|
அத்தியாயம்-91
ஸ_ரத்துஷ்
ஷம்ஸ்
(சூரியன்)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
91:1.
சூரியன் மீதும்,
அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக
91:2. (பின்)
அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும்
சத்தியமாக-
91:3. (சூரியனால்)
பகல் வெளியாகும்போது,
அதன் மீதும் சத்தியமாக-
91:4. (அப்பகலை)
மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக-
91:5.
வானத்தின் மீதும்,
அதை(ஒழுங்குற)
அமைந்திருப்பதின் மீதும் சத்தியமாக-
91:6.
பூமியின் மீதும்,
இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-
91:7.
ஆத்மாவின் மீதும்,
அதை
ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-
91:8.
அப்பால்,
அவன்
(அல்லாஹ்)
அதற்கு அதன் தீமையையும்,
அதன் நன்மையையும் உணர்த்தினான்.
91:9.
அதை
(ஆத்மாவை)ப்
பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.
91:10.
ஆனால் எவன் அதை(ப்
பாவத்தில்)
புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.
91:11. 'ஸமூது"
(கூட்டத்தினர்)
தங்கள் அக்கிரமத்தினால்
(ஸாலிஹ்
நபியைப்)
பொய்ப்பித்தனர்.
91:12.
அவர்களில் கேடுகெட்ட ஒருவன் விரைந்து முன்
வந்தபோது,
91:13.
அல்லாஹ்வின் தூதர்
(ஸாலிஹ்)
அவர்களை நோக்கி:
''இப்
பெண் ஒட்டகம் அல்லாஹ்வுடையது,
இது
தண்ணீர் அருந்த(த்
தடை செய்யாது)
விட்டு விடுங்கள்""
என்று கூறினார்.
91:14.
ஆனால்,
அவர்கள் அவரைப் பொய்ப்பித்து,
அதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர்
-
ஆகவே,
அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய
இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி,
அவர்கள் யாவரையும்
(அழித்துச்)
சரியாக்கி விட்டான்.
91:15.
அதன் முடிவைப் பற்றி அவன் பயப்படவில்லை.
|