|
அத்தியாயம்-75
ஸ_ரத்துல்
கியாமா
(மறுமை
நாள்)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
75:1.
கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
75:2.
நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும்
நான் சத்தியம் செய்கின்றேன்.
75:3. (மரித்து
உக்கிப்போன)
மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே
மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?
75:4.
அன்று,
அவன் நுனி விரல்களையும்
(முன்னிருந்தவாறே)
செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.
75:5.
எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை
(கியாம
நாள்)
பொய்ப்பிக்கவே நாடுகிறான்.
75:6. ''கியாம
நாள் எப்போழுது வரும்?""
என்று
(ஏளனமாகக்)
கேட்கிறான்.
75:7.
ஆகவே,
பார்வையும் மழுங்கி-
75:8.
சந்திரன் ஒளியும் மங்கி-
75:9.
சூரியனும் சந்திரனும் ஒன்று
சேர்க்கப்பட்டுவிடும்
.
75:10.
அந்நாளில்
''(தப்பித்துக்
கௌ;ள)
எங்கு விரண்டோடுவது?""
என்று மனிதன் கேட்பான்.
75:11. ''இல்லை,
இல்லை!
தப்ப இடமேயில்லை!""
(என்று
கூறப்படும்).
75:12.
அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு.
75:13.
அந்நாளில்,
மனிதன் முற்படுத்தி
(அனுப்பி)யதையும்,
(உலகில்)
பின் விட்டு வைத்ததையும் பற்றி
அறிவிக்கப்படுவான்.
75:14.
எனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி
கூறுபவனாக இருக்கிறான்.
75:15.
அவன் தன்(பிழைகளை
மறைக்க)
புகல்களை எடுத்துப் போட்ட போதிலும்!
75:16. (நபியே!)
அவசரப்பட்டு அதற்காக
(குர்ஆனை
ஓதவதற்காக)
உம்
நாவை அசைக்காதீர்கள்.
75:17.
நிச்சயமாக அதனை
(குர்ஆனை)
ஒன்று சேர்ப்பதும்,
(நீர்)
அதை
ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன.
75:18.
எனவே
(ஜிப்ரயீலின்
வாயிலாக),
அதனை நாம் ஓதி விட்டோமாயின்,
அப்பால்,
அதன் ஓதுதலை பின் தொடர்ந்து
(ஓதிக்)
கொள்ளுங்கள்.
75:19.
பின்னர்,
அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது.
75:20.
எனினும்
(மனிதர்களே!)
நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே
பிரியப்படுகிறீர்கள்.
75:21.
ஆகவேதான்
(இம்மையைப்
பற்றிக் கொண்டு)
மறுமையை விட்டு விடுகிறீர்கள்.
75:22.
அந்நாளில் சில முகங்கள்
(மகிழ்ச்சியால்)
செழுமையாக இருக்கும்.
75:23.
தம்முடைய இறைவனளவில் நோக்கிய வையாக இருக்கும்.
75:24.
ஆனால்,
அந்நாளில் வேறு சில முகங்களோ
(துக்கத்தால்)
சுண்டியிருக்கும்.
75:25.
இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது
ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும்.
75:26.
அவ்வாறல்ல!
(மரண
வேளையில் அவன் உயிர்)
தொண்டைக்குழியை அடைந்து விட்டால்,
75:27. ''மந்திரிப்பவன்
யார்?""
எனக் கேட்கப்படுகிறது.
75:28.
ஆனால்,
அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு
(காலம்)
என்பதை உறுதி கொள்கிறான்.
75:29.
இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக்
கொள்ளும்.
75:30.
உம்
இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச்
செல்லப்படுதல் இருக்கிறது.
75:31.
ஆனால்
(அம்மனிதனோ
சன்மார்க்கத்தின் மீது)
உறுதிகொள்ளவுமில்லை,
அவன் தொழவுமில்லை.
75:32.
ஆகவே,
அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான்.
75:33.
பின்னர்,
அவன் தன் குடும்பத்தாரிடம்
-
மமதையோடு சென்று விட்டான்.
75:34.
கேடு உனக்கே!
(மனிதனே!
உனக்குக்)
கேடுதான்!
75:35.
பின்னரும்,
உனக்கே கேடு!
அப்பாலும் கேடுதான்.
75:36.
வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன்
எண்ணிக் கொள்கிறானா?
75:37. (கர்ப்பக்
கோளறைக்குள்)
சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும்
இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?
75:38.
பின்னர் அவன்
'அலக்"
என்ற நிலையில் இருந்தான்,
அப்பால்
(இறைவன்
அவனைப்)
படைத்து செவ்வையாக்கினான்.
75:39.
பின்னர் அதிலிருந்து ஆண்,
பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான்.
75:40. (இவ்வாறு
படைக்கும்)
அவன் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன்
அல்லவா?
|