|
அத்தியாயம்-80
ஸ_ரத்து
அபஸ (கடுகடுத்தார்)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
80:1. அவர் கடுகடுத்தார்,
மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.
80:2. அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,
80:3. (நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர்
தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?
80:4. அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு
படுத்திக்கொள்வதன் மூலம்,
(உம்முடைய)
உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம்.
80:5. (உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம்
செய்கிறானோ-
80:6. நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.
80:7. ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன்
தூய்மையடையாமல் போனால்,
உம்
மீது (அதனால் குற்றம்) இல்லை.
80:8. ஆனால்,
எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
80:9. அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-
80:10. அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.
80:11. அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன்
நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.
80:12. எனவே,
எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.
80:13. (அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில்
இருக்கிறது.
80:14. உயர்வாக்கப்பட்டது,
பரிசுத்தமாக்கப்பட்டது.
80:15. (வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-
80:16. (லவ்ஹ{ல்
மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை
மிக்கவர்கள்;
நல்லோர்கள்.
80:17. (நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு
நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!
80:18. எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்?
(என்பதை
அவன் சிந்தித்தானா?)
80:19. (ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப்
படைத்து,
அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.
80:20. பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.
80:21. பின் அவனை மரிக்கச் செய்து,
அவனை கப்ரில்" ஆக்குகிறான்.
80:22. பின்னர்,
அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து)
எழுப்புவான்.
80:23. (இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு)
எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை.
80:24. எனவே,
மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு
பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப்
பார்க்கட்டும்.
80:25. நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச்
செய்கிறோம்.
80:26. பின்,
பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-
80:27. பின் அதிலிருந்து வித்தை
முளைப்பிக்கிறோம்.
80:28. திராட்சைகளையும்,
புற்பூண்டுகளையும்-
80:29. ஒலிவ மரத்தையும்,
போPச்சையையும்
-
80:30. அடர்ந்த தோட்டங்களையும்,
80:31. பழங்களையும்,
தீவனங்களையும்-
80:32. (இவையெல்லாம்) உங்களுக்கும்,
உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,
80:33. ஆகவே,
(யுக
முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ்
சப்தம் வரும் போது -
80:34. அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் -
தன் சகோதரனை விட்டும் -
80:35. தன் தாயை விட்டும்,
தன்
தந்தையை விட்டும்;
80:36. தன் மனைவியை விட்டும்,
தன்
மக்களை விட்டும்-
80:37. அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல)
நிலையே போதுமானதாயிருக்கும்.
80:38. அந்நாளில் சில முகங்கள் இலங்கிக்
கொண்டிருக்கும்.
80:39. சிரித்தவையாகவும்,
மகிழ்வுடையதாகவும் இருக்கும்.
80:40. ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள்,
அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.
80:41. அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.
80:42. அவர்கள்தாம்,
நிராகரித்தவர்கள,;
தீயவர்கள்.
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
|