|
அத்தியாயம்-86
ஸ_ரத்துத்
தாரிஃக்
(விடிவெள்ளி)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
86:1.
வானத்தின் மீது சத்தியமாக!
தாரிக் மீதும் சத்தியமாக
86:2.
தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
86:3.
அது
இலங்கும் ஒரு நட்சத்திரம்.
86:4.
ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர்
இல்லாமலில்லை.
86:5.
மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை
கவனிக்கட்டும்.
86:6.
குதித்து வெளிப்படும்
(ஒரு
துளி)
நீரினால் படைக்கப்பட்டான்.
86:7.
முதுகந் தண்டிற்கும்,
விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது
வெளியாகிறது.
86:8.
இறைவன்
(மனிதன்
இறந்த பின் அவனை உயிர்ப்பித்து)
மீட்டும் சக்தியுடையவன்.
86:9.
இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில்.
86:10.
மனிதனுக்கு எந்த பலமும் இராது,
(அவனுக்கு)
உதவி செய்பவனும் இல்லை.
86:11. (திரும்பத்
திரும்பப்)
பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,
86:12. (தாவரங்கள்
முளைப்பதற்குப்)
பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,
86:13.
நிச்சயமாக இது
(குர்ஆன்
சத்தியத்தையும்,
அசத்தியத்தையும்)
பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்.
86:14.
அன்றியும்,
இது
வீணான
(வார்த்தைகளைக்
கொண்ட)து
அல்ல.
86:15.
நிச்சயமாக அவர்கள்
(உமக்கெதிராகச்)
சூழ்ச்சி செய்கிறார்கள்.
86:16.
நானும்
(அவர்களுக்கெதிராகச்)
சூழ்ச்சி செய்கிறேன்.
86:17.
எனவே,
காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக,
சொற்பமாக அவகாசம் அளிப்பீராக.
|