எம்மைப்பற்றி
வணக்கம்
அன்பிற்கினிய வாசகப் பெருமக்களே!
தங்கள் அனைவருக்கும் அல்லைப்பிட்டி.கொமின்
இனிய வணக்கங்கள்.
இந்த இணைய தளத்தின் வளர்ச்சிக்கு
தங்களால் முடிந்தவரை உதவுங்கள்.
(உதவி என்பது பணம் என்று பொருள் தராது)
ஆக்கங்கள் அபிப்பிராயங்கள். மற்றும் தொடர்புகளேயாகும்.
சகோதர இணையதள நிர்வாகிகளே!
தங்கள் இணையதளங்களில் வெளியாகும்
அல்லைப்பிட்டி சம்மந்தமான விடயங்களை
எமது இணையதளத்தில் மறுபிரசுரம் செய்வதற்கு
அனுமதி கொடுக்கும்படியும். கொடுத்ததற்கும் எமது
இணைய தளததாரின் இனிய நன்றிகள்.
இந்த அல்லைப்பிட்டி.கொமானது 25/02/2008 அன்று
எமது அல்லைப்பிட்டி எழுத்தாளர் அல்லையூர் சி.விஜயன்
அவர்களால்,
அல்லைபிட்டி மக்களின் இனிய வாழ்வுக்காக உருவாக்கிக்
கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தை அல்லைப்பிட்டி நண்பர்கள் ஒன்றியம்
இயக்கிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் பரந்து செறிந்து வாழும் அல்லைப்பிட்டி வாழ்
தமிழ் மக்களே
இந்த இணைய தளத்தின் ஊடாக ஒரு புதிய வலைப்பின்னலை
உருவாக்கி
அல்லைப்பிட்டி வாழ் மக்களின் இனிய வாழ்வுக்காக
ஒன்றிணைவோம் சேவைசெய்வோம்.
கூட்டுறவே நாட்டுயர்வு
நாட்டுயர்வே நமக்குயர்வு.
தமிழ் தலை
நிமிர்ந்துதான்
நிற்கும்.
தமிழன் தலை
கவிழாத
வரை!
நன்றியுடன்...
அல்லைப்பிட்டி.கொம்
நிர்வாகம்.