|
அத்தியாயம்-70
ஸ_ரத்துல்
மஆரிஜ்
(உயர்வழிகள்)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
70:1. (நிராகரிப்போருக்கு)
சம்பவிக்கப் போகும் வேதனை பற்றி கேள்வி கேட்பவன்
ஒருவன்
(ஏளனமாகக்)
கேட்கிறான்.
70:2.
காஃபிர்களுக்கு
(அது
ஏற்படும்போது)
அதனைத் தடுப்பவர் எவருமில்லை.
70:3. (அவ்வேதனை)
உயர் வழிகளையுடைய அல்லாஹ்வினால்
(ஏற்படும்).
70:4.
ஒரு
நாள் மலக்குகளும்,
(ஜிப்ரயீலாகிய)
அவ்வான்மாவும்,
அவனிடம் ஏறிச் செல்வார்கள் அ(த்தினத்)தின்
அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள்
(சமமாக)
இருக்கும்.
70:5.
எனவே நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக.
70:6.
நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாகக்
காண்கின்றனர்.
70:7.
ஆனால்,
நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கிறோம்.
70:8.
வானம் உருக்கப்பட்ட செம்பைப் போல் ஆகிவிடும்
நாளில்-
70:9.
இன்னும்,
மலைகள் பஞ்சைப் போல் ஆகிவிடும்
(நாளில்)-
70:10. (அனுதாபமுடையவனாக
இருந்த)
ஒரு
நண்பன் மற்றொரு நண்பனை பற்றி
(அனுதாபத்துடன்)
விசாரிக்கமாட்டான்.
70:11.
அவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள்,
(ஆனால்
விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்);
அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி
ஈடுகொடுக்கப் பிரியப்படுவான்:
தன்
மக்களையும்-
70:12.
தன்
மனைவியையும்,
தன்
சகோதரனையும்-
70:13.
அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய
சுற்றத்தாரையும்-
70:14.
இன்னும் பூமியிலுள்ள அனைவரையும்
(ஈடுகொடுத்துத்)
தன்னைக் காப்பாற்றிக் கொள்ள
(பிரியப்படுவான்).
70:15.
அவ்வாறு
(ஆவது)
இல்லை,
ஏனெனில் நிச்சயமாக அ(ந்நரகமாவ)து
கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாகும்.
70:16.
அது
(சிரசுத்)
தோல்களை
(எரித்து)
கழற்றி விடும்.
70:17. (நேர்வழியைப்)
புறக்கணித்துப் புறங்காட்டிச் சென்றோரை அ(ந்நரகத்தீயான)து
அழைக்கும்.
70:18.
அன்றியும்,
பொருளைச் சேகரித்து,
பிறகு
(அதைத்
தக்கபடி செலவு செய்யாமல்)
காத்துக் கொண்டானே
(அவனையும்
அது அழைக்கும்)
70:19.
நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே
படைக்கப்பட்டிருக்கின்றான்.
70:20.
அவனை ஒரு கெடுதி தொட்டுவிட்டால் பதறுகிறான்,
70:21.
ஆனால் அவனை ஒரு நன்மை தொடுமானால்
(அது
பிறருக்கும் கிடைக்காதவாறு)
தடுத்துக்கொள்கிறான்.
70:22.
தொழுகையாளிகளைத் தவிர-
70:23. (அதாவது)
தம்
தொழுகையின் மீது நிலைத்திருக்கின்றார்களே
அவர்கள்.
70:24.
அவர்களது பொருள்களில்
(பிறருக்கு)
நிர்ணயிக்கப்பட்ட பங்கு உண்டு.
70:25.
யாசிப்போருக்கும் வறியோருக்கும்
(அவர்களின்
பொருட்களில் பங்குண்டு).
70:26.
அன்றியும் நியாயத் தீர்ப்பு நாள் உண்டென்பதை
(மெய்ப்படுத்தி)
உறுதிகொள்பவர்கள்.
70:27.
இன்னும் தம்முடைய இறைவன்
(வழங்கக்
கூடிய)
வேதனைக்கு அஞ்சியவாறு இருப்பார்களே அவர்கள்.
70:28.
நிச்சயமாக அவர்களுடைய இறைவன்
(வழங்கக்கூடிய)
வேதனை அச்சப்படாது இருக்கக் கூடியதல்ல.
70:29.
அன்றியும்,
தங்கள் மறைவிடங்களை
(கற்பை)
பேணிக் கொள்கிறார்களே அவர்கள்-
70:30.
தம்
மனைவியரிடத்திலும்,
தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக்
கொண்டவர்களிடத்திலும்
(உறவு
கொள்வதைத்)
தவிர,
நிச்சயமாக அவர்கள்
(இத்தகையோருடன்
உறவு கொள்வது பற்றி)
நிந்திக்கப்பட மாட்டார்கள்.
70:31.
எனவே எவரேனும் இதற்கப்பால்
(உறவு
கொள்வதைத்)
தேடினால் அவர்கள்
(இறைவன்
விதித்த)
வரம்பை மீறியவர்கள்.
70:31.
இன்னும் எவர்கள் தம் அமானிதங்களையும் தம்
வாக்குறுதிகளையும் பேணிக் கொள்கின்றார்களோ
அவர்கள்.
70:33.
இன்னும்,
எவர்கள் தங்கள் சாட்சியங்களில் உறுதியுடன்
இருக்கிறார்களோ அவர்கள்.
70:34.
எவர்கள் தங்கள் தொழுகைகளைப் பேணிக்
கொள்கின்றார்களோ அவர்கள்.
70:35. (ஆக)
இத்தகையோர் தாம் சுவர்க்கங்களில் கண்ணியப்
படுத்தப்பட்டவர்களாக இருப்பார்கள்.
70:36.
நிராகரிப்பவர்களுக்கு என்ன?
(கழுத்துகளை
நீட்டியவாறு அவர்கள்)
உங்கள் முன் ஓடிவருகின்றனர்.
70:37.
வலப்புறமிருந்தும் இடப்புறமிருந்தும் கூட்டம்
கூட்டமாக.
70:38.
அவர்களில் ஒவ்வொரு மனிதனும் பாக்கியமுள்ள
சுவர்க்கத்தில்
-
ஜன்னத்துல் நயீமில்
-
நுழைந்துவிட ஆசைப்படுகிறானா?
70:39.
அவ்வாறு
(ஆகப்
போவது)
இல்லை.
நிச்சயமாக நாம் அவர்களை அவர்கள்
அறிந்திருக்கின்றார்களே,
அதிலிருந்தே படைத்தோம்.
70:40.
எனவே,
கிழக்குத் திசைகள்,
மேற்குத் திசைகள் ஆகியவற்றின் இறைவனாகிய
(நம்)
மீது சத்தியமாக,
நிச்சயமாக நாம்
(விரும்பியவாறு
செய்ய)
ஆற்றலுடையோம்.
70:41. (அவர்களுக்கு
பதிலாக)
அவர்களை விடச் சிறந்தவர்களை நாம்
மாற்றியமைப்பதில்
(ஆற்றலுடையோம்)
ஏனெனில் நம்மை
(எவரும்)
மிகைக்க இயலாது.
70:42.
ஆகவே,
அவர்களுக்கு வாக்களிக்கப் பட்ட அந்த நாளை
அவர்கள் சந்திக்கும் வரையில்,
அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கவும்
(வீணானவற்றில்)
மூழ்கிக் கிடக்கவும்,
அவர்களை நீர் விட்டுவிடுவீராக.
70:43.
நிச்சயமாக அவர்கள்
(தாங்கள்
ஆராதனை செய்யும்)
எல்லைக் கற்களின்பால் விரைந்து செல்பவர்களைப்
போல் அந்நாளில்
(தங்கள்)
கப்றுகளிலிருந்து விரைவாக வெளியாவார்கள்.
70:44.
அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியிருக்கும்,
இழிவு அவர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கும்,
அவர்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்களே
அது அந்த நாள்தான்.
|