|
அத்தியாயம்-99
ஸ_ரத்துஜ்
ஜில்ஜால்
(அதிர்ச்சி)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
99:1.
பூமி பெரும் அதிர்ச்சியாக
-
அதிர்ச்சி அடையும் போது
99:2.
இன்னும்,
பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-
99:3. ''அதற்கு
என்ன நேர்ந்தது?""
என்று மனிதன் கேட்கும் போது-
99:4.
அந்நாளில்,
அது
தன் செய்திகளை அறிவிக்கும்.
99:5. (அவ்வாறு
அறிவிக்குமாறு)
உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறித்ததனால்.
99:6.
அந்நாளில்,
மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும்
பொருட்டு,
பல
பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.
99:7.
எனவே,
எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய
பல)னை
அவர் கண்டு கொள்வார்.
99:8.
அன்றியும்,
எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும்,
அ(தற்குரிய
பல)னையும்
அவன் கண்டு கொள்வான்.
|