|
அத்தியாயம்-71
ஸ_ரத்து
நூஹ்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
71:1.
நிச்சயமாக நாம் நூஹை,
அவருடைய சமூகத்தாரிடம்;
''நீர்
உம் சமூகத்தாருக்கு நோவினை செய்யும் வேதனை
அவர்கள் மீது வருவதற்கு முன்னர்
(அதுபற்றி)
அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக""
என
(ரஸ_லாக)
அனுப்பினோம்.
71:2. ''என்
சமூகத்தார்களே!
நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக
அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்""
என்று கூறினார்.
71:3. ''அல்லாஹ்வையே
நீங்கள் வணங்குங்கள்;
அவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்;
எனக்கும் வழிபடுங்கள்.
71:4. ''(இவ்வாறு
நீங்கள் நடந்தால்)
உங்களுடைய பாவங்களை அவன் மன்னிப்பான்;
மேலும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை அவன் உங்களுக்கு
அவகாசமளிப்பான்;
நிச்சயமாக அல்லாஹ்வின் தவணை வரும்போது,
அது
பிற்படுத்தப்படமாட்டாது
- (இதை)
நீங்கள் அறிந்து கொண்டவர்களாக இருந்தால்""
(என்றும்
கூறினார்).
71:5.
பின்னர் அவர்,
''என்
இறைவா!
நிச்சயமாக,
நான் என் சமூகத்தாரை இரவிலும்,
பகலிலும்
(நேர்வழியின்பால்)
அழைத்தேன்.
71:6. ''ஆனால்
என் அழைப்பு அவர்கள்
(நேர்வழியிலிருந்து)
வெருண்டு ஓடுதலை அதிகரித்ததல்லாமல் வேறில்லை.
71:7. ''அன்றியும்;
நீ
அவர்களுக்கு மன்னிப்பு அளிப்பதற்காக,
(உன்
பக்கம்)
நிச்சயமாக அவர்களை நான் அழைத்தபோதெல்லாம்,
தம்
காதுகளில் தம் விரல்களை வைத்துக் கொண்டனர்,
மேலும்,
தங்களைத் தம் ஆடைகளைக் கொண்டு மூடிக் கொண்டனர்,
அன்றியும்,
அவர்கள்
(தம்
வழிகேட்டில்)
பிடிவாதமாகவும்;
பெரும் மமதை பெருமையடித்துக் கொள்வோராகவுமே
இருக்கிறார்கள்.
71:8. ''பின்னர்,
நிச்சயமாக நான் அவர்களை சப்தமாக அழைத்(தும்
போதித்)தேன்.
71:9. ''அதன்
பின்னர்,
நிச்சயமாக நான் அவர்களிடம் பகிரங்கமாகவும்
பேசினேன்;
இரகசியமாக அந்தரங்கத்திலும் பேசினேன்.
71:10.
மேலும்,
''நீங்கள்
உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்;
நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்""
என்றுங் கூறினேன்.
71:11. ''(அப்படிச்
செய்வீர்களாயின்)
அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான்.
71:12. ''அன்றியும்
அவன் உங்களுக்குப் பொருள்களையும்,
புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான்;
இன்னும்,
உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்;
உங்களுக்காக ஆறுகளையும்
(பெருக்கெடுத்து
ஓடுமாறு)
உண்டாக்குவான்.
71:13. ''உங்களுக்கு
என்ன நேர்ந்தது?
அல்லாஹ்வின் மகத்துவத்தை(யும்,
மேன்மையையும்)
நீங்கள் உணராமலிருக்கின்றீர்கள்.
71:14. ''நிச்சயமாக
அவன் உங்களை பல நிலைகளிலிருந்து படைத்தான்.
71:15. ''ஏழு
வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காய் எப்படிப்
படைத்திருக்கின்றான் என்பதை நீங்கள்
பார்க்கவில்லையா?
71:16. ''இன்னும்
அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும்,
சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே
ஆக்கியிருக்கின்றான்.
71:17. ''அல்லாஹ்வே
உங்களை பூமியிலிருந்து சிறந்த முறையில்
உருவாக்கினான்.
71:18. ''பின்னர்
அந்த பூமியிலேயே உங்களை மீண்டும் சேர்த்து,
மற்றொருமுறை உங்களை
(அதிலிருந்து)
வெளிப்படுத்துவான்.
71:19. ''அன்றியும்,
அல்லாஹ்,
உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான்.
71:20. ''அதில்
நீங்கள் செல்வதற்காக விசாலமான பாதைகளையும்
அமைத்தான்""
(என்றும்
போதித்தார்).
71:21.
நூஹ் கூறினார்:
''என்
இறைவா!
நிச்சயமாக அவர்கள் எனக்கு மாறு செய்கின்றனர்,
அன்றியும்,
எவர்களுக்கு அவர் பொருளும்,
அவர் மக்களும் நஷ்டத்தையன்றி
(வேறு
எதையும்)
அதிகரிக்கவில்லையோ,
அ(த்தகைய)வர்களையே
அவர்கள் பின்பற்றுகின்றனர்.
71:22. ''மேலும்
(எனக்கெதிராகப்)
பெரும் சூழ்ச்சியாகச் சூழ்ச்சி செய்கின்றனர்.""
71:23.
மேலும் அவர்கள்;
''உங்கள்
தெய்வங்களை விட்டுவிடாதீர்கள்;
இன்னும் வத்து,
ஸ{வாஉ,
யகூஸ{,
யஊக்,
நஸ்ரு ஆகியவற்றை நிச்சயமாக நீங்கள்
விட்டுவிடாதீர்கள்""
என்றும் சொல்கின்றனர்.
71:24. ''நிச்சயமாக
அவர்கள் அநேகரை வழிகெடுத்துவிட்டனர்,
ஆகவே இவ்வநியாயக் காரர்களுக்கு வழி கேட்டைத்
தவிர,
வேறு எதையும் நீ அதிகப்படுத்தாதே.""
71:25.
ஆகவே,
அவர்கள் தம் பாவங்களினால் மூழ்கடிக்கப்பட்டு,
பின்னால் நரக நெருப்பிலும் புகுத்தப்பட்டனர்.
எனவே,
அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு உதவி செய்வோரை
அவர்கள் காணவில்லை.
71:26.
அப்பால் நூஹ் கூறினார்:
''என்
இறைவா!
பூமியின் மீது இக்காஃபிர்களில் எவரையும் நீ
வசித்திருக்க விட்டு விடாதே.
71:27. ''நிச்சயமாக
நீ அவர்களை விட்டு வைப்பாயானால்.
உன்
அடியார்களை அவர்கள் வழி கெடுத்துவிடுவார்கள்;
அன்றியும்,
பாவிகளையும்,
காஃபிர்களையும் அன்றி அவர்கள்
பெற்றெடுக்கமாட்டார்கள்.
71:28. ''என்
இறைவா!
எனக்கும்,
என்
பெற்றோருக்கும்,
என்
வீட்டில் நம்பிக்கையாளர்களாகப்
பிரவேசித்தவர்களுக்கும்,
முஃமினான ஆண்களுக்கும்,
முஃமினான பெண்களுக்கும்,
நீ
மன்னிப்பளிப்பாயாக!
மேலும்,
அநியாயக்காரர்களுக்கு அழிவையேயல்லாது
(வேறு
எதையும்)
நீ
அதிகரிக்காதே""
(என்றும்
கூறினார்).
|