|
அத்தியாயம்-83
ஸ_ரத்துல்
முதஃப்ஃபிஃபீன்
(அளவு
நிறுவையில் மோசம் செய்தவன்)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
83:1.
அளவு
(எடையில்)
மோசம் செய்பவர்களுக்கு கேடுதான்.
83:2.
அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும்
போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர்.
83:3.
ஆனால்,
அவர்கள் அளந்தோ,
நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து
நஷ்டமுண்டா)க்குகிறார்கள்.
83:4.
நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை
அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா?
83:5.
மகத்தான ஒரு நாளுக்காக,
83:6.
அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும்
நாள்-
83:7.
ஆகவே,
நிச்சயமாக தீயோர்களின் பதிவேடு ஸிஜ்ஜீனில்
இருக்கிறது
83:8. 'ஸிஜ்ஜீன்"
என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?
83:9.
அது
(செயல்கள்)
எழுதப்பட்ட ஏடாகும்.
83:10.
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
83:11.
அவர்கள் நியாயத் தீர்ப்பு நாளையும்
பொய்ப்பிக்கிறார்கள்.
83:12.
வரம்பு மீறிய,
பெரும் பாவியைத் தவிர வேறெவரும் அதைப்
பொய்ப்பிக்க மாட்டார்.
83:13.
நம்முடைய வசனங்கள் அவனுக்கு ஓதிக்
காண்பிக்கப்பட்டால்,
''அவை
முன்னோர்களின் கட்டுக் கதைகளே""
என்று கூறுகின்றான்.
83:14.
அப்படியல்ல:
அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய
இருதயங்கள் மீது துருவாகப் படிந்து விட்டன.
83:15. (தீர்ப்புக்குரிய)
அந்நாளில் அவர்கள் தங்கள் இறைவனை விட்டும்
திரையிடப்பட்டவர்களாவார்கள்.
83:16.
பின்னர் நிச்சயமாக அவர்கள் நரகில் புகுவார்கள்.
83:17. ''எதை
நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டு இருந்தீர்களோ,
அதுதான் இது""
என்று பின் அவர்களுக்குச் சொல்லப்படும்.
83:18.
நிச்சயமாக நல்லோர்களின் பதிவேடும்
''இல்லிய்யீ""னில்
இருக்கிறது.
83:19. ''இல்லிய்யுன்"
என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?
83:20. (அது)
செயல்கள் எழுதப்பட்ட ஏடாகும்.
83:21. (அல்லாஹ்விடம்)
நெருங்கிய
(கண்ணியம்
மிக்க வான)வர்கள்
அதை பார்ப்பார்கள்.
83:22.
நிச்சயமாக அப்ரார்கள்
(நல்லவர்கள்)
'நயீம்"
என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.
83:23.
ஆசனங்களில் அமர்ந்து
(சுவர்க்கக்
காட்சிகளைப்)
பார்ப்பார்கள்.
83:24.
அவர்களுடைய முகங்களிலிருந்தே
(அவர்களுக்குக்
கிட்டிய)
பாக்கியத்தின் செழுமையை நீர் அறிவீர்.
83:25. (பரிசுத்த)
முத்திரையிடப்பட்ட தெளிவான
(போதையோ,
களங்கமோ அற்ற)
மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள்.
83:26.
அதன் முத்திரை கஸ்தூரியாகும்,
எனவே
(அதற்காக)
ஆர்வம் கொள்பவர்கள்,
(அதைப்
பெற்றுக் கொள்வதற்கான நல்ல அமல்களில்)
ஆர்வம் கொள்ளட்டும்.
83:27.
இன்னும்,
அதனுடைய கலவை தஸ்னீமில் நின்றுள்ளதாகும்.
83:28.
அது
(தஸ்னீம்,
ஓர்
இனிய)
நீர்ச்சுனையாகும்.
அதிலிருந்து
(அல்லாஹ்விடம்
நெருங்கியவர்கள்)
முகர்ரபுகள் அருந்துவார்கள்.
83:29.
நிச்சயமாக,
குற்றமிழைத்தார்களே அவர்கள்,
ஈமான் கொண்டவர்களைப் பார்த்து
(உலகில்)
சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
83:30.
அன்றியும்,
அவர்கள் அண்மையில் சென்றால்,
(ஏளனமாக)
ஒருவருக்கொருவர் கண்சாடை செய்துகொள்வார்கள்.
83:31.
இன்னும் அவர்கள் தம் குடும்பத்தார்பால்
திரும்பிச் சென்றாலும்,
(தாங்கள்
செய்தது பற்றி)
மகிழ்வுடனேயே திரும்பிச் செல்வார்கள்.
83:32.
மேலும் அவர்கள்
(முஃமின்களைப்)
பார்த்தால்,
''நிச்சமயாக
இவர்களே வழி தவறியவர்கள்""
என்றும் கூறுவார்கள்.
83:33. (முஃமின்களின்
மீது)
அவர்கள் பாதுகாவலர்களாக அனுப்பப்படவில்லையே!
83:34.
ஆனால்
(மறுமை)
நாளில் ஈமான் கொண்டவர்கள் காஃபிர்களைப் பார்த்து
சிரிப்பார்கள்.
83:35.
ஆசனங்களில் அமர்ந்து
(அவர்கள்
நிலையைப்)
பார்ப்பார்கள்.
83:36. காஃபிர்களுக்கு, அவர்கள் செய்து
கொண்டிருந்தவற்றுக்கு தக்க கூலி
கொடுக்கப்பட்டதா? (என்றும் கேட்கப்படும்.)
|