|
அத்தியாயம்-82
ஸ_ரத்துல்
இன்ஃபிதார்
(வெடித்துப்
போதல்)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
82:1.
வானம் பிளந்து விடும்போது
82:2.
நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-
82:3.
கடல்கள்
(பொங்கி
ஒன்றால் ஒன்று)
அகற்றப்படும் போது,
82:4.
கப்றுகள் திறக்கப்படும் போது,
82:5.
ஒவ்வோர் ஆத்மாவும்,
அது
எதை முற்படுத்தி
(அனுப்பி)
வைத்தது,
எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து
கொள்ளும்.
82:6.
மனிதனே!
கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு
செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது?
82:7.
அவன்தான் உன்னைப்படைத்து,
உன்னை ஒழுங்குபடுத்தி;
உன்னைச் செவ்வையாக்கினான்.
82:8.
எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ
(அதில்
உன் உறுப்புகளைப்)
பொருத்தினான்.
82:9.
இவ்வாறிருந்தும் நீங்கள்
(கியாம)
நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள்.
82:10.
நிச்சயமாக,
உங்கள் மீது பாது காவலர்கள்
(நியமிக்கப்பட்டு)
இருக்கின்றனர்.
82:11. (அவர்கள்)
கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள்.
82:12.
நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.
82:13.
நிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும்
சுவர்க்கத்தில் இருப்பார்கள்.
82:14.
இன்னும்,
நிச்சயமாக,
தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள்.
82:15.
நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில்
பிரவேசிப்பார்கள்.
82:16.
மேலும்,
அவர்கள் அதிலிருந்து
(தப்பித்து)
மறைந்து விட மாட்டார்கள்.
82:17.
நியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு
அறிவிப்பது எது?
82:18.
பின்னும்
-
நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு
அறிவிப்பது எது?
82:19.
அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு
எதுவும் செய்ய சக்தி பெறாது,
அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே.
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
|