|
அத்தியாயம்-84
ஸ_ரத்துல்
இன்ஷிகாக்
(பிளந்து
போதல்)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
84:1.
வானம் பிளந்துவிடும் போது
84:2.
தனது
(இறைவனின்
ஆணைக்கு கட்டுப்படுவது)
கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின்
கட்டளைக்கு
(அந்த
வானம்)
அடிபனியும் போது-
84:3.
இன்னும்,
பூமி விரிக்கப்பட்டு,
84:4.
அது,
தன்னிலுள்ளவற்றை வெளியாக்கி,
அது
காலியாகி விடும் போது-
84:5.
தனது
(இறைவனின்
ஆணைக்கு கட்டுப்படுவது)
கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின்
கட்டளைக்கு
(அந்த
பூமி)
அடிபணியும்போது.
84:6.
மனிதனே!
நிச்சயமாக நீ உன் இறைவனிடம் சேரும் வரை முனைந்து
உழைப்பவனாக உழைக்கின்றாய்
-
பின்னர் அவனைச் சந்திப்பவனாக இருக்கின்றாய்.
84:7.
ஆகவே எவனுடைய பட்டோலை அவனுடைய வலக்கையில்
கொடுக்கப்படுகின்றதோ,
84:8.
அவன் சுலபமான விசாரணையாக விசாரிக்கப்படுவான்.
84:9.
இன்னும்,
தன்னைச் சார்ந்தோரிடமும் மகிழ்வுடன்
திரும்புவான்.
84:10.
ஆனால்,
எவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால்
கொடுக்கப்படுகின்றதோ-
84:11.
அவன்
(தன்குக்)
'கேடு"
தான் எனக் கூவியவனாக-
84:12.
அவன் நரகத்தில் புகுவான்.
84:13.
நிச்சயமாக அவன்
(இம்மையில்)
தன்னைச் சார்ந்தோருடன் மகிழ்வோடு இருந்தான்.
84:14.
நிச்சயமாக,
தான்
(இறைவன்
பால்)
''மீளவே
மாட்டேன்""
என்று எண்ணியிருந்தான்.
84:15.
அப்படியல்ல,
நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனைக் கவனித்து
நோக்குகிறவனாகவே இருந்தான்.
84:16.
இன்னும்,
அந்திச் செவ்வானத்தின் மீது நான் சத்தியம்
செய்கின்றேன்.
84:17.
மேலும்,
இரவின் மீதும்,
அது
ஒன்று சேர்ப்பவற்றின் மீதும்,
84:18.
பூரண சந்திரன் மீதும்
(சத்தியம்
செய்கின்றேன்).
84:19.
நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு
நிச்சயமாக ஏறிப்போவீர்கள்.
84:20.
எனவே,
அவர்களுக்கு என்ன
(நேர்ந்தது?)
அவர்கள் ஈமான் கொள்வதில்லை.
84:21.
மேலும்,
அவர்களிடத்தில் குர்ஆன் ஓதிக்
காண்பிக்கப்பட்டால்,
அவர்கள் ஸ{ஜூது
செய்வதில்லை.
84:22.
அன்றியும் நிராகரிப்பவர்கள் அதைப்
பொய்ப்பிக்கின்றனர்.
84:23.
ஆனால் அல்லாஹ்,
அவர்கள்
(தங்களுக்குள்ளே
சேகரித்து)
மறைத்து வைத்திருப்பவற்றை நன்கு
அறிந்திருக்கின்றான்.
84:24. (நபியே!)
அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு
நன்மாராயங் கூறுவீராக.
84:25.
எவர்கள் ஈமான்கொண்டு,
ஸாலிஹான
(நல்ல)
அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர
-
அவர்களுக்கு முடிவேயில்லாத நற்கூலி உண்டு.
|