|
அத்தியாயம்-1
அலஃபாத்திஹா - தோற்றுவாய்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
1:1.
அனைத்துப்புகழும்அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து
வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான)
அல்லாஹ்வுக்கே ஆகும்.
1:2. (அவன்)
அளவற்ற அருளாளன்
நிகரற்ற அன்புடையோன்.
1:3. (அவனே
நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).
1:4. (இறைவா!)
உன்னையே நாங்கள் வணங்குகிறோம்
உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
1;:5.
நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!
1:6. (அது)
நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.
1:7. (அது)
உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல
நெறி தவறியோர் வழியுமல்ல.
|