|
அத்தியாயம்-79
ஸ_ரத்துந்
நாஜிஆத்
(பறிப்பவர்கள்)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
79:1. (பாவிகளின்
உயிர்களை)
கடினமாகப் பறிப்பவர்(களான
மலக்கு)கள்
மீது சத்தியமாக-
79:2. (நல்லோர்
உயிர்களை)
இலோசாகக் கழற்றுபவர்(களான
மலக்கு)கள்
மீதும் சத்தியமாக-
79:3.
வேகமாக நீந்திச் செல்பவர்(களான
மலக்கு)கள்
மீதும் சத்தியமாக-
79:4.
முந்தி முந்திச் செல்பவர்(களான
மலக்கு)கள்
மீதும் சத்தியமாக-
79:5.
ஒவ்வொரு காரியத்தையும் நிர்வகிப்பவர்(களான
மலக்கு)கள்
மீதும் சத்தியமாக-
79:6.
பூமி நடுக்கமாக நடுங்கும் அந்நாளில்;
79:7.
அதனைத் தொடரும்
(நில
நடுக்கம்)
தொடர்ந்து வரும்.
79:8.
அந்நாளில் நெஞ்சங்கள் திடுக்கிட்டவையாக
இருக்கும்.
79:9.
அவர்கள் பார்வைகள்
(அச்சத்தால்)
கீழ் நோக்கியிருக்கும்.
79:10. ''நாம்
நிச்சயமாக கப்ருகளிலிருந்து திரும்ப
(எழுப்ப)ப்
படுவோமா?""
என்று கூறுகிறார்கள்.
79:11. ''மக்கிப்
போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?""
79:12. ''அப்படியானால்
அது பெரும் நஷ்ட முண்டாக்கும் திரும்புதலே
யாகும்""
என்றும் கூறுகின்றார்கள்.
79:13.
ஆனால்
(யுக
முடிவுக்கு),
அது
நிச்சயமாக ஒரே ஒரு பயங்கர சப்தம் தான்-
79:14.
அப்போது அவர்கள்
(உயிர்
பெற்றெழுந்து)
ஒரு
திடலில் சேகரமாய் விடுவார்கள்.
79:15. (நபியே!)
மூஸாவின் செய்தி உங்களுக்கு வந்ததா?
79:16. 'துவா"
என்னும் புனித பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன்
அவரை அழைத்து,
79:17. ''நீர்
ஃபிர்அவ்னிடம் செல்லும்,
நிச்சயமாக அவன் வரம்பு மீறி விட்டான்.""
79:18.
இன்னும்
(ஃபிர்அவ்னிடம்;
''பாவங்களை
விட்டும்)
பரிசத்தமாக வேண்டும் என்ற
(விருப்பம்)
உன்னிடம் இருக்கிறதா?""
என்று கேளும்.
79:19. ''அப்படியானால்
இறைவனிடம்
(செல்லும்)
வழியை நான் உனக்குக் காண்பிக்கிறேன்;
அப்போது நீ உள்ளச்சமுடையவன் ஆவாய்""
(எனக்
கூறுமாறு இறைவன் பணித்தான்).
79:20.
ஆகவே,
மூஸா அவனுக்கு பெரும் அத்தாட்சியை காண்பித்தார்.
79:21.
ஆனால்,
அவனோ அதைப் பொய்ப்பித்து,
மாறு செய்தான்.
79:22.
பிறகு அவன்
(அவரை
விட்டுத்)
திரும்பி
(அவருக்கெதிராய்
சதி செய்ய)
முயன்றான்.
79:23.
அன்றியும்
(அவன்
தன் சமூகத்தாரை)
ஒன்று திரட்டி அறிக்கை செய்தான்.
79:24. ''நான்தான்
உங்களுடைய மாபெரும் இறைவன்
-
ரப்புக்குமுல் அஃலா""
என்று
(அவர்களிடம்)
கூறினான்.
79:25.
இம்மைக்கும் மறுமைக்குமான தண்டனையாக அல்லாஹ்
அவனை பிடித்துக் கொண்டான்.
79:26.
நிச்சயமாக இதில் இறையச்சம் கொள்வோருக்கு
படிப்பினை இருக்கிறது.
79:27.
உங்களைப் படைத்தல் கடினமா?
அல்லது வானத்தை
(படைத்தல்
கடினமா?)
அதை
அவனே படைத்தான்.
79:28.
அதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு
படுத்தினான்.
79:29.
அவன்தான் இரவை இருளுடையதாக்கிப் பகலின்
ஒளியையும் வெளியாக்கினான்.
79:30.
இதன் பின்னர்,
அவனே பூமியை விரித்தான்.
79:31.
அதிலிருந்து அதன் தண்ணீரையும்,
அதன் மீதுள்ள
(பிராணிகளுக்கான)
மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான்.
79:32.
அதில்,
மலைகளையும் அவனே நிலை நாட்டினான்.
79:33.
உங்களுக்கும்,
உங்கள் கால் நடைகளுக்கும் பலனளிப்பதற்காக
(இவ்வாறு
செய்துள்ளான்).
79:34.
எனவே
(தடுத்து
நிறுத்த முடியாத மறுமைப்)
பேரமளி வந்து விட்டால்,
79:35.
அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம்
நினைவுபடுத்திக் கொள்வான்.
79:36.
அப்போது பார்ப்போருக்கு(க்
காணும் வகையில்)
நரகம் வெளிப்படுத்தப்படும்.
79:37.
எனவே,
எவன் வரம்பை மீறினானோ
-
79:38.
இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ-
79:39.
அவனுக்கு,
நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.
79:40.
எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும்
இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ,
79,41. நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான்
தங்குமிடமாகும்.
79:42. (நபியே! ''மறுமையின்) நேரத்தைப் பற்றி -
அது எப்போது ஏற்படும்?"" என்று அவர்கள் உம்மைக்
கேட்கிறார்கள்.
79:43. அ(ந்நேரத்)தைப் பற்றி நீர்
குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது?
79:44. அதன் முடிவெல்லாம் உம்முடைய இறைவனிடம்
(அல்லவா) இருக்கிறது.
79:45. அதை பயப்படுவோருக்கு, நிச்சயமாக நீர்
எச்சரிக்கை செய்பவர் தாம்,
79:46. நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில்,
மாலையிலோ, அல்லது காலையிலோ ஒரு சொற்ப
நேரமேயன்றி, அவர்கள் (இவ்வுலகில்)
தங்கியிருக்கவில்லை என்று தோன்றும்.
|