இந்த பக்கதிற்கு படைப்பாளர்களின் ஆக்கங்களை எதிர்பார்க்கின்றோம்.     -ஆர்-

                                                                     

 
 
 
 





அத்தியாயம்-85

_ரத்துல் புரூஜ் (கிரகங்கள்)

 

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)

 

85:1. கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக,

 

85:2. இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக,

 

85:3. மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக,

 

85:4. (நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள் கொல்லப்பட்டனர்.

 

85:5. விறகுகள் போட்டு எரித்த பெரும் நெருப்புக் (குண்டம்).

 

85:6. அவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்த போது,

 

85:7. முஃமின்களை அவர்கள் (நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.

 

85:8. (யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை.

 

85:9. வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது, எனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் சாட்சியாக இருக்கிறான்.

 

85:10. நிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.

 

85:11. ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்குச் சுவர்க்கச் சோலைகள் உண்டு, அவற்றின் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும் - அதுவே மாபெரும் பாக்கியமாகும்.

 

85:12. நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது.

 

85:13. நிச்சயமாக, அவனே ஆதியில் உற்பத்தி செய்தான், மேலும் (மரணத்தற்குப் பின்னும்) மீள வைக்கிறான்.

 

85:14. அன்றியும், அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.

 

85:15. (அவனே) அர்ஷ{க்குடையவன் பெருந்தன்மை மிக்கவன்.

 

85:16. தான் விரும்பியவற்றைச் செய்கிறவன்.

 

85:17. (நபியே!) அந்தப் படைகளின் செய்தி உமக்கு வந்ததா,

 

85:18. ஃபிர்அவ்னுடையவும், ஸமூதுடையவும்,

 

85:19. எனினும், நிராகரிப்பவர்கள் பொய்ப்பிப்பதிலேயே இருக்கின்றனர்.

 

85:20. ஆனால், அல்லாஹ்வோ அவர்களை முற்றிலும் சூழ்ந்திருக்கிறான்.

 

85:21. (நிராகரிப்போர் எவ்வளவு முயன்றாலும்) இது பெருமை பொருந்திய குர்ஆனாக இருக்கும்.

 

85:22. (எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹ{ல் மஹ்ஃபூளில் - பதிவாகி பாது காக்கப்பட்டதாக இருக்கிறது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114

 

 

      super link
 

 
 
 
 

 

 


 
 
e-mail:      allaipiddy73@yahoo.com
                                                Copyright © 2008  www.allaipiddy.com/All rights reserved
                                                            Contract us: e-mail: allaipiddy73@yahoo.com