|
அத்தியாயம்-87
ஸ_ரத்துல்
அஃலா
(மிக்க
மேலானவன்)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
87:1. (நபியே!)
மிக்க மேலானவனான உம்முடைய இறைவனின் திருநாமத்தை(த்
தியானித்து)
தஸ்பீஹ{
செய்வீராக.
87:2.
அவனே
(யாவற்றையும்)
படைத்துச் செவ்வையாக்கினான்.
87:3.
மேலும்,
அவனே
(அவற்றுக்கு
வேண்டிய அனைத்தையும்)
அளவுபட நிர்ணயித்து
(அவற்றைப்
பெறுவதற்கு)
நேர்வழி காட்டினான்.
87:4.
அன்றியும் அவனே
(கால்
நடைகளுக்கென)
மேய்ச்சலுக்குரியவற்றையும் வெளியாக்கினான்.
87:5.
பின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக ஆக்கினான்.
87:6. (நபியே!)
நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்;
அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்-
87:7.
அல்லாஹ் நாடியதை அல்லாமல்
-
நிச்சயமாக,
அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும்
அறிகிறான்.
87:8.
அன்றியும்,
இலேசான
(மார்க்கத்)தை
நாம் உமக்கு எளிதாக்குவோம்.
87:9.
ஆகவே,
நல்லுபதேசம் பயனளிக்குமாயின்,
நீர் உபதேசம் செய்வீராக.
87:10. (அல்லாஹ்வுக்கு)
அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான்.
87:11.
ஆனால் துர்பாக்கியமுடையவனோ,
அதை
விட்டு விலகிக் கொள்வான்.
87:12.
அவன் தான் பெரும் நெருப்பில் புகுவான்.
87:13.
பின்னர்,
அதில் அவன் மரிக்கவும் மாட்டான்;
வாழவும் மாட்டான்.
87:14.
தூய்மையடைந்தவன்,
திட்டமாக வெற்றி பெறுகிறான்.
87:15.
மேலும்,
அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக்
கொண்டும்,
தொழுது கொண்டும் இருப்பான்.
87:16.
எனினும்,
நீங்களோ
(மறுமையை
விட்டு விட்டு)
இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக்
கொள்கிறீர்கள்.
87:17.
ஆனால் மறுமை
(வாழ்க்கை)யோ
சிறந்ததாகும்;
என்றும் நிலைத்திருப்பதும் ஆகும்.
87:18. நிச்யசமாக இது முந்திய ஆகமங்களிலும்-
87:19. இப்றாஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும்
(இவ்வாறே அறிவிப்பு) இருக்கிறது.
|