இந்த பக்கதிற்கு படைப்பாளர்களின் ஆக்கங்களை எதிர்பார்க்கின்றோம்.     -ஆர்-

                                                                     

 
 
 
 





அத்தியாயம்-81

_ரத்துத் தக்வீர் (சுருட்டுதல்)

 

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)

 

81:1. சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது

 

81:2. நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-

 

81:3. மலைகள் பெயர்க்கப்படும் போது-

 

81:4. சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது-

 

81:5. காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது-

 

81:6. கடல்கள் தீ மூட்டப்படும்போது-

 

81:7. உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது-

 

81:8. உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-

 

81:9. ''எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?"" என்று-

 

81:10. பட்டோலைகள் விரிக்கப்படும் போது-

 

81:11. வானம் அகற்றப்படும் போது-

 

81:12. நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது-

 

81:13. சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது-

 

81:14. ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்.

 

81:15. எனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக-

 

81:16. முன் சென்று கொண்டிருப்பவை மறைபவை (மீதும்),

 

81:17. பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதும்,

 

81:18. மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக.

 

81:19. நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரயீல் மூலம் வந்த) சொல்லாகும்.

 

81:20. (அவர்) சக்திமிக்கவர்; அர்ஷ{க்குடையவனிடம் பெரும் பதவியுடையவர்.

 

81:21. (வானவர் தம்) தலைவர்; அன்றியும் நம்பிக்கைக்குரியவர்.

 

81:22. மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர்.

 

81:23. அவர் திட்டமாக அவரை (ஜிப்ரயீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார்.

 

81:24. மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர்.

 

81:25. அன்றியும், இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல.

 

81:26. எனவே, (நேர்வழியை விட்டும்) நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்?

 

81:27. இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும்.

 

81:28. உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்).

 

81:29. ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள்.

 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114

 

 

      super link
 

 
 
 
 

 

 


 
 
e-mail:      allaipiddy73@yahoo.com
                                                Copyright © 2008  www.allaipiddy.com/All rights reserved
                                                            Contract us: e-mail: allaipiddy73@yahoo.com