இந்த பக்கதிற்கு படைப்பாளர்களின் ஆக்கங்களை எதிர்பார்க்கின்றோம்.     -ஆர்-

                                                                     

 
 
 
 





அத்தியாயம்-95

_ரத்துத் தீன் (அத்தி)

 

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)

 

95:1. அத்தியின் மீதும்இ ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக-

 

95:2. 'ஸினாய்" மலையின் மீதும் சத்தியமாக-

 

95:3. மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக-

 

95:4. திடமாகஇ நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.

 

95:5. பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில்இ மிக்க தாழ்ந்தவனாக்கினோம்.

 

95:6. எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - (நல்லவர்களான) அவர்களுக்கு என்றும் முடிவில்லாத நற்கூலியுண்டு.

 

95:7. எனவே (இதற்குப்) பின்னர்இ நியாயத் தீர்ப்பு நாளைப்பற்றி உம்மிடம் எது பொய்யாக்க முடியும்?

 

95:8. அல்லாஹ் தீர்ப்புச் செய்வோரில் எல்லாம் மிக மேலாகத் தீர்ப்புச் செய்பவனில்லையா?

 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114

 

 

      super link
 

 
 
 
 

 

 


 
 
e-mail:      allaipiddy73@yahoo.com
                                                Copyright © 2008  www.allaipiddy.com/All rights reserved
                                                            Contract us: e-mail: allaipiddy73@yahoo.com