|
அத்தியாயம்-78
ஸ_ரத்துந்
நபா
(பெரும்
செய்தி)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
78:1.
எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர்
கேட்டுக்கொள்கின்றனர்?
78:2.
மகத்தான அச்செய்தியைப் பற்றி,
78:3.
எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(ட
கருத்துக்கள் கொண்)டிருக்கிறார்களோ
அதைப் பற்றி,
78:4.
அவ்வாறன்று!
அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.
78:5.
பின்னரும்
(சந்தேகமின்றி)
அவர்கள் விரைவிலேயே அறிந்துகொள்வார்கள்.
78:6.
நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?
78:7.
இன்னும்,
மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?
78:8.
இன்னும் உங்களை ஜோடி ஜோடியாகப் படைத்தோம்.
78:9.
மேலும்,
உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்.
78:10.
அன்றியும்,
இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்.
78:11.
மேலும்,
பகலை உங்கள் வாழ்க்கை
(வசதிகளைத்
தேடிக்கொள்ளும் காலம்)
ஆக்கினோம்.
78:12.
உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம்.
78:13.
ஒளிவீசும் விளக்கை(சூரியனை)யும்
(அங்கு)
அமைத்தோம்.
78:14.
அன்றியும்,
கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும்
இறக்கினோம்.
78:15.
அதைக் கொண்டு தானியங்களையும்,
தாவரங்களையும் நாம் வெளிப்படுத்துவதற்காக.
78:16. (கிளைகளுடன்)
அடர்ந்த சோலைகளையும்
(வெளிப்படுத்துவதற்காக).
78:17.
நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள்,
நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது.
78:18.
ஸ_ர்
(எக்காளம்)
ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக
வருவீர்கள்.
78:19.
இன்னும்,
வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகிவிடும்.
78:20.
மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.
78:21.
நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக்
கொண்டிருக்கின்றது.
78:22.
வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக.
78:23.
அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும்
நிலையில்.
78:24.
அவர்கள் அதில் குளிர்ச்சியையோ,
குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்.
78:25.
கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.
78:26. (அதுதான்
அவர்களுக்குத்)
தக்க கூலியாகும்.
78:27.
நிச்சயமாக அவர்கள் கேள்வி கணக்கில் நம்பிக்கை
கொள்ளாமலேயே இருந்தனர்.
78:28.
அன்றியும் அவர்கள் நம் வசனங்களைப் பொய்யெனக்
கூறி பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள்.
78:29.
நாம் ஒவ்வொரு பொருளையும் பதிவேட்டில் பதிவு
செய்திருக்கின்றோம்.
78:30. ''ஆகவே
சுவையுங்கள்
-
வேதனையைத் தவிர வேறு எதனையும் உங்களுக்கு நாம்
அதிகப் படுத்த மாட்டோம்""
(என்று
அவர்களுக்குக் கூறப்படும்).
78:31.
நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு வெற்றிப்
பாக்கியம் இருக்கிறது.
78:32.
தோட்டங்களும்,
திராட்சைப் பழங்களும்.
78:33.
ஒரே
வயதுள்ள கன்னிகளும்.
78:34.
பானம் நிறைந்த கிண்ணங்களும்,
(இருக்கின்றன).
78:35.
அங்கு அவர்கள் வீணானவற்றையும்,
பொய்ப்பித்தலையும் கேட்கமாட்டார்கள்.
78:36. (இது)
உம்முடைய இறைவனிடமிருந்து
(அளிக்கப்
பெறும்)
கணக்குப் படியான நன்கொடையாகும்.
78:37. (அவனே)
வானங்களுக்கும்,
பூமிக்கும் அவ்விரண்டிற்கும் இடையேயுள்ள
வற்றிற்கும் இறைவன்;
அர்ரஹ்மான்
-
அவனிடம் பேச எவரும் அதிகாரம் பெறமாட்டார்கள்.
78:38.
ரூஹ{
(என்ற
ஜிப்ரயீலு)ம்,
மலக்குகளும் அணியணியாக நிற்கும் நாளில்
அர்ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுகிறானோ
அவர்களைத் தவிர்த்து வேறெவரும் பேசமாட்டார்கள்
-
அ(த்தகைய)வரும்
நேர்மையானதையே கூறுவார்.
78:39.
அந்நாள் சத்தியமானது.
ஆகவே,
எவர் விரும்புகிறாரோ,
அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக்
கொள்வாராக.
78:40.
நிச்சயமாக,
நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு
எச்சரிக்கை செய்கிறோம்
-
மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவற்றை
-
அமல்களை
-
அந்நாளில் கண்டு கொள்வான்
-
மேலும் காஃபிர்
''அந்தோ
கைசேதமே!
நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!""
என்று
(பிரலாபித்துக்)
கூறுவான்.
|