|
அத்தியாயம்-77
ஸ_ரத்துல்
முர்ஸலாத்
(அனுப்பப்படுபவை)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
77:1.
தொடர்ச்சியாக அனுப்பப்படுபவை
(காற்று)கள்
மீது சத்தியமாக
77:2.
வேகமாக வீசுகிறவை
(புயல்
காற்றுகள்)
மீது
(சத்தியமாக)-
77:3. (மேகங்களைப்)
பரவலாகப் பரப்பும்
(மழைக்
காற்றுகள்)
மீது சத்தியமாக-
77:4. (சத்தியத்தையும்
அசத்தியத்தையும்)
வேறுபடுத்தி காட்டுவோர்
(வானவர்கள்)
மீதும்
(சத்தியமாக)-
77:5. (இதயங்களில்)
உபதேசத்தைப் போடுவோர்
(வானவர்)
மீதும்
(சத்தியமாக)-
77:6. (அந்த
உபதேசம்)
மன்னிப்பையோ,
அல்லது எச்சரிக்கையையோ
(உள்ளடக்கியதாகும்)
77:7.
நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது
நிகழ்வதேயாகும்.
77:8.
இன்னும்,
நட்சத்திரங்கள் அழிக்கப்படும்போது-
77:9.
மேலும்,
வானம் பிளக்கப்படும் போது-
77:10.
அன்றியும்,
மலைகள்
(தூசிகளைப்
போல்)
பறக்கடிக்கப்படும்போது-
77:11.
மேலும்,
தூதர்களுக்கு(த்
தம் சமூகத்தாருக்காகச் சாட்சியம் கூற)
நேரம் குறிக்கப்படும்போது-
77:12.
எந்த நாள்வரை
(இவையெல்லாம்)
பிற்படுத்தப்பட்டிருக்கின்றன?
77:13.
தீர்ப்புக்குரிய நாளுக்காகத்தான்.
77:14.
மேலும்,
தீர்ப்புக்குரிய நாள் என்னவென்று உமக்கு எது
அறிவித்தது?
77:15. (நம்
வசனங்களைப்)
பொய்ப்பிப்போருக்கு அந்நாளில் கேடுதான்.
77:16.
முன்னோர்(களில்
குற்றவாளி)களை
நாம் அழிக்கவில்லையா?
77:17.
பிறகு பின்னுள்ளவர்(களில்
குற்றவாளி)களையும்
(அழிந்தவர்களைப்)
பின் தொடரச் செய்வோம்.
77:18.
குற்றவாளிகளை இவ்வாறுதான் நாம் செய்வோம்
(தண்டிப்போம்).
77:19.
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:20.
அற்ப நீர்த்துளியிலிருந்து உங்களை நாம்
படைக்கவில்லையா?
77:21.
பின்னர் அதனைப் பத்திரமான இடத்தில்
(கர்ப்பத்தில்)
உறுதியாக ஆக்கிவைத்தோம்.
77:22.
ஒரு
குறிப்பிடட
(கால)
அளவு வரை.
77:23.
இவ்வாறு நாமே அதை அமைத்திருக்கின்றோம்.
அமைப்போரில் நாமே மேலானோர்.
77:24.
பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:25.
பூமியை உங்களை அணைத்து
(இடம்
தந்து)க்
கொண்டிருப்பதாக நாம் ஆக்கவில்லையா?
77:26.
உயிருள்ளோருக்கும்,
மரித்தோருக்கும்
(அது
இடம் அளிக்கிறது).
77:27.
அன்றியும்,
அதில் உயர்ந்த மலைகளையும் நாம் ஆக்கினோம்;
இனிமையான தண்ணீரையும் நாம் உங்களுக்குப்
புகட்டினோம்.
77:28.
பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:29. ''நீங்கள்
எதைப் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ,
அதன் பால் நடப்பீர்களாக""
(என்று
அவர்களுக்குக் கூறப்படும்).
77:30.
மூன்று கிளைகளுடைய
(நரகப்
புகை)
நிழலின் பால் நடப்பீர்களாக.
77:31. (அது)
நிழலளிப்பதுமல்ல,
(நரகின்)
கடுந்தழலை விட்டுக் காப்பாற்றுவதுமல்ல.
77:32.
நிச்சயமாக அது பெரிய மாளிகைகளைப் போன்ற
நெருப்புப் பொறிகளைக் கொண்டு வீசி எறிந்து
கொண்டு இருக்கும்.
77:33.
நிச்சயமாக அது மஞ்சள் நிறமுள்ள ஒட்டகைகள் போல்
இருக்கும்.
77:34.
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:35.
இது,
அவர்கள்
(எதுவும்)
பேச
முடியாத நாள்.
77:36.
அன்றியும்
(தப்புவிப்பதற்காகப்)
புகழ் கூறவும் அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
77:37.
பொய்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:38.
இது
தீர்ப்புக்குரிய நாளாகும்.
உங்களையும்,
(உங்களுக்கு)
முன் இருந்தோரையும் நாம் ஒன்று சேர்க்கும்
(நாள்).
77:39.
எனவே,
(தண்டனையிலிருந்து
தப்பித்துக் கொள்ள)
உங்களிடம் சூழ்ச்சியிருக்குமானால்,
சூழ்ச்சி செய்து பாருங்கள்.
77:40.
பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:41.
நிச்சயமாக,
பயபக்தியுடையவர்கள்
(குளிர்)
நிழல்களிலும்,
நீர்ச் சுனைகளிலும் இருப்பார்கள்.
77:42.
இன்னும்,
அவர்கள் விரும்பும் கனிவகைகளும் உண்டு.
77:43. ''நீங்கள்
செய்து கொண்டிருந்த
(நற்)
செயல்களின் காரணமாக,
சிரமமின்றி,
தாராளமாக புசியுங்கள் இன்னும் பருகுங்கள்""
(என்று
கூறப்படும்).
77:44.
நிச்சயமாக,
இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி
கொடுப்போம்.
77:45.
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:46. (பொய்யாக்குவோரே
உலகில்)
இன்னும் கொஞ்ச
(கால)ம்
நீங்கள் புசித்துக் கொண்டும்,
சுகித்துக்கொண்டும் இருங்கள்
-
நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகளே.
77:47.
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:48. 'நீங்கள்
குனிந்து வணங்குங்கள்"
என்று அவர்களிடம் கூறப்பட்டால்,
அவர்கள் குனிந்து வணங்கமாட்டார்கள்.
77:49.
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:50
எனவே,
இதன் பின்னர் எந்த விஷயத்தின் மீதுதான் அவர்கள்
ஈமான் கொள்வார்கள்?
|