|
அத்தியாயம்-76
ஸ_ரத்துத்
தஹ்ர்
(காலம்)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
76:1.
திட்டமாக மனிதன் மீது காலத்தில் ஒரு நேரம் வந்து,
அதில் அவன் இன்ன பொருள் என்று குறிப்பிட்டுக்
கூறுவற்கில்லாத நிலையில் இருக்கவில்லையா?
76:2. (பின்னர்
ஆண்,
பெண்)
கலப்பான இந்திரியத்துளியிலிருந்து நிச்சயமாக
மனிதனை நாமே படைத்தோம்
-
அவனை நாம் சோதிப்பதற்காக,
அவனைக் கேட்பவனாகவும்,
பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.
76:3.
நிச்சயமாக,
நாம் அவனுக்கு வழியைக் காண்பித்தோம்;
(அதைப்
பின்பற்றி)
நன்றி உள்ளவனாக இருக்கின்றான்;
அல்லது
(அதைப்புறக்கணித்து)
நன்றியற்றவனாக இருக்கின்றான்.
76:4.
காஃபிர்களுக்குச் சங்கிலிகளையும்,
அரிகண்டங்களையும்,
கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பையும்
நிச்சயமாக நாம் தயார் செய்திருக்கின்றோம்.
76:5.
நிச்சயமாக நல்லவர்கள்
(சுவர்க்கத்தில்)
குவளைகளிலிருந்து
(பானம்)
அருந்துவார்கள்;
அதன் கலப்பு காஃபூராக
(கற்பூரமாக)
இருக்கும்,
76:6. (காஃபூர்)
ஒரு
சுனையாகும்;
அதிலிருந்து அல்லாஹ்வின் நல்லடியார்கள்
அருந்துவார்கள்.
அதை
(அவர்கள்
விரும்பும் இடங்களுக்கெல்லாம்)
ஓடைகளாக ஓடச் செய்வார்கள்.
76:7.
அவர்கள் தாம்
(தங்கள்)
நேர்ச்சைகளை நிறை வேற்றி வந்தார்கள்;
(கியாம)
நாளை அவர்கள் அஞ்சி வந்தார்கள்.
அதன் தீங்கு
(எங்கும்)
பரவியிருக்கும்.
76:8.
மேலும்,
அ(வ்விறை)வன்
மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும்,
அநாதைகளுக்கும்,
சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள்.
76:9. ''உங்களுக்கு
நாங்கள் உணவளிப்பதெல்லாம்,
அல்லாஹ்வின் முகத்திற்காக
(அவன்
திருப்பொருத்தத்திற்காக);
உங்களிடமிருந்து பிரதிபலனையோ
(அல்லது
நீங்கள்)
நன்றி செலுத்த வேண்டுமென்பதையோ நாங்கள்
நாடவில்லை""
(என்று
அவர்கள் கூறுவர்).
76:10. ''எங்கள்
இறைவனிடமிருந்து,
(எங்கள்)
முகங் கடுகடுத்துச் சுண்டிவிடும் நாளை நிச்சயமாக
நாங்கள் பயப்படுகிறோம்""
(என்றும்
கூறுவர்).
76:11.
எனவே,
அல்லாஹ் அந்நாளின் தீங்கை விட்டும் அவர்களைப்
பாதுகாத்து அவர்களுக்கு முகச் செழுமையையும்,
மனமகிழ்வையும் அளிப்பான்.
76:12.
மேலும்,
அவர்கள் பொறுமையுடன் இருந்ததற்காக அவர்களுக்கு
சுவர்க்கச் சோலைகளையும்,
பட்டாடைகளையும் அவன் நற்கூலியாகக் கொடுத்தான்.
76:13.
அவர்கள் அங்குள்ள ஆசனங்களில் சாய்ந்து
(மகிழ்ந்து)
இருப்பார்கள்;
சூரியனையோ,
கடுங் குளிரையோ அதில் அவர்கள் காணமாட்டார்கள்.
76:14.
மேலும்,
அதன்
(மர)
நிழல்கள்,
அவர்கள் மீது நெருங்கியதாக இருக்கும்;
அன்றியும்,
அதன் பழங்கள் மிகத் தாழ்வாகத் தாழ்ந்திருக்கும்.
76:15. (பானங்கள்)
வெள்ளிப் பாத்திரங்களையும்,
பளிங்குக் கிண்ணங்களையும்
(கொண்டு)
அவர்கள் மீது சுற்றிக் கொண்டு வரப்படும்.
76:16. (அவை
பளிங்கல்ல)
வெள்ளியினாலான,
பளிங்கைப் போன்ற தெளிவான கிண்ணங்கள்.
அவற்றைத் தக்க அளவாக அமைந்திருப்பார்கள்.
76:17.
மேலும் அ(ச்சுவர்க்கத்)தில்
ஸன்ஜபீல்
(என்னும்
இஞ்சி)
கலந்த ஒரு கிண்ண(த்தில்
பான)ம்
புகட்டப்படுவார்கள்.
76:18. 'ஸல்ஸபீல்"
என்ற பெயருடைய ஓர் ஊற்றும் அங்கு இருக்கிறது.
76:19.
இன்னும்,
(அந்த
சுவர்க்கவாசிகளைச்)
சுற்றி எப்போதும்
(இளமையோடு)
இருக்கும் சிறுவர்கள்
(சேவை
செய்து)
வருவார்கள்;
அவர்களை நீர் காண்பீரானால் சிதறிய முத்துகளெனவே
அவர்களை நீர் எண்ணுவீர்.
76:20.
அன்றியும்,
(அங்கு)
நீர் பார்த்தீராயின்,
இன்ப பாக்கியங்களையும்,
மாபெரும் அரசாங்கத்தையும் அங்கு காண்பீர்.
76:21.
அவர்களின் மீது ஸ{ன்துஸ{,
இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகள்
இருக்கும்;
இன்னும் அவர்கள் வெள்ளியாலாகிய கடகங்கள்
அணிவிக்கப்பட்டிருப்பர்,
அன்றியும்,
அவர்களுடைய இறைவன் அவர்களுக்குப் பரிசுத்தமான
பானமும் புகட்டுவான்.
76:22. ''நிச்சயமாக
இது உங்களுக்கு நற்கூலியாக இருக்கும்;
உங்களுடைய முயற்சியும் ஏற்றுக்
கொள்ளப்பட்டதாயிற்று""
(என்று
அவர்களிடம் கூறப்படும்).
76:23.
நிச்சயமாக நாம் தான் உம்மீது இந்தக் குர்ஆனை
சிறுகச் சிறுக இறக்கி வைத்தோம்.
76:24.
ஆகவே,
உம்முடைய இறைவனின் கட்டளைக்காகப் பொறுமையுடன்
(எதிர்
பார்த்து)
இருப்பீராக,
அன்றியும்,
அவர்களில் நின்று எந்தப் பாவிக்கோ அல்லது
நன்றியற்றவனுக்கோ நீர் வழிபடாதீர்.
76:25.
காலையிலும்,
மாலையிலும் உம்முடைய இறைவனின் திருநாமத்தை
தஸ்பீஹ{
(துதி)
செய்து கொண்டிருப்பீராக.
76:26.
இன்னும் இரவிலும் அவனுக்கு ஸ{ஜூது
செய்வீராக,
அன்றியும் இரவில் நெடுநேரம் அவனுக்கு தஸ்பீஹ{(துதி)
செய்வீராக.
76:27.
நிச்சயமாக இவர்கள் விரைந்து சென்று விடுவ(தான
இவ்வுலகத்)தையே
நேசிக்கின்றனர்,
அப்பால் பளுவான
(மறுமை)
நாளைத் தங்களுக்குப் பின்னே விட்டு(ப்
புறக்கணித்து)
விடுகின்றனர்.
76:28.
நாமே அவர்களைப் படைத்து அவர்களுடைய அமைப்பையும்
கெட்டிப்படுத்தினோம்;
அன்றியும் நாம் விரும்பினால் அவர்கள்
போன்றவர்களை
(அவர்களுக்குப்
பதிலாக)
மாற்றிக் கொண்டு வருவோம்.
76:29.
நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமாகும்;
எனவே யார் விரும்புகிறாரோ அவர் தம்முடைய இறைவன்
பால்
(செல்லும்)
வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வாராக.
76:30.
எனினும்,
அல்லாஹ் நாடினாலன்றி,
நீங்கள் நாட மாட்டீர்கள்;
நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன்,
ஞானம் மிக்கவன்.
76:31. அவன், தான் விரும்புபவரை தன்னுடைய
ரஹ்மத்தில் புகுத்துகிறான்; அன்றியும்
அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை
அவர்களுக்காகச் சித்தம் செய்து
வைத்திருக்கின்றான்.
|