|
அத்தியாயம்-96
ஸ_ரத்துல்
அலஃக்
(இரத்தக்கட்டி)
அளவற்ற
அருளாளனும்
நிகரற்ற
அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின்
திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
96:1. (யாவற்றையும்)
படைத்த
உம்முடைய
இறைவனின்
திருநாமத்தைக்
கொண்டு
ஓதுவீராக.
96:2. 'அலக்"
என்ற
நிலையிலிருந்து
மனிதனை
படைத்தான்.
96:3.
ஓதுவீராக:
உம்
இறைவன்
மாபெரும்
கொடையாளி.
96:4.
அவனே
எழுது
கோலைக்
கொண்டு
கற்றுக்
கொடுத்தான்.
96:5.
மனிதனுக்கு
அவன்
அறியாதவற்றையெல்லாம்
கற்றுக்
கொடுத்தான்.
96:6.
எனினும்
நிச்சயமாக
மனிதன்
வரம்பு
மீறுகிறான்.
96:7.
அவன்
தன்னை
(இறைவனிடமிருந்து)
தேவையற்றவன்
என்று
காணும்
போது,
96:8.
நிச்சயமாக
அவன்
மீளுதல்
உம்முடைய
இறைவன்பாலே
இருக்கிறது.
96:9.
தடை
செய்கிறானே
(அவனை)
நீர்
பார்த்தீரா?
96:10.
ஓர்
அடியாரை
-
அவர்
தொழும்போது,
96:11.
நீர்
பார்த்தீரா?
அவர்
நேர்வழியில்
இருந்து
கொண்டும்,
96:12.
அல்லது
அவர்
பயபக்தியைக்
கொண்டு
ஏவியவாறு
இருந்தும்,
96:13.
அவரை
அவன்
பொய்யாக்கி,
முகத்தைத்
திருப்பிக்
கொண்டான்
என்பதை
நிர்
பார்த்தீரா,
96:14.
நிச்சயமாக
அல்லாஹ்
(அவனைப்)
பார்க்கிறான்
என்பதை
அவன்
அறியவில்லையா?
96:15.
அப்படியல்ல:
அவன்
விலகிக்
கொள்ளவில்லையானால்,
நிச்சயமாக
நாம்
(அவனுடைய)
முன்னெற்றி
ரோமத்தைப்
பிடித்து
அவனை
இழுப்போம்.
96:16.
தவறிழைத்து
பொய்யுரைக்கும்
முன்னெற்றி
ரோமத்தை,
96:17.
ஆகவே,
அவன்
தன்
சபையோரை
அழைக்கட்டும்.
96:18.
நாமும்
நரகக்
காவலாளிகளை
அழைப்போம்.
96:19. (அவன்
கூறுவது
போலல்ல)
அவனுக்கு
நீர்
வழிபடாதீர்;
(உம்
இறைவனுக்கு)
ஸ{ஜூது
செய்து
(வணங்கி
அவனை)
நெருங்குவீராக.
|