|
அத்தியாயம்-88
ஸ_ரத்துல்
காஷியா
(மூடிக்
கொள்ளுதல்)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
88:1.
சூழந்து மூடிக்கொள்வதின்
(கியாம
நாளின்)
செய்தி உமக்கு வந்ததா?
88:2.
அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்.
88:3.
அவை
(தவறான
காரியங்களை நல்லவை என கருதி)
செயல்பட்டவையும்
(அதிலேயே)
உறுதியாக நின்றவையுமாகும்.
88:4.
கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும்.
88:5.
கொதிக்கும் ஊற்றிலிருந்து,
(அவர்களுக்கு)
நீர் புகட்டப்படும்.
88:6.
அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர,
வேறு உணவில்லை.
88:7.
அது
அவர்களைக் கொழு(த்துச்
செழி)க்கவும்
வைக்காது,
அன்றியும் பசியையும் தணிக்காது.
88:8.
அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும்.
88:9.
தம்
முயற்சி
(நற்பயன்
அடைந்தது)
பற்றி திருப்தியுடன் இருக்கும்.
88:10.
உன்னதமான சுவர்க்கச் சோலையில்-
88:11.
அதில் யாதொரு பயனற்ற சொல்லையும் அவை
செவியுறுவதில்லை.
88:12.
அதில் ஓடிக் கொண்டிருக்கும் நீரூற்று உண்டு.
88:13.
அதில் உயர்ந்த ஆசனங்கள் உண்டு.
88:14. (அருந்தக்)
குவளைகளும் வைக்கப் பட்டிருக்கும்.
88:15.
மேலும்,
அணி
அணியாக்கப்பட்டுள்ள திண்டுகளும்-
88:16.
விரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் உண்டு.
88:17. (நபியே!)
ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா?
அது
எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-
88:18.
மேலும் வானத்தை அது எவ்வாறு
உயர்த்தப்பட்டிருக்கிறது?
என்றும்,
88:19.
இன்னும் மலைகளையும் அவை எப்படி
நாட்டப்பட்டிருக்கின்றன?
என்றும்,
88:20.
இன்னும் பூமி அது எப்படி
விரிக்கப்பட்டிருக்கிறது?
(என்றும்
அவர்கள் கவனிக்க வேண்டாமா?)
88:21.
ஆகவே,
(நபியே!
இவற்றைக் கொண்டு)
நீர் நல்லுபதேசம் செய்வீராக,
நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம்.
88:22.
அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர்.
88:23.
ஆயினும்,
எவன்
(சத்தியத்தைப்)
புறக்கணித்து,
மேலும் நிராகரிக்கின்றானோ-
88:24.
அவனை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையைக் கொண்டு
வேதனைப்படுத்துவான்.
88:25.
நிச்சயமாக,
நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது.
88:26.
பின்னர்,
நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு
கேட்பதும் இருக்கிறது.
|