|
அத்தியாயம்-90
ஸ_ரத்துல்
பலத்
(நகரம்)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
90:1.
இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
90:2.
நீர் இந்நகரத்தில்
(சுதந்திரமாகத்)
தங்கியிருக்கும் நிலையில்,
90:3.
பெற்றோர் மீதும்,
(பெற்ற)
சந்ததியின் மீதும் சத்தியமாக,
90:4.
திடமாக,
நாம் மனிதனைக் கஷ்டத்தில்
(உள்ளவனாகப்)
படைத்தோம்.
90:5. 'ஒருவரும்,
தன்
மீது சக்தி பெறவே மாட்டார்"
என்று அவன் எண்ணிக் கொள்கிறானா?
90:6. ''ஏராளமான
பொருளை நான் அழித்தேன்""
என்று அவன் கூறுகிறான்.
90:7.
தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன்
எண்ணுகிறானா?
90:8.
அவனுக்கு நாம் இரண்டு கண்களை நாம் ஆக்கவில்லையா?
90:9.
மேலும் நாவையும்,
இரண்டு உதடுகளையும்
(ஆக்கவில்லையா)?
90:10.
அன்றியும்
(நன்மை,
தீமையாகிய)
இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.
90:11.
ஆயினும்,
அவன் கணவாயைக் கடக்கவில்லை.
90:12. (நபியே!)
கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது
அறிவிக்கும்.
90:13. (அது)
ஓர்
அடிமையை விடுவித்தல்-
90:14.
அல்லது,
பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும்.
90:15.
உறவினனான ஓர் அநாதைக்கோ,
90:16.
அல்லது
(வறுமை)
மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ
(உணவளிப்பதாகும்).
90:17.
பின்னர்,
ஈமான் கொண்டு,
பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும்,
கிருபையைக் கொண்டு ஒருவருக் கொருவர்
உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும்
(கணவாயைக்
கடத்தல்)
ஆகும்.
90:18.
அத்தகையவர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள்.
90:19.
ஆனால்,
எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ,
அவர்கள் தாம் இடப்பக்கத்தையுடையோர்.
90:20.
அவர்கள் மீது
(எப்பக்கமும்)
மூடப்பட்ட நெருப்பு இருக்கிறது.
|