற்றி)னோம்.
69:12.
அதை
உங்களுக்கு நினைவூட்டும் ஒரு
படிப்பினையாக்குவதற்கும்,
பேணிக்காக்கும் செவி
(அதை
நினைவில் ஞாபகத்தில் வைத்து)ப்
பேணிக்கொள்வதற்கும்
(ஆக
அவ்வாறு செய்தோம்).
69:13.
எனவே,
ஸ_ரில்
(எக்காளத்தில்)
ஊதல் ஒருமுறை ஊதப்படும் போது:
69:14.
இன்னும் பூமியும் மலைகளும் தூக்கி
(எறியப்பட்டு)
பின்னர் ஒன்றோடு ஒன்று மோதி அவையிரண்டும் ஒரே
தூளாக ஆக்கப்பட்டால்
-
69:15.
அந்த நாளில் தாம் நிகழ வேண்டிய
(மாபெரும்
சம்பவம்)
நிகழும்.
69:16.
வானமும் பிளந்து,
அன்னாளில் அது அடியோடு தன் சக்தியை இழந்து
விடும்.
69:17.
இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள்,
அன்றியும்,
அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை
(வானவர்)
எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள்.
69:18. (மானிடர்களே!)
அந்நாளில் நீங்கள்
(இறைவன்
முன்)
கொண்டுபோகப்படுவீர்கள்,
மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு
மறைந்து விடாது.
69:19.
ஆகவே,
எவருடைய பட்டோலை அவருடைய வலக்கையில்
கொடுக்கப்படுமோ,
அவர்
(மகிழ்வுடன்),
''இதோ!
என்
பட்டோலையைப் படியுங்கள்""
எனக் கூறுவார்.
69:20. ''நிச்சயமாக,
நாம் உன்னுடைய கேள்வி கணக்கை,
திட்டமாக சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்.""
69:21.
ஆகவே,
அவர் திருப்தியான சுக வாழ்க்கையில்
-
69:22.
உயர்ந்த சுவர்க்கத்தில் இருப்பார்.
69:23.
அதன் கனி(வகை)கள்
(கைக்கு
எட்டியதாக)
சமீபத்திருக்கும்.
69:24. ''சென்று
போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய
(நல்ல
அமல்களின்)
காரணத்தால்,
நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்;
இன்னும் பருகுங்கள்""
(என
அவர்களுக்குக் கூறப்படும்).
69:25.
ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில்
கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்;
''என்னுடைய
பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க
வேண்டுமே!
69:26. ''அன்றியும்,
என்
கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே-
69:27. ''(நான்
இறந்த போதே)
இது
முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா?
69:28. ''என்
செல்வம் எனக்குப் பயன்படவில்லையே!
69:29. ''என்
செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து
விட்டதே!""
(என்று
அரற்றுவான்).
69:30. ''(அப்போது)
அவனைப் பிடித்து,
பிறகு அவனுக்கு அரிகண்டமும்
(விலங்கும்)
மாட்டுங்கள்.""
69:31. ''பின்,
அவனை நரகத்தில் தள்ளுங்கள்.
69:32. ''பின்னர்,
எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக்
கட்டுங்கள்""
(என்று
உத்தரவிடப்படும்).
69:33. ''நிச்சயமாக
அவன் மகத்துவமிக்க அல்லாஹ்வின் மீது ஈமான்
கொள்ளாதிருந்தான்.""
69:34. ''அன்றியும்,
அவன் ஏழைகளுக்கு(த்
தானும் உணவளிக்கவில்லை,
பிறரையும்)
உணவளிக்கத் துhண்டவில்லை.""
69:35. ''எனவே,
அவனுக்கு இன்றைய தினம் இங்கே
(அனுதாபப்படும்)
எந்த நண்பனும் இல்லை.""
69:36. ''சீழ்
நீரைத் தவிர,
அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை.""
69:37. ''குற்றவாளிகளைத்
தவிர,
வேறு எவரும் அதைப் புசியார்.""
69:38.
ஆகவே,
நீங்கள் பார்ப்பவற்றின் மீதும் சத்தியம்
செய்கிறேன்.
69:39.
நீங்கள் பார்க்காதவற்றின் மீதும்,
(சத்தியம்
செய்கிறேன்.)
69:40.
நிச்சயமாக,
இது
(நாம்
அருளியவாறு ஓதி வரும்)
கண்ணியமிக்க தூதரின் சொல்லாகும்.
69:41.
இது
ஒரு கவிஞனின் சொல்லன்று
(எனினும்)
நீங்கள் மிகவும் சொற்பமாகவே நம்புகிறீர்கள்.
69:42. (இது)
ஒரு
குறிகாரனின் சொல்லுமன்று
(எனினும்)
நீங்கள் சொற்பமாகவே
(இதை
நினைந்து)
நல்லறிவு பெறுகிறீர்கள்.
69:43.
அகிலத்தாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து
(இது)
இறக்கியருளப்பட்டதாகும்.
69:44.
அன்றியும்,
நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக்
கூறியிருப்பாரானால்
-
69:45.
அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக்
கொண்டு-
69:46.
பின்னர்,
அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம்.
69:47.
அன்றியும்,
உங்களில் எவரும்
(நாம்)
அ(வ்வாறு
செய்வ)தைத்
தடுப்பவர்களில்லை.
69:48.
ஆகவே,
நிச்சயமாக அது
(குர்ஆன்)
பயபக்தியுடையவர்களுக்கு நல்லுபதேசமாகும்.
69:49.
ஆயினும்,
(அதைப்)
பொய்ப்பிப்பவர்களும் உங்களில் இருக்கின்றார்கள்
என்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.
69:50.
அன்றியும்,
நிச்சயமாக அது காஃபிர்களுக்கு கைசேதமாக
இருக்கிறது.
69:51.
மேலும்,
அது
நிச்சயமாக உறுதியான உண்மையாகும்.
69:52.
ஆகவே,
மகத்தான உம்முடைய இறைவனின் திருப்பெயரைக் கொண்டு
(துதி
செய்து)
தஸ்பீஹ{
செய்வீராக.
|