அன்புள்ள வாசகர்களே! எமது அல்லைபிட்டி இணையத்தை இப்பொழுது உங்கள் கைத்தொலை பேசியிலும் கண்டு மகிழலாம்... இங்கே அழுத்துங்கள
 
கிறீஸ் மனிதனின் கிலியாட்டம்
பதட்டத்தில் யாழ் மக்கள்

 
[ செவ்வாய்க்கிழமை, 16 ஓகஸ்ட் 2011, 11:44.14 AM GMT ]
 

அக்கரைப்பற்று பிரதேசத்தில் உள்ள கோளாவில் என்னும் இடத்தில் இளம் பெண் ஒருவர் நேற்று மாலை தமது வீட்டு கழிப்பறைக்குள் சென்றபோது அங்கு ஒளிந்திருந்த கிறீஸ் மனிதர்களால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோளாவில் கிராமத்தில் குமார் கடை வீதியிலுள்ள 20 வயதுடைய ஜெகன் சோதிமலர் என்னும் ஒருவயது குழந்தைக்கு தாயான இளம் குடும்பப்பெண்ணே இவ்வாறு கிறீஸ் மனிதனின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்தவராவார்.

இதுபற்றி தெரியவருவதாவது:

நேற்று திங்கட்கிழமை மாலை 3.00 மணியளவில் அவரது வீட்டிலுள்ள மலசல கூடத்திற்கு கறித்த பெண் சென்றபோது மலசல கூடத்திற்குள் மறைந்திருந்த இரு கிறீஸ் மனிதர்கள் அவரை பிடித்து கை, கால்களை கம்பியினால் கட்டி வாயை சலோரேப்பினால் ஒட்டிய போது அருகிலுள்ள வீட்டின் பெண் ஒருவர் கண்டு கூச்சலிட்டதையடுத்து அவர்கள் இருவரும் அங்கிருந்து ஓடித் தப்பியுள்ளனர்.

அவர்களது தாக்குதலினால் அந்த இளம்பெண் காலில் சிறுகாயங்களுடன் மயக்கமடைந்த நிலையில் அக்கரைப்பற்று மாவட்ட மருத்துவமனையில் சோ்க்கப்பட்டார்.

இதனையடுத்து மருத்துவமனையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸார் மீது பொதுமக்கள் கல்வீச்சு தாக்குதலை நடாத்தி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்

அந்தநிலையில் அங்கு வரவழைக்கப்பட்ட இராணுவத்தினர் பொதுமக்கள் மீது தடியடிப் பிரயோகம் செய்து அவ்விட்டதைவிட்டு கலைத்தனர்.

இந்நிலையில் இச்சம்பவத்தினையடுத்து கோளாவில் கிராமத்து மக்கள் பெரும் அச்சமும் பீதியுமடைந்துள்ளனர்.

மேலும் இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,இதே போன்று
யாழ்ப்பாணத்திலும் மற்றும் வன்னியிலும் இக் கொடூரம் நிகழ்வதாகவும்.
பெண்களின் மார்பகங்களை துண்டிக்கும் இச்செயலின் பின்னால் அரசுக்கும் தொடர்பிருக்கலாமென யாழ் வாசிகள் நம்புவதாகவும், இதனால் மக்கள் பீதியில் வாழ்வதாகவும் அல்லைபிட்டி இணையத்தின் யாழ் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

 

முக்கிய செய்திகள்

அறிவித்தல்
அன்பான இணையதள வாசகர்களே!
உங்களிடம் பல மின்னஞ்சல்கள் இருக்கும், என்பதில் ஐயமில்லை.அவை அனைத்தையும்
ஒரே கூரையின் கீழ் கொண்டுவரும் நோக்கில் அல்லைப்பிட்டி.கொம் உருவக்கியிருக்கும் ரூல் பாரைப் Toolbar பயன்படுத்துவதன் மூலமாக,அதிலிருக்கும் மின்னஞ்சலைப் பயன் படுத்தி எத்தனை மின்னஞ்சல் முகவரியை வேண்டுமானாலும் சேமித்து வைக்கலாம்... முயற்சி செய்து பாருங்கள் நண்பர்களே! ஆ-ர்
                  முக்கிய செய்திகள்
பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! அக்கராயன்குளம் பகுதியில் கொடூரம்
கோத்தபாயவின் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே கிறீஸ் மனிதர்கள்! மங்கள குற்றச்சாட்டு
சாவகச்சேரியில் இனந்தெரியாதோர் அச்சுறுத்தல்! பீதியுற்ற முஸ்லிம் மக்கள் பள்ளிவாசலில் தஞ்சம்
ஏறாவூரில் மர்ம மனிதனுக்குப் பயந்து ஓடிய பெண் ரயில் மோதி உயிரிழப்பு
மர்ம மனிதர்கள்: மறைந்திருந்து தாக்கும் மர்மம் என்ன?
 
                                10 Language News
Clash between police officers and area residence in Akkaraipattru ! Politician arrested
 

Massive protest march against the attack of Uthayan Chief Editor

It's difficult to implement 13th amendment : Gunadasa Amarasekara