|
அத்தியாயம்-94
ஸ_ரத்து
அலம் நஷ்ரஹ் (விரிவாக்கல்)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
94:1. நாம்,
உம்
இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா?
94:2. மேலும்,
நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்.
94:3. அது உம் முதுகை முறித்துக்
கொண்டுடிருந்தது.
94:4. மேலும்,
நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச்
செய்தோம்.
94:5. ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம்
இருக்கிறது.
94:6. நிச்சயமாக துன்பத்துடன் இன்பம்
இருக்கிறது.
94:7. எனவே,
(வேலைகளிலிருந்து)
நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும்,
வணக்கத்திலும்) முயல்வீராக.
94:8. மேலும்,
முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து
விடுவீராக.
.
|